ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 9, 2026

சில நேரங்களில் யாம் அழுத்தமாக உபதேசிக்கக் காரணம் என்ன…?

சில நேரங்களில் யாம் அழுத்தமாக உபதேசிக்கக் காரணம் என்ன…?


என் உடலில் இன்ன நோய் இருக்கின்றது அது நீங்கி என் உடல் நன்றாக வேண்டும் என்று தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு உபதேசத்திலும் சொல்லிக் கொண்டு வருகின்றேன் ஒவ்வொரு சமயத்திலும் ஞாபகப்படுத்துகின்றேன்.
 
ஆனால்… ஐயோ… என்னுடைய கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்…! என்று தான் திரும்பவும் கேட்கின்றார்கள்.
 
காரணம் என்ன…?
1.ஏற்கனவே பதிவான உணர்வுகள் உங்களைப் பேச விட மாட்டேன் என்கிறது என்பதற்காக அதைச் சொல்கின்றேன்.
2.ஏனென்றால் இந்தக் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மட்டும் ஓங்கி வளர்த்திருக்கின்றோம்.
 
பாலுக்குள் இனிப்பு காப்பித்தூள் இவற்றை இணைத்தால் சுவையாக இருக்கின்றது. ஆனால் காத்தைப் போட்டால் ஐயோ காரம் ஐயோ காரம் என்று சொல்வது போன்று
1.உங்களிடம் இருக்கும் நல்ல குணத்திற்குள் மற்றவர்கள் கஷ்டத்தை எல்லாம் போட்டு
2.அந்தக் கஷ்டத்தைத் தான் முன்னாடி சொல்ல முடிகின்றதே தவிர அதை நிவர்த்திப்பதற்கு இல்லை.
3.தவறு நீங்கள் செய்யவில்லை.
 
சில நேரங்களில் நான் கோபமாகச் சொல்கிறேன் என்று நினைப்பீர்கள். கோபம் அல்லது.
 
உதாரணமாக ஒரு சாமானைத் தூக்க முடியவில்லை. தம் கட்டி…” அதை நான் தூக்குகின்றேன். அந்த மாதிரி உங்களால் சமாளிக்க முடியவில்லை
1.நான் வேகமாகச் உங்களிடம் சொல்லும் பொழுது ஆழமாகப் பதிவாகி விடுகிறது.
2.பார்… சாமி இப்படிச் சொல்கிறார்…! என்று அந்த நேரத்தில் சாமியை நினைக்க வேண்டி வரும்.
3.நான் சொன்ன ஞாபகம் உங்களுக்கு வரும்.
4.அப்பொழுது உங்கள் கஷ்டத்தை விட்டு விட்டு நல்லது பெற வேண்டும் என்ற எண்ணம் வரும்.
5.அப்படி எண்ண வைப்பதற்குத் தான் இதைச் செய்வது.
 
என்னிடம் எத்தனையோ பேர்கள் வரிசையாக வந்து கேட்டாலும் ஒவ்வொருவரிடம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் சொல்கின்றோம். ஆனால் பின்னாடி வருபவர்கள் மீண்டும் அதே குறையச் சொல்லிக் கேட்கப்படும் பொழுது என்ன சாமி… நம்மைக் கோவிக்கின்றாரே…? என்ன ஆனதோ…?” என்று நீங்கள் எண்ணுவீர்கள்.
 
1.சாமி கோவித்தாரே…! நாம் திருத்த வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த உணர்வு உங்களுக்குள் பதிவாகும்.
 
ஆக… அது கோபம் அல்ல…! அழுத்தமான சொல்லாகச் சொல்லும் பொழுது உங்கள் உடலில் நல்ல முறையில் பதிவு செய்வதற்குத் தான் அவ்வாறு சொல்வது.
 
காரணம் எதை எடுத்தாலும் தெய்வத்திடம் வரம் கேட்க வேண்டும் என்பது போன்று தான் சென்று கொண்டிருக்கின்றோம்.
 
ஒரு வேப்பமரம் அதனிடம் இருக்கும் மத்தால் ரோஜாவின் மத்தைத் தன் அருகிலே வராது தள்ளி விடுகின்றது. தன் இனமான கசப்பான சத்தைக் காற்றிலிருந்து அந்த மரத்திற்குள் இருக்கும் உணர்வை வைத்து இழுத்துத் தனக்குள் பெருக்கிக் கொள்கின்றது. அந்த வாசனையை வெளிப்படுத்துகின்றது.
 
தனக்குள் அந்தக் கசப்பை எடுத்து வளர்த்துக் கொண்ட பின்பு தான் அந்த வாசனையைக் கொடுக்கிறது.
 
அதே மாதிரி நம்மிடம் கசப்பான குணங்கள் இருந்தது என்றால் நாம் எதையாவது எண்ணிச் சொல்ல வேண்டும் என்றால் அதை (கசப்பை) எடுத்துத் தான் பேச முடியும். அது இல்லையென்றால் நாம் பேச முடியாது.
 
ஆனால் நீங்கள் எல்லோரும் நலமாக வேண்டும் மகிழ்ந்து வாழ வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த உணர்வை எடுத்துக் கொண்டு தான் நான் பேசுகிறேன்… பேசும் பொழுது உங்களிடம் பதிவாகும்.
2.நீங்கள் அனைவரும் மகரிஷிகளின்ருள் சக்தி பெற வேண்டும் எண்ணும் பொழுது முதலில் நான் அதுவாகின்றேன்.
 
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் சிரமங்கள் அகல வேண்டும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அதை எண்ணுகின்றேன் அதைச் சொல்கின்றேன்.
 
1.நீங்கள் கேட்கும் பொழுது முதலில் நான் அதுவாகின்றேன்… என் சொல்லும் அதுவாகின்றது.
2.இதையே நீங்களும் செய்து பழகிக் கொண்டீர்கள் என்றால் நீங்களும் அதுவாகின்றீர்கள்.