
மகாலட்சுமி
ஒரு புதுப் பெண் (மருமகள்)
திருமணம் ஆகி வீட்டிற்கு வந்தாலும்
வீட்டில் உள்ள மாமியார் அந்த வீட்டில் உள்ள நிலையை அது இப்படி இருக்கிறது…? என்று பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
1.அந்தப்
பெண்ணிற்குத் தெரியவில்லை என்றாலும் இந்த ஞானத்தை ஊட்ட
வேண்டும்.
2.இந்தக்
குடும்பம் இப்படி இருக்கின்றது… “நமது குடும்பம்…” என்று நினைக்க வேண்டும் என்று வழிகாட்ட
வேண்டும்.
ஏனென்றால் புதிதாக வரும் பொழுது கூச்சம் இருக்கும்… தனது வீட்டில் இருப்பது
போல் சீராகச் செயல்படுத்தத் தெரியாது. அந்தக் கூச்சத்தினால் ஒரு பொருளையோ டம்ளரையோ கொடுக்கும் போது அதைச் சரியாக வாங்காது கீழே போட்டு விடும்.
அதைப் பார்த்தவுடன் இப்பொழுதே இந்தப் பெண் இவ்வாறு செய்கின்றது… இனி என்ன நடக்குமோ…? என்று மாமியார் இந்த எண்ணத்தை மனதில் பதிவு செய்து கொள்கின்றது.
1.இந்தப்
பதிவு உடலுக்குள் சேர்ந்த பின் பார்வையும் மாறும்.
2.கருவிழி உந்தி அந்த பெண்ணைப் பயப்படச் செய்யும். ஏனென்றால் வெளி வரும் சொல் கடுமையாக இருக்கும்.
3.உற்றுப் பார்க்கும் பொழுது “நம்மை ஏதாவது சொல்லிவிடுவார்களோ…?”
என்று மருமகளுக்குப் பயம்
வந்துவிடும்.
4.மாமியாரின் கடும் சொல் பதிவான பின் அடுத்து இந்தப்
பயம் வரும்.
அதே போல் மருமகள் சமையலில்
அடுப்பிலே ஏதாவது ஒரு பொருளை வைக்கப்படும்
பொழுது கீழே போட்டு விடும்… அல்லது கையைச் சுட்டு விடும். எனக்கு அப்போதே
தெரியும் நீ இப்படித்தான் செய்வாய்
என்று…! மாமியார் உடனே சொல்லும்.
ஆகவே புதுப் பெண் வீட்டிற்குள் வரும் பொழுது அவர்களை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்று மாமியார் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது உன் வீடு… உனக்குப் பொறுப்பு இருக்கின்றது. வீட்டில் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து விட்டோம். நீயும் அவர்களை ஞானமாக வளர்க்க வேண்டும்.
1.நீ தான் எங்களைக் கவனிக்க வேண்டும்… எங்களுக்கு வயதாகி விட்டது… பொறுப்புடன் இருந்து வேலைகளைச் செய்ய வேண்டும்,
2.நாங்கள் எங்கள் பிள்ளைகளைக்
காத்தோம்… அதே போல் அனைவரையும்
காக்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்
3.இந்த வீட்டையும் காக்க வேண்டும் அந்த சக்தி வர
வேண்டும்.
4.நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள்…
ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் நமக்குள் வளர வேண்டும்
5.பெண்ணாக இருக்கின்றோம்… நாம் இப்படித் தான் வழி நடத்த வேண்டும் என்று மாமியார் பக்குவமாகச்
சொன்னால்
6.மருமகளிடம் இருக்கும்
அந்தக் கூச்சம் போய்விடும்.
தன்னுடைய அத்தையைப் பார்க்கும் பொழுது அந்தப் பெண்ணிற்கு பயம் நீங்கிவிடும். வேலைகளைச்
செய்ய அந்தத் துணிவு வரும்…
சீராகவும் செய்ய
முடியும்
ஆனால் ஒரு சில வீடுகளிலே புதுப் பெண் சென்றால் அங்கே எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறது…?
என்பதைப் பார்க்கலாம்.
முதலில் பெண் பார்க்கச் செல்லும் பொழுது “எங்கள் வீட்டிலே இப்படி எல்லாம் செய்வோம்… இருப்போம்…” என்று சொல்வார்கள். ஆனால் பெண்ணோ அவர்கள் வீட்டிலே செல்லமாக
வளர்ந்து இருக்கும்.
புகுந்த வீட்டிற்குள் வரப்படும் பொழுது முதலில் கொஞ்சம் வித்தியாசங்கள் வரும். ஆனால் வித்தியாசம் வரும் பொழுது இந்த வீட்டிலிருக்கும் மாமியார் அதைப் பக்குவப்படுத்த வேண்டும்.
மருமகள்
என்றாலும் தன் மகனை எப்படிப் பார்க்கின்றோமோ… தன் மகளை எப்படி பார்க்கின்றோமோ… அந்த நிலை கொண்டே மாமியார் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு மருமகளாக வருகின்றார்கள். மாமியாரின் கடுமையான உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்தப் பழக்கம் வரும் பொழுது… பின்னாடி அவர்களுக்கு வரக்கூடிய மருமகளையும் “தன்
மாமியார் எப்படித் தன்னை நடத்தினார்களோ… அதே செயலைத்தான் தன் மருமகளுக்கும் செயல்படுத்தும்,..”
1.தாய் என்ற நிலையில் தான் நாம் வளர்க்கின்றோம்
2.ஆனால் அந்தத் தாய்மை என்ற நிலையில் நாம்
எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
காரணம்… இயற்கையில் முதலில்
பெண்பாலாக இருந்து தான் படைப்பின் சக்திகள் வளர்கிறது.
ஆகவே
1.திருமணமாகி வீட்டிற்கு வரும் அந்தப்
பெண்ணை மகாலட்சுமியாக மாற்ற வேண்டும்.
2.சர்வத்தையும் அறிந்திடும் நிலையும் சர்வத்தையும் வளர்த்திடும் நிலைக்குக்
கொண்டு வர வேண்டும்.