ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 15, 2026

முன்னோர்களை விண் செலுத்தும் வீரிய சக்தி

முன்னோர்களை விண் செலுத்தும் வீரிய சக்தி


1.ஈஸ்வரா என்று தன் உயிரை எண்ணி வானை நோக்கி ஏகி அந்த உணர்வின் ஏக்கத் துடிப்பிற்குள் சக்தி வாய்ந்த நிலைகளை உருப்பெறச் செய்து
2.து அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வுகளை ஆழமாகப் பதியச் செய்தான் அன்று அகஸ்தியன்
4.அதைப் பதிவு செய்வதற்கு அந்த நிலைகளைச் செய்தான் அந்த மகரிஷி.
 
அதனை நாம் நினைவு கொண்டு விண்ணை நோக்கிய ஏகிப் பழகி அந்த மகரிஷியின் உணர்வைப் பருகும் நிலைகளுக்கும் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் இந்த நிலைகளை அதை வினையாக சேர்க்கும் தன்மையாக உருவாக்கினார் அகஸ்தியன்.
 
நம்மை ன்று நம்மை வளர்ப்பதற்காக வேண்டித் துன்ப நிலைகளைப் பெற்று எத்தனையோ வீழ்ச்சிகளைக் கண்டு உடலுக்குள் வேதனையாகிச் சிந்தனையற்ற நிலைகள் சீரழிந்து நாம் வாழ்ந்திட நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ இன்னல்கள் பட்டிருப்பார்கள்…! என்று பார்க்கலாம்.
 
தன்னைக் காத்திட நம்மைக் காத்திட அவர் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் விஷமாக நஞ்சாக மாறி அவருடைய நிலைகள் தன் உணர்வின் தன்மை இழக்கச் செய்து உடலை விட்டுச் சென்ற பின் தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப இன்னொரு உடலில் புகுந்திருப்பார்கள்.
 
அந்த உடலில் புகுந்தாலும்…
1.அங்கே தீய விளைவுகளை விளைவிக்காது தடுப்பதற்குத் தன் இனமான இந்த உணர்வின் சக்தி கொண்ட நாம்
2.அவர்களை எண்ணாது மறந்திருந்தாலும் அவர்களை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
3.குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்றும் பிறவா நிலையும் உடல் பெறாத நிலையும்
4.விஷத்தை நீக்கி மெய் வழி காணும் மெய் அருள் பெற்ற மெய் ஞானியின் அருள் வட்டத்தில் சுழன்று அதனின் சக்தியை உணவாக எடுத்துக் கொண்டு
5.என்றுமே ஒளியின் சுடராகச் சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ளி விண்ணிலே செலுத்தினார்கள் அன்று.
 
ன்று விஞ்ஞான நிலைகள் கொண்டு ரிமோட் கண்ட்ரோல் என்று தன் இனமான உணர்வின் லைகளைக் கொண்டு செயற்கைக் கோள்களை விண்ணிலே செலுத்தி இயக்கிக் காட்டுகின்றார்கள்.
 
அதைப் போல உடலை விட்டு முன்னோர்கள் பிரிந்து சென்றாலும் நம்மை வாழ்த்திட்ட வளர்த்திட்ட பார்த்திட்ட காத்திட்ட நம்மை வளர்த்திட்ட இந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்தி “நமக்குள் அந்தப் பதிவு இருக்கின்றது…”
 
அந்தப் பதிவின் நினைவு கொண்டு ஆற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்த்துக் காந்த உணர்வின் அலையைத் தனக்குள் இணையச் செய்து இணைத்த உணர்வின் தன்மை கொண்டு
1.மூதாதையர்கள் உயிருடன் இருக்கும் அந்த சூட்சம சரீரத்தை தன் உணர்வுடன் இணைக்கப்பட்டு
2.இதனுடைய கண்ட்ரோல்படி அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் அவர்களைச் சுழலச் செய்து
3.இருளை மாய்த்து விஷத்தை முறித்துவிஷத்தை அடக்கிடும் ஒளியாக மாற்றிடும் இந்த உணர்வின் சக்தி பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏகி
4.இந்த உணர்வின் சக்தியைப் பரப்பும் நிலைகளுக்கு அன்று செய்தான்  அகஸ்தியன்.
 
இதை எல்லாம் தெளிவுற உணர்த்தினார்கள் அன்று மகரிஷிகள்.