
இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”
ஆண்டவனின் நாமத்தையே
மீண்டும்
மீண்டும் ஜெபித்துக் கொண்டிருந்தால் “இறைவனை
அடையலாம்…” என்று பலர் அக்காலத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.
சிவ தத்துவத்தில் எடுத்துக் கொண்டால் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து அந்த ஒலிகளை
எழுப்புகின்றார்கள். இந்த உணர்வின் இயக்கத்தின் தொடர் கொண்டு
1.தன்
உடலில் உள்ள அணுக்களை தன்னுடன் இணைந்து இயங்கக் கற்றுக்
கொள்கின்றார்கள்.
2.அந்த
உணர்வின் ஒளி கற்றைகளாக ஆன நிலையில் சரீரத்தை மூடிவிட்டாலும்
3.அதே
உணர்வுகள் நுகரப்பட்டு வெப்பத்தின்
துணை கொண்டு உடலில் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
4.அந்த
உணர்வுகள் கடைசி நிமிடத்தில் எதுவோ எல்லாவற்றிலும் இந்த
உயிரைப் போலவே இந்த உணர்வுகள் அடங்கி விடுகின்றது.
5.ஓம்
நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற இந்த ஒலி மீண்டும் அது வந்து
கொண்டே இருக்கும்… அதன் இயக்கமாக அது மாற்றி விடுகின்றது.
6.இந்த
உணர்வின் ஒலி அதிர்வுகள் தன் உடலில்
உள்ள அணுக்களுக்கு ஆன பின்
7.உடல்
இருக்கும் ரசங்கள் குன்றும்… உடல் நலியும்… உயிர் உள்ளேயே இருக்கும்.
இதை நேரடியாக எனக்குக் காட்டுவதற்காக இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று
இடங்களுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.
முதலிலேயே
ஹரித்வார் அருகில் மரத்துக்கடியிலே ஜெபித்துக் கொண்டிருந்தவரைக்
காட்டினார். பெரிய வெள்ளத்தை வரவழைத்து கரைக்கச் செய்தார்.
கரைந்த பின் ஓ…ம் நமச்சிவாய…! என்று அங்கே சப்தம் வருகின்றது
அதை
ஜெபித்தாலும் இந்த உடலுக்குள் தான் சிறைப்பிடித்து இருக்கின்றார்.
அதற்கு மேல் அவர் விண் செல்லவில்லை. உடலின் உணர்வுக்கே செல்கின்றார்.
ஆனால் கரைத்த
பின் வேறு வழி இல்லை அடைப்பட்ட நிலையில் இருந்து எதிரொலி… உணர்வின் ஒலி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகி விட்டது.
அப்பொழுது குருநாதர் நேரடியாக நீ அவரைப் பார்க்கக்
கூடாது என்றார். ஏனென்றால் அவர்கள்
மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நீ அவரை எண்ணி அந்த சப்தரிஷி
மண்டல உணர்வை எடுத்தாய் என்றால் இது
அவருக்குள் சேரும் என்றார்
காலை நான்கு மணிக்கு “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர் பெற வேண்டும்…” என்று இந்த உணர்வின் ஒலிகளை அங்கே பரப்பப்படும் பொழுது
1.அதன் ஈர்ப்பால் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
2.ஒளியின்
சரீரமாக இருளுக்குள் அடைப்பட்டிருந்த நிலை ஒளியாக மாறி விண் செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
3.அதன்படி
அந்த ஆன்மாவை நீ விண் செலுத்து என்றார் குருநாதர்.
இதே மாதிரி
இன்னொரு இடத்திலே ஜோஸ்மெட்டுக்கு மேலே ஒருவர் புதையுண்டு இருக்கின்றார். அங்கே இராணுவப் பாதுகாப்பு
இருக்கின்றது.
ஒரு பெரிய
ஓடை வருகின்றது. அந்த ஓடைக்குள் திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் தண்ணீராக வரும்.
ஆனால் கரையின் ஓரத்தில் திட்டுக்குள்
அடங்கி இருக்கின்றார்.
ஹரி ஓ…ம் நமோ
நாராயணா…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் “சூரியனின் இயக்க நிலை…”
அந்த உணர்வின்
தன்மையை எடுத்து ஒளியின் உணர்வாக அவரும்
இந்த உடலுக்குள் தான் அடங்கி இருக்கின்றார்.
அதை எல்லாம்
நேரடியாகவே எமக்குக் காட்டுகின்றார். உடலுக்குள் அடங்கியிருக்கின்றது… செவி கொண்டு அந்தச் சப்தத்தை நீ கேள் என்றார் குருநாதர்.
இராணுவ வீரர் ஒருவர்
என்னிடம் வந்து என்ன செய்கின்றீர்கள்…? என்ன பார்க்கின்றீர்கள்…? என்று கேட்கின்றார்.
அங்கே நான்
காதை வைத்து அந்தச் சப்தத்தைக்
கேட்டுக் கொண்டிருக்கின்றேன் அல்லவா. ஆனால் இதையெல்லாம்
அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லி விட்டார்.
நான்
ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன். இங்கே மலைப்பிரதேசமாக
இருக்கின்றது நிலநடுக்கம் ஏதும் வருகின்றதா…? என்று சும்மா
பார்க்கின்றேன் என்று சொன்னேன்.
அதிலே தமிழர்
ஒருவர் இருந்தார். அப்படிங்களா…! என்றார்.
ஆனால் அங்கே
குளிர் அதிகமாக இருக்கின்றது அவர்களெல்லாம் சட்டை போட்டிருக்கிறார்கள். நான் வெறும் கோவணத் துணியைத் தான் கட்டி இருக்கின்றேன்.
என்னுடைய
நிலையைப் பார்த்து அந்த மிலிட்டரிக்காரர்கள் எல்லாம் ஆசீர்வாதம் கேட்கின்றார்கள்.
என்னிடம் விபூதி எதுவும் இல்லை. அங்கிருக்கும் மண்ணை எடுத்துப் பிரார்த்தனை செய்து அதைத் தான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்குத் தக்க உபாயமாகும் என்று சொன்னேன்.
ஏனென்றால் பேரீச்சம் பழம் பிஸ்கட் மட்டும்தான் அங்கு கொண்டு சென்றேன். விபூதியைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நான் கொடுத்ததை அவர்கள்
சந்தோஷமாக வாங்கிச் செல்கின்றார்கள்.
அங்கே
ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள் சூரியனுடைய இயக்கமாக இருந்தாலும் கூட்டை விட்டு
வெளியே வந்தால் இதே சூரியனால் கவரப்பட்டுத் தான் சுழல
முடியும்.
அப்படிக் கவரப்படும் போது
அவர் எந்த ஒலியினைத் தனக்குள் ஓங்கி வளர்த்தாரோ
எப்படி இங்கே கூட்டுக்குள் ஒடுங்கினாரோ
இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அவரையும் இது போன்றுதான்
உட்கார வைக்கும்.
நாராயணன் செயல் என்ன…?
என்று அங்கே தியானமிருக்கும்படி சொன்னார் குருநாதர்.
1.அதன்பின் சில உணர்வின் ஒலிகளை எடுத்து அங்கே பரப்பும்படி செய்தார்
குருநாதர்.
2.அந்த
உணர்வுகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதைச் சுவாசித்து அவர்களும் விண் செல்ல உதவும் என்று
3.உணர்வின்
எக்கோவாக (ECHO) அங்கே அதைப் பரப்பச் சொன்னார்.
4.அவர்
சொன்ன முறைப்படி செயல்படுத்தினேன்.
ஏனென்றால் அந்த இமயமலைச் சாரலில் இது போன்று
ஏராளமானோர் உண்டு. இன்னும் அந்தக் கூட்டுக்குள் தான் இருக்கின்றார்கள்.
இதையெல்லாம்
நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.