ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2026

மனிதனை ஞானியாக மாற்றியமைக்கும் சக்தி “துருவ நட்சத்திரம்”

மனிதனை ஞானியாக மாற்றியமைக்கும் சக்தி “துருவ நட்சத்திரம்”


T.V. நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்கின்றார்கள். எந்த அலைவரிசை என்று தெரிந்து கொண்டு அந்த அலைவரிசையை வைத்தால் உடனே அதை எடுத்து  வேலை செய்கின்றது.
 
அதே போன்று நம் உடலில் எத்தனையோ குணங்களைப் பதிவாக்கி வைத்திருக்கின்றோம்.
1.என்னைத் திட்டினான் என்று எண்ணியவுடன் அந்த அலைவரிசை வந்தவுடன் கோபம் வரும்.
2.கோபமான நிலைகளில் கணக்குப் போட்டால் தப்பாக வரும்.
3.அதே சமயத்தில் வீட்டில் சண்டைக்குப் போவோம்.
 
எது இருந்தாலும் அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறுதான் வேலை செய்ய ஆரம்பிக்கும். 
 
அதே சமயத்தில் கோபமாக இருந்து ஒருவன் எனக்குத் தீங்கு செய்தான் என்று எண்ணினால் அவனும் அங்கு கெடுகின்றான்… அங்கு அவனுக்குப் புரை ஓடும்.
 
தன் பையன் லெட்டர் போடவில்லை என்று பாசத்தால் தாய் எண்ணி வேதனைப்பட்டால் அந்த வேதனையான உணர்வு பையனைப் பாதிக்கும். 
 
1.அவன் அந்த நேரத்தில் கணக்குப் போட்டால் அந்த வேதனை அவன் சிந்தனையைக் குறைத்துக் கணக்கு தப்பாகும்… கெட்ட பெயர் வாங்கி விடுவான்.
2.அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றான் என்றால் என்னை எதிர்க்கின்றார்கள்…”  என்று அங்கிருந்து லெட்டர் வரும்.
 
தாய் எண்ணியது என்று அவனுக்குத் தெரியாது.
 
அதே சமயத்தில் ரோட்டில் நடந்து போகும் பொழுதுதாய் இம்மாதிரி எண்ணினால் விபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். தாயின் நினைவு இப்படி வந்துவிடும். 
 
இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.
 
காரணம்… இதெல்லாம் காற்றில் இருக்கின்றது. அதே சமயத்தில் ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
1.நாம் யாரை எண்ணுகின்றோமோ உடனே அது வேலை செய்யும்.
2.மனிதனுக்கு   மனிதன் நாம் கலந்துதான் இருக்கின்றோம்… யாரும் தனித்து இருக்க முடியாது.
 
சமுதாய அமைப்பில் மனிதன் ஒன்றோடொன்று இணைந்து தான் வாழுகின்றான்.
 
நமது உடலுக்குள் எது  எது எல்லாம் பதிவாகி இருக்கின்றதோ  அவைகள் இந்தக் காற்று மண்டலத்திலும் உண்டு. நமது உடலுக்குள் பதிவானவைகளில எதை நாம் நினைக்கின்றோமோ அவை காற்றிலிருந்து நம் ஈர்ப்பிற்கு வந்து அந்த அலைகள் நம்மை இயக்கத்தான்  செய்யும்.
 
இதுவெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
 
ப்படி… நாம் எதை எண்ணினாலும் உடனே அதை நல்லதாக மாற்றுகின்ற  சக்தி வேண்டும்.
      
நாம் விஞ்ஞான யுகத்தில் வாழுகிறோம். மனிதன் எலெக்ட்ரிக்  லெக்ட்ரானிக் என்ற நிலைகளில் ஏதேதோ செய்கின்றான். நமது ஞானிகள்  இயற்கையின் உண்மையின் உணர்வுகளைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.
 
இதையெல்லாம் தெரிந்து கொண்டால்
1.நாம் எப்படி இயங்குகின்றோம்…?  நமது உயிர் எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
2.எந்த உணர்வும் நம்மை இயக்காமல் அதை நமக்கு உதவியாக மாற்றிக் கொள்வதற்கு ஒரு சக்தி தேவை.
3.அதற்குச் சக்தி ஊட்டுவதுதான் துருவ நட்சத்திரம்.