
கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை
உதாரணமாக…
ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டான் என்றால் அதிலே பொருள் அறிதல் வேண்டும்.
காரணம்… பாசத்தால் அவருடைய துயரைக் கேட்டறிந்தோம்.
கேட்டறிந்த உணர்வுகள் அந்த நோயின் வலிமை நம் நல்ல குணத்தைச்
செயலற்றதாக மாற்றி உடலுக்குள் அதே பலவீனமான நிலைகள் வருகிறது என்று இந்தப் பொருளை நாம் அறிதல் வேண்டும்.
தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் வரப்படும் பொழுது
1.அந்தத் தெய்வ குணத்தைக் காட்டுவதற்காகத் தீப ஆராதனை காட்டப்படுகின்றது.
2.அவ்வாறு காட்டப்படும் பொழுது தெய்வமும்
தெரிகின்றது.
3.தெய்வத்திற்குக் கனி வைத்திருப்பதும் மலர் மாலைகளைச் சூட்டியிருப்பதும்
தெரிய வருகின்றது.
4.தெய்வத்தின் மேல் வைர கிரீடம் வைத்திருப்பதும் தெரிகின்றது.
ஆக… பொருளை அறியக்கூடிய தன்மை அந்த வெளிச்சத்தினால் வருகின்றது.
1.நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அங்கிருக்கும் நல்ல நறுமணங்களும் நல்ல மணங்களும்
பார்க்க அல்லது நுகர முடிகின்றது.
2.ஆனால் வேதனை என்று வந்துவிட்டால் குடும்பத்தில் ஒரு நல்ல பொருளைப் பார்த்துச் சந்தோஷப்படுகின்றோமா…?
3.நல்ல குணம் கொண்ட நம் பையனைப் பார்த்தால் சந்தோஷம் வருகின்றதா…? இல்லை…!
நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ கண் வழி தான் பாய்ச்சுகின்றோம். கண் வழி பாய்ச்சப்படும் பொழுது ஒரு கண்ணாடியில் எந்தக் கலரின்
தன்மை போடுகின்றோமோ அதன் வழி தான் முன்னாடி இருக்கக்கூடிய
பொருள் தெரிய வரும்.
எக்குகுணத்தை எண்ணி எடுக்கின்றோமோ
1.நம் கருவிழிக்குள்
கண்ணாடி என்ற ஒரு பொருள் உண்டு.
2.அந்தந்த உணர்வுக்கொப்பக்
கலர்கள் மாறும்… இந்த உணர்ச்சிகள் மாறும்.
3.அதைப் போன்று தான் நாம் அறிந்திடும் தன்மை
வருகின்றது... இயற்கையின் நியதிகள் இது.
அதாவது எந்தக் குணத்தை
எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க தான் எண்ணங்கள் வருகின்றது.
கோவிலில் தீபாராதனை கொடுக்கப்படும் பொழுது…
1.வீட்டில் நம் பையன் இப்படிச் செய்கின்றானே என்று வேதனைகளை எண்ணினால்
2.இந்த இருள் சூழ்ந்த நிலையே கண் பார்வையில் தெரிய வரும்.
அங்கிருக்கும் பொருளைக் காண முடியுமா…? நல்லதைச்
சொன்னால் கேட்க முடியுமா…? என்றால் முடியாது. அந்த விஷத்தின் தன்மை கரு விழியிலே படப்படும் பொழுது
அழுகையும் வேதனையும் வருகின்றது.
நான் தெய்வத்தை வழிபட்டேனே… எல்லோருக்கும் நன்மை செய்தேனே எனக்கு ஏன் இந்தத்
தொல்லைகள் வருகின்றது…? என்ற இந்த உணர்வு தான் வரும்.
இந்த உணர்வை ஏற்றுக் கொண்ட பின் கருவிழியின் தன்மைகள் அந்தச் சிலையின்
ரூபத்தையோ அங்கே அலங்காரமாகப் போடப்பட்டுள்ள மலர்களையோ
ஆபரணங்களையோ வைரக்கல்களையோ ரசிக்காது... ரசிக்க விடாது. வேதனை என்ற உணர்வே மீண்டும் வரும்.
1.இருளில் நாம் பார்த்தால் பொருளின்
ரூபத்தைக் காண முடியாது…
2.ஒளி கொண்டு தான் பார்க்க முடியும்.
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
ஆலயப் பண்புகளாக
அங்கே வெளிச்சத்தைத் தான் காட்டுகின்றனர்.
அதனால் பொருட்கள் தெரிகின்றது… அப்பொழுது
1.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
2.நாம் சுவாசித்த உணர்வு
கண்ணில் இந்த உணர்ச்சிகள் படப்படும் பொழுது இந்த வெளிச்சத்தின் உணர்வு நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது தெளிந்த மனம்
வருகின்றது.
அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்….?
இந்த ஆலயம் வருபவர்கள் எல்லாம் பொருளறிந்து
செயல்படும் சக்தி பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும்
பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ண வேண்டும்.