
போதும் என்ற மனம் வேண்டும்
இந்த மனித
வாழ்க்கையில் நாம் சேமித்த செல்வம் நிற்பதில்லை. உடலும் நிலைப்பதில்லை. நிலையில்லாத இந்த உடலுக்கு நிலை என்ற நிலைகள் கொண்டு தேடிய செல்வத்தைச் சீராகப்
பயன்படுத்தத் தவறினால்
அந்தச் செல்வமே
எதிரியாகின்றது.
சேமித்த செல்வத்தைத் தன்
குழந்தையோ… வெளியில் கொடுத்த பணம் வரவில்லையோ என்றால்
அதன் வழி கொண்டு வேதனையை எடுக்கும் பொழுது
இதுவே எதிரி என்ற உணர்வை உருவாக்கி தேடிய செல்வத்தைக் காக்கும் செயலை இழந்து இந்த உடலின் தன்மை கொண்டு செல்வத்தைச்
சேமித்தாலும் அதனால் வேதனை என்ற உணர்வுகள் நுகர்ந்து இந்த உடலை அழித்திடும்
நிலையே
வருகின்றது.
1.அந்தச் செல்வம்
நம் உடலைக்
காப்பதில்லை…
2.நல்ல
குணங்களையும் அந்தச் செல்வம் காப்பதில்லை.
3.மனிதன்
என்ற நிலையைச் சீர்குலையச் செய்து செல்வத்தால் பேரழிவு வருகின்றது.
செல்வம் தேவை தான். செல்வத்தைத் தேடும் முறையும் வேறு. தேடும் நிலைகளில் இருப்பினும்
1.செல்வம்
போதும் என்ற மனம் நமக்கு இருந்தால் அது நம்மை நாடியே வரும்.
2.ஆனால் தனக்கு அது
வேண்டும் என்ற என்ற நிலை வரும் போது குறைகளைச் செயல்படுத்தத் தான் செய்யும்.
மற்றவர்கள்
பொருளை அறியத் தெரியாது… உண்மையின் உணர்வுகளை அறியத் தெரியாது. தேடும் நிலையில் செல்லும்
போது ஈகையும் நமக்குள் வராது… இரக்கமும் வராது. பண்பு என்ற நிலை அங்கே அழிக்கப்படுகின்றது.
துன்புறுத்தும் நிலையே அங்கே விளைகிறது. ஒதுக்கும் நிலையே வருகிறது.
இந்த உணர்வை நமக்குள்
எடுக்கப்படும் பொழுது செல்வத்தால் நமக்குத் தீமை தான் வருகின்றதே
தவிர நன்மை இல்லை…! செல்வத்தைப்
பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் கடைசியில் வேதனையே
வருகின்றது.
செல்வத்தால்
விஷத்தின் தன்மை உருவாக்கப்பட்டு உடலிலிருந்து அகன்ற
பின் அந்த விஷம்
அதிகரிக்கப்படும் பொழுது சிந்தனை இழக்கப்பட்டு
மனிதனல்லாது உருவை உருவாக்கும் நிலையே
வரும்.
கொடுக்க வேண்டிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்ற நிலையில் அந்த மனிதனுக்குள் உயிரான்மா சென்றாலும்… வேதனைப்படுத்தும் உணர்வுகளைப் பிரித்து
வேதனையையே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி விட்டுத் தேளாகவோ பாம்பாகவோ உருவாக்கி விடுகின்றது உயிர்.
சிந்திக்கும்
செயல் இழந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம்
நாம் விடுபட வேண்டும்.
1.அருள்
செல்வமான அருள் மகரிஷிகள் அருள் சக்திகளை அந்த அழியாச் சொத்தினை
2,ஒவ்வொரு
நொடிப் பொழுதும் இந்த
வாழ்க்கையில் சேர்ப்பதே நம்மைக் காக்கும் பெரும் சொத்தாக சக்தியாக
அமையும்.