ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2026

குழந்தையைப் படிப்பில் “நாம் தான் மக்காக ஆக்குகிறோம்” என்றால் அதை ஏற்றுக் கொள்வோமா…?


குழந்தையைப் படிப்பில் “நாம் தான் மக்காக ஆக்குகிறோம்” என்றால் அதை ஏற்றுக் கொள்வோமா…?

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அதிலே சிறிது குறைவாகி விட்டால் நாம் என்ன செய்கிறோம்…?
 
1.எப்பொழுது பார்த்தாலும் படிக்காமல் கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்
2.எதைப் பார்த்தாலும் மறந்து மறந்து போகின்றாய்…! என்று தான் குழந்தையிடம் சொல்கின்றோம்.
 
இந்த உணர்வை ஜாஸ்தி கூட்டிக் கூட்டி நமக்குள் சேர்த்து
1.குழந்தையை அதையே சொல்லிச் சொல்லித் திட்டும் போது என்ன ஆகின்றது…?
2.இப்படி அவனைச் சுத்தமாக மக்காக ஆக்கி விடுவதே நாம் தான்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து என் குழந்தை உடல் முழுவதும் அது படர வேண்டும் சிந்திக்கும் ஆற்றலும் கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் சக்தியும் பெற வேண்டும்…! என்று நாம் எண்ண வேண்டும்.
 
குழந்தையைப் பற்றிப் பாசமாக எண்ணும் பொழுதெல்லாம் அந்த அருள் பெற வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் ந்தக் குழந்தை நிச்சயம் முன்னுக்கு வருவான்.
 
ஆனால் அவனை நினைக்கும் போதெல்லாம்
1.இங்கே போனான் யாரையாவது சொல்கின்றான்… அவர்களுடன் அவன் சுற்றிக் கொண்டேயிருக்கின்றான் என்று
2.இதையே ஞாபகமாக வைத்து அவனை நாம் எண்ணிக் கொண்டிருந்தால்
3.அவன் படிக்கும் நேரத்திலோ பள்ளியில் படிக்கும் போதோ வனுக்கு ஞாபக சக்தி வராது.
4.ஞாபக சக்தி குறைவதற்குத் தாய் தந்தையரே காரணம் ஆகின்றோம்.
 
நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. ஆனால் நாம் பக்குவமான உணர்வைப் பதிவு செய்வதில்லை.
 
நண்பருக்குள் அன்புடன் பண்புடன் உதவி செய்தான் என்று எண்ணி ஏங்கும் பொழுது அது விக்கலாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் துரோகம் செய்தான் பாவி உருப்படுவானா…? என்றால் புரையோடுகின்றது.
 
இதைப் போன்று தான்
1.பாசத்தால் இப்படி இருக்கின்றானே என்று குழந்தையைப் பற்றிக் குறைவான எண்ணங்களைச் செயல்படுத்தும் போது
2.இந்த உணர்வு அவனைத் தாக்கி அவனைச் சிந்தனைற்றவனாகத் தான் மாற்றும்.
 
ஆக… வரும் சந்தர்ப்பங்களை நாம் சீராக அமைக்கவில்லை என்றால் அது நம்மையும் நாம் எண்ணிய எண்ணத்தையும் மாற்றி நமக்குள் பகைமை உணர்வைத் தான் ஊட்டுகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் அல்லவா.
 
ஆகவே அதைத் தூய்மைப்படுத்த இராமாயணத்தில் சுக்ரீவனைக் காட்டுகின்றார்கள். சுக்ரீவன் என்றால் துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி எடுத்துப் பரப்புகின்றது.
 
1.குழந்தையை எண்ணும் பொழுதெல்லாம் அவனைப் பற்றிக் குறையாக எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.“இதை வைத்து நாம் இணைத்துப் பழக வேண்டும்.
 
அந்தத் துருவ துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் பட வேண்டும் என்று நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
இது சிறுகச் சிறுகக் கூட அவனைப் பற்றி நமக்குள் வளர்த்துக் கொண்ட குறையான உணர்வுகளை விலக்கிவிடும்.
 
அவன் நல்லவனாக வேண்டும் நல்ல நிலையாக இருக்க வேண்டும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் அவன் ஒற்றுமையான நிலையில் வாழ வேண்டும். கரிஷிகளின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் இன்று நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.
 
ஆனால் முதலில் சொன்னது போன்று அவன் செய்யக்கூடிய குறும்புத்தனங்களையும் சேஷ்டைகளையும் நாம் நுகரும் பொழுது ஆத்திரமும் கோபம் வருகிறது.
1.அவன் செய்வது நம் உணர்வுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உயிரில் பட்டு வெறுப்பு வருகின்றது.
2.அந்த வெறுப்பு நமக்குள் சென்று இயக்கிடாதபடி ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கொண்டு அதை நாம் தடைப்படுத்த வேண்டும்.
 
ஏனென்றால் அந்த உணர்வின் நாதங்கள் (வெறுப்பு) நமக்குள் எழும்பக்கூடாது. காரணம்… நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை ஆள்கிறது. அரங்கத்தில் எழும் நாதமே இங்கே வருகிறது.
 
1.இந்த உடலான அரங்கத்திற்குள் ஞானிகள் உணர்வுகளை நாதங்களாக
2.அதாவது அதனின் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாத(மய)மாக்க வேண்டும்.