
“பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியனைப் போன்று” உலகைக் காக்கும் வல்லவர்களாக நாம் ஆக வேண்டும்
விஞ்ஞான அறிவினால் இன்று தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் அதனால் விளைந்த
நஞ்சு நாட்டையும்
மக்களையும் அழித்து விடும். விஞ்ஞான அறிவு இதைத்தான் இன்று பெருக்கிக்
கொண்டுள்ளது.
அகஸ்தியன் மூடனாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தாய்
தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைப்
பருகி
1.தீமைகளை அகற்றிடும் வல்லமையான நிலைகள்
அவனுக்குள் பெருக்கிக் கொண்டது.
2.இருளான நஞ்சினை அகற்ற இவனுக்குள் ஒளியின் தன்மை
பெருக்கும் நிலைகளை வளர்த்துக் கொண்டது.
3.பூமியின் இயல்பான நிலைகளையும் இதை உருவாக்கும்… மாற்றம் செய்யக் கூடியதும்… அத்தகைய வல்லமை இவனுக்கே உண்டு.
இவன் தான்
உலகின் தன்மையை அன்று
சமப்படுத்தினான்.
பூமி சுழலும் பொழுது துருவப் பகுதி பார்வதி…! விண்வெளியில் இருந்து வரக்கூடிய சக்திகளைக் கவர்கின்றது. துருவப் பகுதியில் வரப்படும் பொழுது அந்தச் சக்தி சிவம் ஆகின்றது.
1.பூமி சுழலும் சக்தி பார்வதி… தன் பார்வையில் பட்ட உணர்வைக்
கவர்ந்த இந்த சக்தி உறைவிடமாக வருகின்றது.
2.அது தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.
சிவன் என்பது பூமி…! அதன் சுழற்சியின் சக்தியால் தனக்குள் கவர்ந்து சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்… கவர்ந்தது சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.
பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்.
கவர்ந்த உணர்வின் தன்மை அணுக்களாகப்
பெருகி சக்தியின் தன்மை பெருகப்படும் பொழுது பூமியின் தன்மை கவிழும் தன்மை வரும்.
திசை மாறி இந்த எடைக்கொப்ப எடையற்ற நிலைகளை மீண்டும் கவர்ந்து
அதனின் உறைத்தன்மையாகி இது கரைய அது வளரும்.
இப்படி…
பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் வருவதிலிருந்து அன்று அகஸ்தியன் இதைக் காத்தான்.
திருமணம் ஆகும் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகரித்து விடும்… பூமி நிலை தடுமாறும். ஆகையினால் சிவன் அகஸ்தியனை நீ தெற்கில் செல்… நீ தெற்கே சென்று இந்தப் பூமியைச்
சமப்படுத்து என்ற எண்ணத்தை இவன் உருவாக்கினான்.
1.அதன் படி அகஸ்தியன் தெற்கே சென்று சமமான பகுதியில்
நின்று
2.பூமி கவரும் சக்திகள் குளிர்ச்சியான நிலைகள் கொண்டு வடக்கிலே உறைந்தாலும்
3.தெற்கிலே நின்று நேர்முகமாக நின்று சூரியனின்
காந்தப் புலனை எடுத்து இந்தப் பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
4.அப்பொழுதுதான் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக்
கரைந்து இந்த பூமியின் தன்மையைச் சமப்படுத்தியது.
சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே செல்லும்படி சொல்லி இந்த உணர்வின் தன்மை தனக்குள் உற்றுப் பார்த்து இந்தப் பூமியைச்
சமப்படுத்து என்று சொன்னது.
மனிதனான இவனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த வெப்ப அலைகளைத் தனக்குள் பரப்பப்படும் பொழுது கவர்ந்து பனிப்பாறைகள்
கடலாக மாற்றியது.
1.அதனால் தான் அகஸ்தியனுக்குக் கமண்டம்
கொடுத்திருப்பார்கள்.. நீர் சக்தி.
2.அந்தக்
காலத்தில் முதல்
மனிதன் அகஸ்தியன் பூமியை இவ்வாறு தான் திருப்பிச் சீராக இயங்கும்படிச் செய்தான்.