
எனது சுயநலம்
தங்கத்திலே
செம்பும் பித்தளையும் வைத்து பற்ற வைத்துத் தான் நகையாகச் செய்கின்றோம். அதற்குப்பின்
அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றி அதைப் புடம் போட்டு நீக்கி விட்டு அதைச் சுத்தத் தங்கமாக்கி மீண்டும் நகை
செய்கின்றோம்.
இதைப் போன்று
1.இந்த
வாழ்க்கையில் கெட்டது எதைப் பார்த்தாலும் அந்த அழுக்குகளை நீக்கிவிட்டு அதைப்
புடம் போட்டு
2.ஞானிகள்
சக்தியை நமக்குள் போட்டு தீய விளைவுகளைப் புடம் போட்டு
3.மனிதனாகப்
பிறந்த நாம் அந்த மகரிஷிகளின் வாழும் எல்லைக்குச் செல்ல
வேண்டும்.
பௌர்ணமி முதலில்
பிரகாசிக்கின்றது. அது போல் மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும்
தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அடுத்து உடலை விட்டுச்
சென்றபின் ஜீவன் போகின்றது… எல்லாம் மறைந்து விடுகின்றது.
அதற்கு பின்
அந்த நிலவிலே சிறிதளவு வெளிச்சம் தெரியும். இந்த உயிரின் தன்மை வரும்
பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கூடிப் பௌர்ணமியாக வரும். இப்படித்தான் நாம் தேய்ந்து தேய்ந்து வளர்ச்சிக்கு வருகின்றோம்.
அது பௌர்ணமி
ஆகி உயிர் ஒளியாக முழுமை பெறக்கூடிய நிலை எப்படி ஆனமோ எல்லாவற்றையும்
தெரிந்து கொண்டோமோ அதை நிலையாக்கு.
1.நிலையான
அவனின் உணர்வை எடு என்பதற்காக வேண்டித்தான் எனது குருநாதர்
இதை எல்லாம் ஞாபகப்படுத்தி
2.எல்லோரும்
அதைப் பெற வேண்டுமென்று எண்ணு… நீ அதுவாகு என்று சொன்னார்.
இது என்
சுயநலம்.
நீங்கள்
எல்லோரும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்…
என்னுடைய சுயநலமாகின்றது…! என் குருநாதர் அப்படித்தான்
சொல்லிக் கொடுத்தார்.
மக்கள் அவர்களை அறியாது வந்த இருள்கள் மாய வேண்டும் மகரிஷிகளின் அருள்
சக்தி அவர்கள் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க
வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகின்றாய்.
ஆகையினால்
1.இந்தச்
சக்தியை உனக்கு நான் கொடுக்கிறேன் என்றால் அவர்களுக்கு இது
கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணு.
2.அவர்கள்
மகிழ்வதைப் பார்த்து நீயும் மகிழ்ச்சியாக இரு.
3.அவர்கள்
சந்தோஷப்படுவதைப் பார்த்து நீயும் சந்தோஷமாக இரு என்ற நிலையைத் தான் சொன்னார்.
இருந்தாலும்… சிலர் திடீரென்று என்னிடம் கேள்வியும் கேட்பார்கள்.
சாமி என்னைக் கோவிக்கின்றாரே… ஏன் என்று…?
காரணம் உங்கள்
கஷ்டம் எனக்குள் வராதபடி நரசிம்ம அவதாரமாக வந்து விடுகின்றது.
1.மகரிஷிகள்
அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணும் பொழுது
2.என்
உடலுக்குள் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வந்து பாய்கின்றது.
3.அப்பொழுது
அந்தச் சக்திகளை நீங்கள் வீரியமாகப் பார்த்தீர்கள்
என்றால் அந்த நல்ல வாசனை வரும்.
4.நீங்கள்
துன்பப்பட்டுச் சொல்லும் வார்த்தை இங்கே வராது.
5.டபார்…! என்று அதைப் பிளந்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஊடுருவும்.
ஆகவே திடீரென்று
யாம் உங்களைக் கோபித்தாலும் இந்த வார்த்தை உங்களுக்குள் போய் உங்கள் துன்ப அலைகளைப்
போக்கிவிடும். இந்த உணர்வுகள் ஊடுருவிய பின் கவலையாகச்
சொல்லக் கூடாது என்ற நினைப்பு வரும்.
அதற்காக
வேண்டித் தான் “இந்த உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக வெளிப்படுத்துவது…”