
தீமையை நீக்கும் ராசி
1.அன்றாட வாழ்க்கையில் நமக்குள் சேரும் நிலைகளை…
பனிரெண்டு மாதங்களிலும்
2.ஒவ்வொரு
மாதத்திற்கு ஒரு தரம் கழிக்கக்கூடிய
நிலையைக்
காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.ஆனால் அதை நாம்
புரிந்து கொள்ளவில்லை.
12 மாதமும் 12 ராசி என்று சொல்வார்கள். 12 விதமாக வருவதை 12 மாதங்களில் வரக்கூடிய தீமைகளை எப்படித் துடைப்பது…? எப்படி ஒன்று சேர்ப்பது…?
என்பதைத்தான் மனிதனுக்குள் ஆறாவது அறிவை ஜாதக
ராசிகளாக இன்று
பார்க்கின்றார்கள்.
இந்த
ராசியைப் பார்த்து
என்ன செய்ய…?
வயலில் வெள்ளாமை நன்கு
வந்தால் ராசி என்று எடுத்துக் கொள்கின்றோம். மனித
உடலில் நல்ல உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டால் உங்களை நல்லவராக மாற்றுகிறது… நல்லவருடன்
சேரப்படும் பொழுது நல்ல ராசி என்று மாற்றிக் கொள்கின்றோம்.
பிட்பாக்கெட்
அடிப்பவருடன் சேர்ந்து கொண்டால் அடுத்து நம்மையும் அந்தத் தவறைச் செய்யச் சொல்லும். நோயாக
இருப்பவரை உற்றுப் பார்த்தோம் என்றால் அந்த ராசி அவன் உடலில் விளைந்த அந்த நோயின் ராசி நம்மையும் நல்லதைப் பெற
விடாது தடுக்கும்.
இதற்கெல்லாம்
வானியல் ராசியைப் பார்த்து என்ன செய்வது…?
ஒவ்வொரு
கோள்களுக்கும் அது ஒவ்வொன்றும் எப்படியோ இதைப்போல் நம் உடலும் ஒரு கோள் தான். ஒரு உடலில் விளைந்த வேதனையான உணர்வைச் சந்திக்கும் போது என்ன செய்கிறது…?
வேதனை அவருக்குள் ராசியாக இருக்கிறது. அவருடன்
சேர்த்து அவன் சொல்லும் கஷ்டத்தை எல்லாம் கேட்டால் அந்த ராசி இங்கே வந்துவிடுகிறது. வீடு
விட்டு வீடு மாறும் பொழுது ராசிகள் இப்படி வருகிறது என்று…!
ஒவ்வொரு
தோஷங்களையும் ஒவ்வொரு நிலைகளையும் மாறி வருவதை…
1.தீமை
செய்வருடன் பழகுவதைக் காட்டிலும் நல்லவருடன் அதிகமாகப் பழகினால்
அந்தத் தீமை குறைகிறது.
2.தத்துவங்களைச்
சொல்லக்கூடிய ஞானிகள் சென்றால் தீமைகளை நீக்கும் உணர்வுகள் வருகிறது…
3.நல்ல
ராசியாக வருகின்றது… நல்லதைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.
நண்பர்களாகப்
பழகுகின்றார்கள். வாழ்க்கையில்
ஒன்றும் முடியவில்லை என்ற நிலையில் அவரிடம் சென்று என் பையன் இப்படிச் செய்கின்றான்… கடன் கொடுத்தேன் இப்படி ஆகிவிட்டது என்று சொல்லப்படும்
பொழுது இந்த உடலில் விளைந்த ராசியைக் கேட்ட உடனே இந்தப் பலனை அந்த
நண்பர் எடுத்துக்
கொள்கின்றார்.
நண்பர் அதிகமாகக் கேட்டால்
இந்த ராசியை எடுத்து
அவருக்குள் வளர்க்கச்
செய்கின்றது.
இப்படித்தான்
வாழ்க்கையில் ராசி பலன்களைச் சொல்கின்றார். நேரம் காலத்தைப் பார்த்து இந்த நேரத்தில் இதைச் செய்யாதே
என்று சொல்கின்றார்கள்.
1.வேதனைப்படுபவரிடம்
இருந்து விலகி விட்டால் உங்களுக்கு நல்லதாகும்…
2.அவரின் வேதனையை எடுக்க வேண்டாம் என்று சொல்லக்கூடியவர் யாருமில்லை.
அந்த
உடலில் வேதனை ராசியாக விளைந்து இருக்கின்றது. அதை எடுத்தால் நமக்கு வேதனை வருகிறது. அதை ஒதுக்கிப் பழக வேண்டும்... நமக்குள் வராது தடுத்துப் பழக
வேண்டும்.
1.அந்த
நேரத்தில் துருவ நட்சத்திரத்தில் விளைந்த ராசியை எடுத்து
2.நம்
உடலுக்குள் பெருக்கித் தீமையான ராசியை நீக்க வேண்டும்.
சந்தர்ப்பம் தான் எல்லாவற்றையும் உருவாக்குகிறது. ஆனால் நம் குருநாதர் காட்டிய
அருள் வழியில் நல்ல சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.