ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 7, 2026

வியாழன் கோளின் சூட்சமம்

வியாழன் கோளின் சூட்சமம்


வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் உணர்வைக் கவருவதற்கு 27 உபகோள்களை வைத்திருக்கிறது. அந்த 27 உபகோள்களும் 27 நட்சத்திரங்களின் சக்தியைக் கவர்ந்து கலவையாகித் தனக்குள் ஒன்றாக இணைக்கும் அந்தச் சக்தியாக மாறுகின்றது.
 
காரணம்
1.வியாழன் கோளின் சுழற்சியின் வேகம் அதிகம்.
2.எதனையும் வெகு தூரத்தில் இருந்து கவரும் சக்தியும் அதிகம்.
 
அது கவர்வதை உபகோள்களாக இருப்பது ஒவ்வொன்றும் அதனதன் தன்மையை வடிகட்டிக்  கொள்கின்றது.
1.அதனதன் பருவத்திற்குத் தக்க சிறிது சிறிதாக உமிழ்த்தி
2.இதை ஒன்றாக இணைத்து அந்த எல்லாவற்றையும் இணைக்கும்
3.எதனுடன் எது சேர்த்தாலும் அந்த அணுக்களை ஒன்று சேர்த்துப் புதுப்புது உருக்களை உருவாக்க
4.இது உபயோகப்படுத்துகின்றது வியாழன் கோள்.
5.அதே சமயத்தில் வியாழன் கோளில் உள்ள உபகோள்களில் ஒன்று இந்தப் பக்கம் சுற்றும் இன்னொன்று வேறு பக்கம் சுற்றும்.
 
விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா அது என்ன…? என்கிற வகையில் இன்றும் ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளார்.
 
வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் சக்தியைக் கவர்ந்து இதற்குள் ஒரு கலவையாகி புது விதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.
 
சனிக்கோள் எப்படித் தனக்குள் உறைனியாக மாற்றுகின்றதோ இதை போல வியாழன் கோளும் தனக்குள் உறைனியாக மாற்றும் சக்தி பெற்றது.
 
இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.எதிர்காலத்தில் நீங்கள் இந்த உண்மைகளை எல்லாம் அறிய வேண்டும். நான் மட்டும் அறிந்தால் பத்தாது.
2.இதில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை நீங்கள் உணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலக இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும். அதற்குத்தான் சொல்கிறேன்…!