
அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி
இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?
அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப்
பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக்
கொள்கின்றார்கள்.
அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும்…
தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக்
குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.
இப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை
வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.
தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள்.
சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.
ஆனால் நாம் கையை வைத்தால் “கொட்டு… கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.
அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள்
ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக்
கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.
யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மணத்தை
கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.
காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே
கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும்… அருகில் வராது.
புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும்
செய்வதில்லை… விலகிச் சென்று விடுகின்றது.
அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும்
காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மணங்களை இவர்கள்
உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே
நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக்
குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி
அதற்குக் கிடைக்கின்றது.
அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான்.
அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ
இவன் மணத்தைக் கண்டால் அப்படியே
பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.
இன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச்
செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள்
காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.
புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை.
ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில்
செலுத்திக் கொள்கின்றார்கள்.
சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச்
செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று
விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக்
கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.
விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.
நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட
பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.
ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன்
சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப்
பயன்படுத்துகின்றார்.
பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது… ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.
ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம்
பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு… உடலில்
இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.
பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம்
தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது
விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச்
சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.
உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை… உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.
பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின்
யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.
பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம்.
ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும்
நிலைகள் வேறு…
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!
நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக்… என்று வாயிலே
உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப்
புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.
ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான
நிலைகள் வருகின்றது.
1.இதை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான்
அந்த அகஸ்தியன்.
ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை
நோய் இருந்தது,
இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்… கருவிலிருக்கும்
குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.
மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும்.
போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி
எடுக்கும்.
குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.
தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என்
பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது
வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.
தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி இருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும்
போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.
சில குடும்பங்களில் இயற்கையில் இப்படி நடக்கும் பொழுது
இது “பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.
இங்கே யார் தவறு செய்தது…?
1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த
உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு
நாட்கள் உற்று
நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ
அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய
குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.