ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2026

இணைக்கும் சக்தியான வியாழன்

இணைக்கும் சக்தியான வியாழன்


சூரியனுக்கு உபகோள்கள் எத்தனை இருக்கின்றது…? வியாழன் செவ்வாய் புதன் பூமி சந்திரன் சனி கேது ராகு என்று எல்லாம் இருக்கின்றது.
 
நம் உடலிலும் இதே மாதிரித் தான்.
 
1.கேது என்று சொன்னால் பித்த சுரப்பி
2.ராகு என்கிற பொழுது உடலின் மேல் தோல் பகுதி.
3.உயிரின் இழுக்கக்கூடிய பாகம் குரு... எல்லாவற்றையும் எடுத்து சமைக்கக் கூடியது.
 
அந்த உணர்வின் தன்மை வந்தவுடன் இரத்தத்தில் கலந்து எதை எதற்கு மாற்ற வேண்டுமோ மாற்றுகின்றது. கடைசியில் உடலில் சுற்றி வந்த பிற்பாடு என்ன செய்கிறது…?
 
1.உயிரைப் போலவே உணர்வின் தன்மை
2.இந்த உடலைப் போலவே உணர்வின் தன்மை என்ற இரண்டு நிலைக்கு வருகின்றது.
 
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி இயக்குகின்றதோ நம் உயிர் எடுத்துக் கொண்ட உடலுக்குத் தக்க மாதிரி றுப்புகளாக மாறுகின்றது.
 
மனிதனான பின் தீமைகளைச் சமப்படுத்தும் சக்தியாக நஞ்சை மலமாக மாற்றும் தன்மை வருவதால் பரசுராமன் ஆகி பலருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம்மை அறியாமலே பிறருடைய கஷ்டமெல்லாம் இரத்தத்திலே வந்து விடுகின்றது. அது சேராதபடி தடுக்க வேண்டும்.
 
து தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளந்தான். தீமைகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.
 
நமக்குத் துரோகம் செய்பவன் அமெரிக்காவில் இருந்தாலும் இடைஞ்சல் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கே புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் அங்கே விக்கலாகிறது. பாசத்தால் என்ன ஆனதோ என்று வேதனைப்பட்டால் அங்கே சிந்தனையைக் குறைக்கின்றது.
 
எந்தெந்த வகையில் நாம் எடுத்து இப்படிப் பதிவாக்குகின்றோமோ நமக்குள் இந்த உயிர் இயக்குகின்றான்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று முதலில் உள்ளே செலுத்துகின்றோம்.
1.ரத்தத்தில் கலந்து வெளியே வரும் பொழுது உள்ளே சுற்றும்.
2.உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி அதிலேமுக்கி விடுகின்றோம்
3.அந்த வேதனையான உணர்வை இங்கே தடைப்படுத்துகின்றது உந்தித் தள்ளுகின்றது.
4.தள்ளியவுடன் வேதனையை இழுக்கும் சக்தி இல்லை என்றால் சூரியன் பிடிப்பில்லாத அந்த உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது
5.நம் ஆன்மாவை அப்பொழுது தூய்மைப்படுத்திக் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.