ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2026

தரைகளிலும் மண்ணிலும் இருக்கும்… “ஈர்க்கும் காந்த சக்தியும்… அதனின் இயக்கங்களையும்” அறிதல் வேண்டும்

தரைகளிலும் மண்ணிலும் இருக்கும்… “ஈர்க்கும் காந்த சக்தியும்… அதனின் இயக்கங்களையும்” அறிதல் வேண்டும்


வீட்டில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பார்கள். வீட்டுக்கு முன் முச்சந்தியில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே மிளகாயை வைத்து அந்த மண்ணையும் வைத்துத் தலையைச் சுற்றி அதற்குப் பின் அடுப்பிலே போடுங்கள்.
 
மிளகாயின் நெடி வருகிறதா…? என்று பாருங்கள்.
1.ஏனென்றால் குழந்தை உடலில் அந்தக் கார உணர்வு இருந்தால் அதை இழுத்துக் கொள்ளும்.
2.அதற்கு அந்த இழுக்கக்கூடிய சக்தி இருக்கின்றது குழந்தையின் உடல் நலமாகிவிடும்.
 
இதே போல் வீட்டிலே பெண்கள் கோலம் போடுகின்றார்கள். புள்ளிகளை வைத்து எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இத்தகைய எண்ணங்களை எண்ணி உற்றுப் பார்த்து இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி அந்தக் கோலத்தை ட வேண்டும்.
 
நாம் போடும் அந்தக் கோலப் பவுடரில் மேக்னெட் உண்டு.
 
1.குடும்ப ஒற்றுமைக்காக வேண்டி உயர்ந்த எண்ணங்களை எண்ணி
2.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் சக்தி பெருக வேண்டும் என்றும்
3.எதை எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எண்ணி அந்தக் கோலத்தைப் போட்டுப் பாருங்கள்.
 
இந்த உணர்வு இயக்கச் சக்தியாக மாறும் நமக்குள்ளும் பதிவாகிறது.
 
பக்கத்து வீட்டுக்காரரோ நண்பரோ உங்கள் வீட்டிற்கு வந்து அவர் கஷ்டத்தை எல்லாம் சொல்வார். ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
1.எங்கே உட்கார்ந்து பேசினாரோ அந்த இடத்திலே பதிவாகும் இருவர் உடலிலும் பதிவாகும்.
2.அடுத்து சுழன்று வரும் பொழுது அந்த இடத்திற்கு வந்தால் அந்த வாசனை அறியாமலே இயக்கி
3.ஏதோ சங்கடமாக இருக்கிறது என்று உணர்வுகளைத் தூண்டி அங்கேயே திரும்ப உட்காரும்படிச் செய்யும்.
 
ரோட்டில் நடந்து செல்லும் போது குறைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால் அந்த பாதையிலேயே தான் மீண்டும் செல்வார்கள்.
 
அதே போல் ரோட்டில் சின்னப் பாலங்கள் இருக்கும். அதில் உட்கார்ந்து ஊரில் நடக்கும் குறைகளை எல்லாம் பேசி இருப்பார்கள். ங்கே போனால் ந்தக் குறைகள் வரும். தையெல்லாம் எடுத்து வீட்டுக்குள் வந்தால் இங்கேயும் அந்தக் குறை தான் வளரும்.
 
1.சுவாசிப்பது மனிதனுக்குள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளாக நமக்குள் எப்படி உருமாறுகிறது…?
2.நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மை அறியாமலே சூட்சமத்தில் எப்படி இயக்குகிறது…?
3.இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட்டு நல்ல முறையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான்
4.அருள் உணர்வுகளை உங்களுக்கு உபதேச வாயிலாக ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
5.ஏனென்றால் தனுடைய இயல்புகளையும் விளைவுகளையும் அனுபவித்துச் சொல்கின்றேன்.
 
நான் புத்தகங்களைப் படித்து விட்டு வந்து சொல்லவில்லை.