
தீமையை நுகர்ந்த அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்
நாம் பரிணாம வளர்ச்சியின் கடைசி நிலையில் மனிதனாக
இருக்கின்றோம். நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரக்கூடிய வேதனை உணர்வுகளை
நமக்குள் புகாது தடுத்துப் பழக வேண்டும்.
தடுக்க என்ன செய்ய வேண்டும்…?
அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமானது. அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து
வெளிப்படும் அரும்பெரும் சக்திகளை உங்களுக்குள் உணர்வால் பதிவு
செய்து அதை உங்களைக்
கவரும்படி வைக்கின்றோம்.
திட்டியவர்களையோ
வேதனைப்படுபவர்களையோ உற்று நோக்கி எப்படிக் கவர்ந்து
பதிவு செய்கின்றோமோ அவர்களை எண்ணும் போதெல்லாம் இப்படிப் பேசினார்களே… இப்படி வேதனைப்படுகிறார்களே… என்ற அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.
அந்தத் துருவ
நட்சத்திரம் மனித வாழ்க்கையில் நஞ்சை ஒளியாக மாற்றியது
1.உயிர் ஒளியாக
மாறிய அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருளும் பேரொளியும் பெற
வேண்டும் என்று உங்களுக்குள் பதிவாக்கி
2.அதை ஏங்கச் செய்து
அந்த உணர்வினை ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவாக்கி அதற்கு வேண்டிய
உபாயங்களைச் சொல்கிறோம்
3.அதை
மீண்டும் கவர்ந்தால் தீமையை அகற்றிடும் சக்தியாக வருகின்றது.
வேதனைப்பட்ட
அந்த மனிதனை உற்றுப் பார்த்த பின் கருவிழி ருக்மணி பதிவாக்குகிறது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்ந்து நம்மை நுகரச் செய்யும்போது மூக்கு வழி தான் செல்கின்றது.
1.உயிர்
அதற்கு நேராக இருப்பதால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
என்று
2.புருவ
மத்தியிலே கண்ணின் நினைவு கொண்டு செலுத்தி விடலாம்.
3.அதைத் தான்
சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்
என்று சொல்வது.
நுகரும் உணர்வுகள் கண்ணால்
பார்க்கின்றோம் அதே கண்கள் துணை கொண்டு உயிரில் படும் பொழுது உணர்வின் அறிவாக அறிகின்றோம். இது
அகக்கண்.. அது
புறக்கண்.
கண்ணிலே எதை எண்ணிக் கவர்ந்து
உயிருடன் இணைக்கின்றோமோ இந்தக்
காந்தப்புலன் நாம் எண்ணிய உணர்வை இங்கே பார்த்தது அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது. அவர்
உணர்வினை நாம் கவரப்படும் போது உயிர் வழி இங்கே தடைப்படுத்துகின்றது.
உணர்வின் தன்மை தடைப்பட்ட பின் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் எங்கள்
ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்த வேண்டும்.
1.அந்த
வேதனைப்பட்ட உணர்வுகள் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்திற்கு
வருவதற்கு நேரமாகும்.
2.குறைந்தது
இரண்டு மணி நேரமாவது ஆகும்.
அது
வருவதற்கு முன் அந்தக் கணமே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இங்கே உள்ளே செலுத்த வேண்டும்.
1.வேதனைப்பட்ட
உணர்வு ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவான நிலையில்… அதே போல் திரும்ப
2.துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதற்கு
அருகிலேயே பதிவு செய்யப்படும் போது அந்த உணர்வுகள் தணிகின்றது.
3.தீமை
நீக்கும் சக்தியாக நமக்குள் வலுவாகின்றது.
அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக்
கொடுக்கின்றோம்.