ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2026

நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்

நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்


வாழ்க்கையில் சங்கடம் வருகின்றதுசங்கடம் வந்தாலும் பரவாயில்லை…! பின் வேதனையும் வருகின்றது. வேதனை வந்தால் விஷமாக மாறுகிறது சம்பாதித்த பணம் எல்லாம் விரயமாகத் தொடங்குகிறது.
 
பதார்த்தங்களை எல்லாம் சுவையாகச் செய்தாலும் அதிலே சிறிதளவு விஷம் பட்டுவிட்டால் அதனுடைய ருசியை சத்தை எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றதுஅதற்கு வலு கூடி விடுகிறது.
 
ந்த விஷத்தை நாம் மாற்ற வேண்டும் அல்லவா.
 
1.போகர் தன்னுடைய ஏழ்மையிலே எடுத்துக் கொண்டது… ஏக்க உணர்வுக்குள் சிக்கியது உண்மையை அறிய முடிந்தது.
2.அவர் பெற்ற ஒவ்வொரு சக்தியும் அவருடைய சந்தர்ப்பம் தான்.
3.இராமலிங்க அடிகள் சக்தி பெற்றதும் சந்தர்ப்பம் தான்.
4.ந்த ஞானியும் தெரிந்து எடுக்கவில்லை.
 
அந்த ஞானிகளுக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் போன்று தான் உங்களுக்கும் இப்பொழுது ஊட்டுகின்றோம்.
 
ஏதாவது கஷ்டம் என்று வந்து விட்டதா…? அந்தச் சமயத்தில் அதை விட்டுவிட்டு ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தச் சந்தர்ப்பத்தை மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவைக் கூட்டினால் அது மாறும்.
 
சங்கடத்திலேயே இருந்தால் விஷம் கலந்து விட்டால் நல்ல எண்ணம் எது இருந்தாலும் அது அதற்குள் சிக்கிவிடும்.
 
தை நீங்கள் மாற்றை அமைப்பதற்குத்தான்
1.யாம் 12 வருட காலம் காடு மேடெல்லாம் உருட்டி உருட்டி உருட்டி உருட்டி
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி என்ற வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு அதைப் பெற்றது.
 
ஆரம்பத்தில் இதை யாருக்கும் பயன்படுத்தவில்லை. பின் இந்த வாக்கினைக் கொடுத்து அந்தச்த்தினை ஏற்றிக் கொடுக்கும் பொழுது தான் உங்களுக்கு அந்தப் பவர் எடுக்கும். எத்தனையோ வகையான நிலைகளுக்கு அது எடுக்கும்.
 
ஆத்ம சக்தி என்ற அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்த பின்பு தான் எல்லாவற்றையும் அள்ளி வீசுகின்றோம்…” ஞானிகளைப் பற்றி அதிகமாக உங்களுக்கு எடுத்துரைப்பது.
 
1.சில நேரங்களில் உபதேசம் கொடுக்கும் பொழுது அதிலே யாம் சிலதை மறைப்பது உண்டு. எப்படி இருந்தாலும் மறைத்துவிடுவேன்.
2.ஒரு சமயம் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் நிலையே மாறிவிட்டது.
3.ஏதோ சில ரகசியத்தைச் சொல்லி விட்டேன் போல் தெரிகிறது. பேசும் பொழுது தன் நிலை இல்லை.
 
வெஜிடபிள் பிரியாணி போட்டது போன்று பேசுகிறார் என்று என் வாயிலிருந்தே பேச வைக்கிறார் குருநாதர். உபதேசம் சொல்லிக் கடைசியில் முடிக்கப்படும் பொழுது வந்துவிட்டது.
 
என்னென்னமோ சொல்கிறேன்…! அது ரொம்பவும் முக்கியமானது…! அதை மாற்றுவதற்கு என்னென்னமோ போட்டுத் திருப்பி விட்டேன்…!
1.தாராளமாகச் சொல்லலாம் எது வேண்டும் என்றாலும் சொல்லலாம்.
2.ஆனால் இந்த முக்கியத்துவத்தைக் கொண்டு அதைப் பதிவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.