ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2026

குரு மீது உண்மையான பற்று இருந்தால் தான் குரு உபதேசிப்பது ஆழமாகப் பதிவாகும்

குரு மீது உண்மையான பற்று இருந்தால் தான் குரு உபதேசிப்பது ஆழமாகப் பதிவாகும்


1.ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை மாணவன் கூர்மையாக உற்றுப் பார்த்து அதைத் தனக்குள் பதிவாக்கி
2.ஆசிரியர் மேல் பற்று கொண்ட உணர்வின் தன்மையையும் மாணவன் தனக்குள் திவாக்கினால்
3.ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் மாணவனிடத்தில் பரவி அந்த உணர்வே ஆசிரியராக இருந்து
4.”இது - இவ்வாறு,  இது - இந்த நிலைஎன்பது போன்ற சிந்திக்கும் திறனும் செயலும் அதற்குண்டான உணர்வும் வரும்.
 
இப்படி ஒருவர் கற்றுத் தரும் போதனையைக் கூர்மையாகக் கவனித்து  அதன் உணர்வின் தன்மையை எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது.
 
இதைத் தான் குரு எமக்குக்  காண்பித்து எம்முள் அதைப் பதிவாக்கினார்.
 
உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர் என்ற நிலையில் எமது குருவின் உணர்வின் தன்மையை எமக்குள் பதிவு செய்து கொண்டபின் உலகின் தன்மையையும் கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்றும்  குரு எமக்கு உணர்த்தினார்.
 
1.இப்படி இதன் வழியில் நான் எண்ணும் பொழுது
2.அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள் எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும்
3.அதன் வழி கொண்டு வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.
 
ஆதே போல்
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கி… “பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால்…”
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகி
3.நீங்களும் இதை நுகர்ந்தறிந்து தீமையிலிருந்து விடுபடும் மனிதனாகின்றீர்கள்.
 
ஒருவன் என்னை ஏசுகின்றான்எனக்குத்  தொல்லை கொடுக்கின்றான்என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு தீமை செய்தவனை எண்ணும் பொழுது மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து  நம்மிடத்தில் கை கால் குடைச்சலாகிச் சிந்திக்கும் தன்மை இழந்து கோப உணர்வுகள் வருகின்றது.
 
சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற்பலன் தரவில்லையென்றால் உணர்ச்சியின் தன்மை கூடுகின்றதுகொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது.
 
கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து கடும் நோயாகவும் மாறுகின்றது. ஆக இதுவும் ஆசிரியராக வருகின்றதுகுருவாக வருகின்றது.
 
ஆகவே எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும்.
1.இதை வென்றவர் துருவ மகரிஷி.
2.அவர் கண்டுணர்ந்த உணர்வை நமது குரு கற்றுணர்ந்தார்.
3.குரு ஊட்டிய உணர்வினை யாமும் நுகர்ந்தோம்கண்டறிந்தோம்.
 
குருநாதர் உபதேசித்த அந்தப் பேருண்மைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றோம்.