
எமது பிரார்த்தனை
1.துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் எப்பொழுதும் பெற வேண்டும்.
2.உங்களை
அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
3.அருள் உணர்வுகள் பெற வேண்டும். உலக ஞானம் பெற வேண்டும்.
4.இந்த
உடலைக் காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று தான் நான் பிரார்த்தனை செய்கின்றேன்.
ஒரு
வெறுப்படைந்த ஒரு உணர்வு எப்படி இயக்குகின்றதோ அதைப்போல அந்த அருள் சக்திகள்
நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும்… சில நேரங்களில்.
அந்த
நேரத்தில் நீங்கள் சுதாரித்து உங்கள் சிந்தனையைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் நன்மையைப் பெறும் சக்தி பெறலாம். ஏதோ ஒரு உற்சாகமாக இருக்கிறது என்று சொல்வீர்கள். அந்த நினைவு வரும் பொழுது
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.
1.சில
நேரங்களில் உங்களுக்கு நல்ல வாசனைகள் வரும். இனம் புரியாத உற்சாகம் வரும்.
2.அன்று
உங்களுக்குச்
சந்தோஷமாக இருக்கும். காரியங்கள்
நல்ல முறையில் செயலாகும்.
உங்களுக்கு
இந்த உயர்ந்த சக்திகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைச்
செய்கின்றேன்.
உங்களுக்கு இதையெல்லாம் பயிற்சியாகக் கொடுத்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய
அணுக்களுக்குக் கண்ணின்
நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெற
பதிவு செய்கின்றோம்.
கண்ணால்
பதிவு செய்யும் பொழுது எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது. நம் கையில் வைத்திருக்கக்கூடிய செல்ஃபோன்களில்
பதிவு செய்த பின் எப்படி அது எல்லாம் மீண்டும் தெரிய
வருகிறதோ அது போல் பதிவாக்கி மீண்டும் நினைவாக்கினால் அந்த உயர்ந்த சக்தி உங்களுக்குக்
கிடைக்கும்.
1.அந்த்த் துருவ நட்சத்திர அலைகளை
உங்களுக்குள் ஈர்க்கும் சக்தி வரும்.
2.உங்கள்
ரத்தத்தில் இந்த சக்திகள் சேர்ந்து தீமையை நீக்கும் அரும்பெரும் சக்தியாக
வளர்கின்றது.
ஆகவே கெட்ட அணுக்கள் உருவாகாதபடி உயர்ந்த சக்திகளை ஜீவன் பெறச்
செய்கின்றோம்.