
அணுகுண்டின் விஷத்தையும் நாம் மாய்க்க முடியும்
அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள்
பதியச் செய்வதற்குத்தான் யாம் இப்போது உபதேசிப்பது. இதைத்
தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றோம்.
1.நீங்கள் கவனமாகக் கேட்டுக்
கொண்டு இருந்தால் போதும்… தெரிந்து ஒன்றும் எடுக்கப்
போவதில்லை.
2.இந்த வித்து உங்களுக்குள்
வளர்ந்து விட்டால் ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணினால்
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள்ளே
வளரத் தொடங்கும்.
உங்களைக் காக்க அந்த
உணர்வுகள் வளரும். அதற்குத்தான் உபதேசிப்பது.
நீங்கள் என்னைப் போல்
காட்டுக்குள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் மிருகங்களுக்குள்ளேயும் சேற்றுக்குள்ளேயும்
கடும் மழையிலேயும் அட்டைக்குள்ளேயும் என்றைக்குப் போய் இதை நீங்கள் கற்றுக்
கொள்வது…? என்றைக்கு நீங்கள் தெரிந்து கொள்வது…? இந்தச்
சத்தை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்வது…?
அதற்கு நேரமும் இல்லை…
காலமும் இல்லை. நீங்கள் சாப்பாட்டிற்குப் பார்ப்பீர்களா…? சக்தியை வளர்ப்பீர்களா…?
1.குருநாதர் எம்மை (ஒருவரை) உருவாக்கினார்… குருநாதர் சொன்னதைச்
செய்தோம்.
2.குருநாதர் எமக்கு எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அதே மாதிரி உங்களை
நீங்கள் காத்துக் கொள்வதற்காக இதைச் சொல்கின்றோம்.
ஆகையினாலே இதை அலட்சியப்படுத்தி
விடாதபடி என்னமோ சாமி விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறார் இதைப் பற்றிச் சொல்கிறார் என்று எண்ணிவிட்டுக் கொஞ்சம் விபூதி
வாங்கிச் சென்றால் தலைவலி போனால் போதும் உடல் வலி போனால் போதும் என்ற நினைப்பிலே
சிலர் இருப்பார்கள்.
யாம் சொல்லும் இந்நிலைகளை எடுத்தால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீங்கள் உங்கள் மூச்சினாலேயே தடுக்க முடியும்.
1.உங்கள் மூச்சின் ஆற்றலை உணர்ந்து கொண்டால்
2.நாளைக்கு வரக்கூடிய எத்தகைய
அணுகுண்டின் விஷத் தன்மையையும் உங்களாலே தடுக்க முடியும்.
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவர் உங்களுக்குக் கெடுதல்
செய்து கொண்டே இருக்கிறார் என்றால் யாம் சொல்கின்ற மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு
உங்கள் எண்ணத்தைப் பாய்ச்சி நாளை அவர் எனக்கு நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணினால்
அவரின் எண்ணங்கள் மாறிவிடும்.
இதே மாதிரி எனக்குக் குழந்தை இல்லை… அது
இல்லை… இது இல்லை…! நீங்கள் நினைத்துக்
கொண்டேயிருக்கிறீர்கள். அதையெல்லாம் நீங்கள் அறவே விட்டுவிடுங்கள்.
1.யாம் சொல்கின்றபடி ஆத்ம சுத்தி
தியானம் செய்து “எனக்குக் குழந்தை உண்டு…!” என்று யாரொருவர் எண்ணினாலும்
2.கண்டிப்பாக அவர்களுக்குக்
குழந்தை பிறக்கும்.
நாளைக்கு அது ஞானக் குழந்தையாக வரும்.
அது எடுக்கும் மூச்சு உங்களைக் காக்க உதவும். அதே சமயத்தில் அந்தக் குழந்தை வளரும்
நிலைகள் கொண்டு நீங்கள் எடுத்துக் கொண்டது விஞ்ஞானத்தில் வரக்கூடிய தீய அலைகளை நம்மை
மயக்கும் நிலையை அந்தத் துடிப்பின் நிலையைத் தடுக்கவும் முடியும்.
1.இது உங்களுக்குப் பரீட்சை… உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்த ஆற்றலைக்
கொடுக்கிறோம்.
2.உங்களைக் காக்க வேண்டுமென்ற
நிலையில் பேரண்டத்தின் சில சத்துகளை எடுத்துத் தியானித்து உங்களுக்குப் பாய்ச்சுகின்றோம்.
கஷ்டத்தை மாற்றியமைக்கக் கூடிய சத்து உங்களுக்கு
கிடைக்க வேண்டும் என்று தான்
இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம். வீட்டிலிருந்து
கொண்டே உங்கள் கஷ்டத்தையெல்லாம் போக்க இதைப் போன்று யாம் சொல்லும் நிலையை எண்ணுவதற்குச்
சிரமமா…?
விபூதி வாங்கிச் சென்றால் போதும்… “உட்கார்ந்து தியானிக்க நேரமில்லை…!” எனறு
விட்டுவீடாதீர்கள்.
சமையல் பண்ணும் பொழுது “ஓம்
ஈஸ்வரா குருதேவா” என்று உயிரை எண்ணிக் கொண்டு நாங்கள்
சமைப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியை எல்லோரும் பெற வேண்டும் என்று நினைக்க
வேண்டும்.
வாழ்க்கையில் வரும் இன்னல்களை எல்லாம்
நீங்கள் மாற்றி அமைப்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.