
துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு தீமைகளை அடக்க வேண்டும்
சந்தர்ப்பத்தினால் வீட்டிற்குள் சிறு குறைகள் வந்துவிடும். அது ஏன்…?
என்று சிந்திக்க முடியவில்லை. அதனுடைய பொருளை அறிய விரும்பினால்
1.நமது ஆறாவது
அறிவு கொண்டு சிந்தித்து “சரி ஏதோ சந்தர்ப்பம்…!” என்று விட்டுவிட்டு
2.அடுத்த
சந்தர்ப்பம் வரும் பொழுது சொல்லித் திருத்த முடியும்.
பையன் படிக்க வேண்டுமென்று
விரும்புகின்றோம். மற்ற பையன்களோடு சேர்ந்து விளையாடுகின்றான்… இருள் சூழ்ந்து விடுகின்றது. அவன் எங்கோ சுற்றிக் கொண்டேயுள்ளான் என்ற
உணர்வைச் செலுத்தி வேதனைப்படுத்தும் உணர்வையே நமக்குள்
எடுத்துப் பேசிக் கொண்டேயுள்ளோம்.
நாம் நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு வராமல் ரோட்டில் விளையாடிக்
கொண்டிருந்தால் நாம் எண்ணும் வேதனை உணர்வுகள் அங்கு சென்று அவனைச்
சிந்திக்க விடாது செய்து கீழே விழுந்து அடிபடும் நிலையை உருவாக்கி விடுகின்றது.
சாமி சொன்னார் உபதேசம் நன்றாக இருக்கின்றது. ஆனால் அடுத்தபடியாகப் பையனைப் பார்க்கும் பொழுது “இவ்வாறு
செய்து கொண்டிருக்கின்றானே…!” என்ற உணர்வுகள் தூண்டுகின்றது.
பத்தாவது நிலை அடையக்கூடிய இந்த உயிர் நாம் எண்ணுவதை உருவாக்கி விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை அறிவதற்காக
1.“நாங்கள்
பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும்” என்று
எண்ண வேண்டும்.
2.என் பையன்
பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.எங்கள் குடும்பத்திலுள்ளோர்
அனைவரும் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ண
வேண்டும்.
இது போன்ற சுவையான உணர்வுகளை உங்களுக்குள்
நுகர வேண்டும். நுகர்ந்தால் வசிஷ்டர்
பிரம்மகுரு... பிரம்மகுருவின் மனைவி அருந்ததி. நாம்
நுகர்ந்ததுதான் வசிஷ்டர். அந்தச் சக்தி அவருடன் இணைந்து இயக்குகின்றது என்ற இந்தத்
தத்துவம் தெளிவாகக் கூறப்படுகின்றது.
தங்கத்தைப் போல மனம் மங்காத
நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! ஒருவர் ஒரு குறையைச் சொன்னாலும் நம் மனம் மங்காதபடி “ஏன்” என்று சிந்திக்க வேண்டும். வைரத்தைப் போல எங்கள்
சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
குடும்பத்தில் எத்தனையோ
நிலைகள். மாமியார் ஒன்று சொல்லி விட்டால், நாம் கோபித்துக் கொள்கிறோம். நாம்
கோபித்தால்… நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் நம் மேல் கோபித்துக் கொள்வார்கள். இதைத் துடைக்கின்றோமா…?
இரண்டு பேரும் ஒருவர் மேல்
மற்றொருவர் குறை சொல்லிக் கணவனும் இருவர்
கூறுவதையும் கேட்டுக் கேட்டு அவரும் கோபப்படுகிறார். என் அம்மா இப்படி… என் மனைவி இப்படி…! என்று கோபப்படுகிறார்.
1.இதே கோபத்துடன்
போய்த் தொழில் செய்யும் பொழுது அங்கே தொழிலும் நஷ்டம் அடைகின்றது.
2.கடைசியில் என்ன
ஆகின்றது…? தொழில் செய்யும் இடங்களில் பகைமையாகின்றது.
அதனாலே நல்ல நேரம் கெட்ட நேரம்
எல்லாம் பார்க்கின்றோம். ஜாதகம் ஜோசியம்
பார்த்து சனி உட்கார்ந்திருக்கிறான் என்ற நிலையில்
நாம் சனீஸ்வரனின் கோவிலில் போய் இன்னும் கொஞ்சம் காசைச்
செலவு செய்து விட்டு அதை வளர்த்துக் கொண்டுதான் வருகிறோம்.
எங்கே செல்கிறோம்…? நாம் சனீஸ்வரனின் கோவிலில் போய் யாருக்கோ காசைக் கொடுத்து அவர்கள் சொல்லும் முறைப்படி செய்தால் எல்லாத் தோஷமும் போய்விடும். அங்கிருக்கும் குளத்திலே
குளித்துவிட்டு வந்தால் தோஷம் போய்விடும் என்று நம்புகிறோம்.
ஆனால் அங்கே குளித்துவிட்டு,
மேலும் கொஞ்சம் அழுக்கைச் சேர்த்துக் கொண்டுதான் வருவார்கள். இது போன்ற தவறான
வழிகளில்தான் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். ஆக… நாம் செய்ய வேண்டியது என்ன…?
1.எங்கள்
சொல்லைக் கேட்போர் அனைவரது வாழ்வும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்.
2.என் வாழ்வு
ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடுத்து மலரைப் போன்ற மணம் நாங்கள்
பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்,
எங்கள் குடும்பத்தில் உள்ள அனவரும் அந்த நிலை பெற வேண்டும்.
ஏனென்றால் கணவனும் மனைவியும்
வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது. அதை எளிதாக
எடுத்து நமக்குள் வளர்த்துத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி எண்ணுதல்
வேண்டும்.
இதைத்தான் ஆதிமூலம் என்ற உயிர்… மிருக நிலையிலிருந்து இன்று மனிதனாக
உருவாக்கியது, அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு
நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது… கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா என்று நம் உயிரை
வணங்கச் சொன்னார்கள் ஞானியர்கள்.
நாம் தீமையிலிருந்து நீங்க வேண்டும்
என்பதற்காகக் கணங்களுக்கு அதிபதியாகி உடலில் உள்ள
நஞ்சை மலமாக மாற்றுகின்றது… அங்குசபாசவா, யானை பெரியது ஆனாலும்
அதை அங்குசத்தால் அடக்கிவிடலாம்.
1.அதே போன்று
விஷம் அனைத்திலும் வலிமையானது.
2.அந்த விஷத்தைத் துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அடக்குதல் வேண்டும்.
3.அங்குசபாசவா… தீமைகளை அடக்கும் நிலை.