
யாம் (மறைமுகமாக) உங்களுக்குக் கொடுக்கும் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள்
நாம் என்ற நிலைகளில் தான் பேசுகின்றேனே தவிர
நான் என்ற நிலை எனக்கு இல்லை.
1.நாம் என்ற நிலைகளில் அனைவரும் சேர்ந்தால்தான் இயக்க
முடியும்.
2.காரணம்… சக்தி வாய்ந்த அந்த ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை நாம் அனைவரும் பெற வேண்டும்.
கனமான பொருளைத் தூக்க வேண்டும் என்றால் ஒரு நூலால் முடியாது. பல நூல்களை ஒன்றாகத் திரித்து அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கப்படும்
பொழுது தான் அந்தப் பொருளைத்
தூக்க முடிகின்றது.
அது போன்று நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய
எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை… பிறவா
நிலை அடைந்த அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.
2.அவர்கள் பெற்ற ஆற்றல்கள் நெருப்புக்குச் சமம்… நெருப்பு என்றாலும் பரவாயில்லை…! அதைக் காட்டிலும் வலுக்
கொண்டவர்கள்.
அணுவைப் பிளந்தான். பிளந்து அதனை வெடிக்கச்
செய்யும் பொழுது அது இரும்பு உலோகத்தையும்
அதற்குள்
இருக்கும் இயக்கத்தின் தன்மையும் மற்றதை உருக்கி விட்டுத் தன் அணுவின் தன்மையாக வளர்த்துக் கொள்கின்றது.
அத்தகைய ஆற்றல்மிக்க சக்தி
கொண்டவர்கள் தான் ஞானிகள்.
சாதாரண மனிதர்கள் நாம் வெளிவிடும் எண்ணங்கள்
கொண்டு
1.அத்தகைய ஞானிகள் உணர்வின் அருகிலே இருப்போம் என்றால்
2.அந்த உணர்வுகள் பட்டால் நம் எண்ணங்கள் சுக்குநூறாக ஆகி
3.இந்த உணர்வின் ஒலிக்குள் இருப்பதை அது கவர்ந்து அது தான் வளருமே தவிர
4.அதை நுகர்ந்து நமக்குள் சேர்த்து நமக்குள்
இருளை நீக்கும் சக்தி கிடையாது.
இருந்தாலும் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை உங்களுக்குக் கிடைக்கச்
செய்கிறோம்.
1.ஞானிகளின் பால் உங்கள் நினைவின் தன்மை சிறுகச் சிறுகக் கூட்டி
2.அந்த ஆற்றலைப் பெருக்கும்
நிலைகளுக்கு ஏக்க உணர்வு கொண்டு
3.உங்களுக்குள் விளைந்திடும் விளைந்திட்ட அந்த உணர்வின் எண்ண
அலைகளுக்குள் ஒவ்வொன்றும்
4.ஒவ்வொரு குணத்தால்… ஒவ்வொரு குணத்தின் செயலையும் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது
5.அதிலே ஞானிகள் உணர்வின் நிலைகளைப் பிணைக்கச்
செய்து
6.பிணைத்த உணர்வின் நிலைகள் கொண்டு அதிலேயும் தொட்டுக் காண்பித்து அதைப் பதியச்
செய்து
7.பதிந்த நிலைகளை நீங்கள் எண்ணும் பொழுது அந்த
எண்ணத்தின் தன்மை விளைந்து
8.உங்களுக்குள் விளைந்த தீய உணர்வினைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறனாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
அதைப்
பெறச் செய்வதற்கு… நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் எண்ணங்களை யாம் உங்களுடன் சேர்த்து… நாம் அனைவரும் சேர்த்து ஏக்க உணர்வு கொண்டு அதைக்
கவரப்படும் பொழுது இங்கே
அலைகளாகப் படர்கிறது.
சிறு நிலையாக இருந்தாலும் அந்த வலுவின் தன்மை வரும் பொழுது
1.நம்முடைய எண்ணங்கள் அவரை ஒத்த நிலையாக வரும் அந்த நினைவினை உங்களுக்குள் கூட்டச் செய்து…
2.கூட்டிய உணர்வை ஓங்கச் செய்து… இந்த உணர்வின்
அலைகளைப் பெருக்கச் செய்து…
3.இந்த நினைவினைக் கூட்டச் செய்து…
அதை இயக்கும் தன்மையாக தியானத்தை நாம் கொண்டு வந்து
4.வலுக்
கட்டாயமாக நம் எண்ணங்கள் அனைத்தும் சேர்த்து அவர்களை ஒத்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
5.நாம் எத்தனை குணங்கள் கொண்டிருந்தாலும் அதை மறந்து மெய் வழியைப் பெற வேண்டும் என்ற
ஏக்க உணர்ச்சியைக் கூட்டி வளர்த்து
6.கதிரவனின் காந்த அலைகள் கொண்டு காற்றிலே படர்ந்துள்ள ஞானிகள் உணர்வினைக் கவரும்போது
7.அவரவர்களுக்குச் சிறிதளவேனும்… சிறிது பங்கு கிடைக்கும்.
பெரிய மீனை எடுத்தாலும் அதனுடைய பசிக்கு நாம்
சிறுகச் சிறுக
எடுத்து நிறைய நாம் விளைய வைத்தாலும் நம்முடைய உணவுக்கு அது சிறிதளவாவது பெருகும்.
அது போல
1.ஆற்றல்மிக்க சக்தியைக் கவரச்
செய்து உங்களை நுகரச் செய்து உங்களுக்கு அது கிடைக்கச் செய்ய
2.உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கும் பொழுது உங்களுக்கு அந்த வலு
கிடைத்து
3.ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் புகுரச் செய்து ஒவ்வொரு குணத்திலும் ஊடுருவச் செய்து
4.அதை விளையச்
செய்ய இதே தியானத்தை மேற்கொண்டு
5.தீயவை எவை ஆனாலும் அது நினைவில் வராது அருள் உணர்வினைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது பெறச் செய்து
6.இந்த உணர்வின்
தன்மை உங்களுக்குள் விளையச் செய்து உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வைச் சிறுக்கும்படி செய்து
7.அந்த மெய் ஒளியை உங்களுக்குள்
வளர்ச்சி பெறச்
செய்வதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
அதன் வழிப்படி உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனுக்கு எதைக்
கொடுக்கின்றீர்களோ அதை அவன்
படைக்கின்றான் ஆகவே உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.
அனைத்திற்கும் பாத்திரமாகி அனைத்தையும்
அணைத்துக் கொண்டு அது
நினைவு கொண்டு இயக்கும் சக்தியாக நமக்குள் அவன் இருக்கின்றான். அந்த ஞானிகள் உணர்வினை விளைவிக்கும் போது ஈசனுடன் ஒத்த நிலையாக ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்.