
பிராணாயாமத்தில் உள்ள தத்துவம்
நான் சொல்லக்கூடிய உணர்வுகள் அனைத்தும் உங்கள்
உயிரிலே மோதப்பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நான் பேசிய உணர்வை அந்த இயக்க அணு உங்கள் உயிரிலே மோதிய பின் உமிழ் நீராக மாறுகின்றது.
அது தான்
ஓ…ம் இந்த உணர்வுகள் அனைத்தும் இயக்கப்பட்டு ம்… என்று உமிழ் நீராக மாறுகின்றது. அந்த உமிழ் நீர் சிறுகுடலுக்கு வருகின்றது. ஒரு உயர்ந்த உணர்வுகளைச்
சொல்லும்
பொழுது சிறுகுடலில் உள்ள அணுக்கள்
உற்சாகமடைகின்றது.
சாப்பிட்ட ஆகாரத்தை அப்பொழுது துரிதமாக நல்ல நிலைகளில் ஜீரணிக்கும்
சக்தி கிடைக்கின்றது. அடுத்து பெருங்குடலுக்கு வரும் பொழுது பாம்பைப் போன்று உள்ளுக்குள்
இழுத்து இழுத்து நசுக்கி அது ஜீரணிக்கும்… அதனின் இயக்கம்.
1.ஆகாரத்தை எடுத்து இவ்வாறு நசுக்கும் பொழுது
கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சத்துக்களை (ஆவி) ஃபில்டர் பண்ணும்.
2.ஒரு துணியை வைத்து பிழிந்தால் எப்படியோ… வேக வைத்தால் எப்படி ஆவி வருகின்றதோ
3.பெருங்குடலுக்கு வந்தபின் ஆவியாகிப் பிரித்துச்
சத்தை எடுத்துக் கொள்கின்றது.
4.குடலுடன் சேர்த்த நரம்பு மண்டலங்கள் அதில்
புனல் போன்று உண்டு… அது அந்த ஆவிகளை வடிகட்டிப்
பிரிக்கின்றது.
கரும்புச்சாற்றை எடுத்த பின் பல கெமிக்கல்களைப் போட்டு எத்தனையோ வகைகளில் செயல் முறைப்படுத்தி அதைச் சர்க்கரையாகப் பிரித்து எடுக்கின்றார்கள் அல்லவா…!
இதைப் போன்று புனல் போன்று உள்ள கணையத்தில் மொத்தமாக வருவதை மூன்று விதமாகப் பிரித்து ரத்தத்திற்கு கொழுப்பிற்கு உடல் சத்திற்கு என்று எடுக்கின்றது.
பிரித்ததை
மற்ற பாகங்களுக்கு அனுப்பித் தசைகளுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு ஆகிறது
1.ஆவியாக மாறுகின்றது… அதை எடுக்கின்றது… சாப்பிடுகின்றது
2.அது மலமாகிறது… அந்த
உறுப்புகள் ஆகின்றது.
ஞானிகள் காட்டிய நிலையில்… நம் உயிரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…?
நுகர்ந்த உணர்வுகள் உடலாக எப்படி மாறுகின்றது…? என்று
தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத்
தான் இதைச் சொல்கிறோம்.
அடுத்து கல்லீரலுக்கு வரப்படும் பொழுது அதுவும் வடிகட்டுகிறது.
தண்ணீரில் அதிகமான அழுக்குகள் இருந்தால் விஞ்ஞான முறைப்படி பெரிய கல் சிறிய கற்கள் மணலைப்
போட்டு வடிகட்டி அதை
நல்ல தண்ணீராக மாற்றுகின்றார்கள்.
இதைப் போன்று தான் நாம் உணவாக உட்கொண்ட
ஆகாரத்தில் உள்ள கசடுகளை எல்லாம் கல்லீரல் மாற்றி வடிகட்டி ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது
1.தசைகளில் இருக்கும் திசுக்களுக்கு உணவாகப் போய்ச்
சேருகின்றது.
2.அந்தத்
திசுக்கள் தேனீக்கள்
கூடு கட்டுவது போன்று உறுப்புகளாக
உருவாகின்றது.
மண்ணீரலுக்கு வந்த பின் ரத்தங்கள் வடிகட்டப்படுகிறது. அடுத்து நுரையீரல் பாகம் வருகின்றது. அது பம்ப் பண்ணி எடுக்கின்றது.
இதில் எந்தெந்த உணர்வுகள் கலக்கின்றதோ மூக்கு
வழி காற்றிலிருந்து எடுத்து அதைச் சேர்க்கின்றது.
நல்லதாக இருந்தால் அதே உணர்வாக ஆனபின் அதன் வழி இழுக்கின்றது.
இது இரண்டும் சேர்த்துப் பிராணவாயுவாக நாம் எதை எடுத்தோமோ இந்த
உணர்வின் தன்மை
இயக்கத்திற்கு ஆகின்றது. ஆனால் வேதனை என்ற உணர்வானால் வேதனையின் மூச்சாகி நாமும் சோர்வடைகின்றோம்.
ஓம் உயிரிலே பட்டுப் பிரணவமானாலும் அதற்குத்தக்க இது எப்படி இயக்குகின்றது…? என்பதை நாம் தெரிந்து கொள்வது நல்லது.
1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நுரையீரலுக்கு
வரும் பொழுது ஆவியாகி நீராக மாறி விடுகின்றது… அங்கே நீராகும் பொழுது சளி
கட்டுகின்றது.
2.அடிக்கடி வேதனைகளை எடுத்து அது அங்கே தேங்கி விட்டால் விஷக்கிருமிகள் உண்டாகின்றது…
3.அப்புறம் அரிக்க ஆரம்பிக்கின்றது… சளி உண்டாகிக் கொண்டே இருக்கும்.
4.சளி கட்டிய பின் சுவாசம் சீராக இல்லாதபடி அடைப்பாகித் தடையாகிறது.
5.நாளடைவில் விஷக்கிருமிகள் தேங்கி விட்டால் டிபி நோயாகவும் மாறுகின்றது.
வேதனையான உணர்வுகள் எல்லை கடந்து வெளிப்படுத்துவோரைப் பார்க்கிறோம். கேன்சர் நோயினால் அவதிப்படுவரைப் பார்க்கின்றோம். அது போன்ற நிலைகளை நுகர்ந்து விட்டால்
இங்கே சேர்ந்து
அதுவே கிருமி ஏற்படவும் காரணம் ஆகிறது.
இந்த வாழ்க்கையில் இது போன்ற நிலைகளைக் காணாமல் இருக்க முடியாது. விஷத்தின் வலிமையாகும் பொழுது அந்த விஷத்தை ஒன்று சேர்த்து
உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை
ஆகின்றது.
கேன்சர் என்று சொல்லும் பொழுது அது விஷத்தை
உட்கொள்கின்றது பாம்பு
எப்படி விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல் விஷத் தன்மைகள் ஆனால் ஒரு நோயாளியின்
உடலில் அந்த விஷமானால் அங்கே அத்தகைய அணுவாகிறது.
அந்த மூச்சின் தன்மை படர்ந்து அத்தகைய இயக்க அணுக்களாக உருவாகி விட்டால் நம் உடலுக்குள் வந்து இத்தகைய
நிலையைச் செய்கின்றது.
ஆனால் தவறு செய்யவில்லை. இயற்கையின் மாற்றங்கள்.
கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து அடுத்து நுரையீரலுக்கு வருகின்றது. ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எல்லாம் சுத்தப்படுத்தி
அனுப்புகின்றது. ரத்தத்தில் உள்ள கழிவை நீராக மாற்றுகின்றது.
உப்புச் சத்து
சர்க்கரைச் சத்து வாத நீர் என்ற விஷத்தன்மைகளை கிட்னி சுத்திகரித்து வடிகட்டி நீராக மாற்றி வெளியேற்றுகின்றது. வடிகட்டப்பட்ட சுத்த ரத்தம் இருதயத்திற்கு
வருகின்றது.
இருதயத்திலிருந்து ரத்தம் உடல் முழுவதும்
அனுப்பப்பட்டு உற்சாகப்படுத்தி நல்ல அணுக்களாக மாற்றுகின்றது. ஆனால் வேதனையான உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதைச் சிறுநீரகம் சரியாக இயக்கவில்லை என்றால் உப்புச் சத்து
வந்துவிடும்… சர்க்கரைச் சத்தும் வந்துவிடும்.
1.ரத்தத்தில் அந்தக் கசடுகள் கலந்து இருதயத்திற்கு வரும் பொழுது அது
பலவீனமாகின்றது.
2.சலிப்பு
சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்று வடிகட்ட முடியாதபடி வரும் பொழுது
இருதயத்திலே அடைப்பாகின்றது…
3.உப்புச்
சத்தினால் ரத்தம் உறைகின்றது… நெஞ்சு வலி வருகிறது.
வேதனையும் உற்சாகமும் வரும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள்
அந்த இரண்டுக்கும் எர்த் ஆகும் போது ஒரு விதமான மயக்கம் வருகின்றது.
மயக்கமாகி நீரானால் நுரையீரலில்
உப்புசமாகி எப்படி வேர்க்கின்றதோ இதை போன்று நம் மூளை பாகத்தில் வெப்பமாகி அது ஆவியாக மாறுகின்றது. தலை சிரசிலே இரண்டு மூன்று தோல் பகுதிகள் உண்டு மூளையைப் பாதுகாக்க.
1.அதைக் கடந்து இரண்டாவது
பாகத்தில் வந்த பின் நீராக
வடிகின்றது.
2.ஒரு சிலருக்குச் சிலந்தி பூச்சியாக அங்கே எடுப்பார்கள்… தலைவலி இருக்கும்.
3.அந்த நிலை ஆகிவிட்டால் நச்சு நச்சு என்று தும்மிக் கொண்டிருப்பார்கள்.
4.சில நேரங்களில் எதிர்பாராதபடி மூச்சுத்
திணறலாகக் கூட வந்து விடும்.
ஆனால் தவறு செய்யவில்லை. வேடிக்கையாகப் பார்த்த நிலைகள் இப்படி எல்லாம் உறுப்புகளில்
மாற்றம் ஆகின்றது. இதையெல்லாம் இயக்குவது யார்…? நமது உயிர். நுகர்ந்ததை இயக்குவதும் உடல் ஆக்குவதும் எல்லாவற்றையும் செயலாக்குவது உயிர்தான். அவன் இன்றி அணுவும் அசையாது.
அதனால் தீராத தலைவலியும் வந்து விடுகின்றது
முதல் பாகத்திலே அழுத்தமாகி
இவ்வாறு தேக்கமாகி விட்டால் கல்லீரலிலும் வேர்த்து நீராக மாறி
குடம் குடமாக நீரை வெளியேற்றுவார்கள்.
வாயு மண்டலங்கள் அதிகமாகி அதிகமான விஷத்தன்மையாகி வெப்பமானால் மூட்டுகளில் முழங்காலில் நீர் கோர்க்க
ஆரம்பிக்கும். அங்கே வலி வரும். இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய
உணர்வுகள்.
இப்படி உடலில் மாறிக் கொண்டே வருகின்றது. ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. தவறு செய்பவர்களைப் பார்க்காமல் வேதனைப்படுவோரைப் பார்க்காமல் நாம் இருக்க முடியாது.
ஆனாலும்
1.இதனுடைய இயக்க நிலைகளை நம்மைப் பற்றி நாம்
தெரிந்து கொண்டால்
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகளால்
என்னென்ன விளைவுகள் வருகிறது…?
3.அதிலிருந்து தடுக்கும் உபாயத்தை நீங்கள் பெற வேண்டும்
4.அதைப் பயன்படுத்தும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதையெல்லாம் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.