
உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை
துருவ
நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இணைத்து விட்டால்
1.அது
இந்த மனித வாழ்க்கையின் நிலைகளைத் தணித்து
2.அருள்
உணர்வு என்ற நிலையை நமக்குள் பெருக்குகின்றது.
அது தான்
வாழ்க்கையே தியானம் என்பது.
நான்
இதையெல்லாம் உங்களிடம் சும்மா கொடுக்கவில்லை.
1.ஈஸ்வரபட்டர்
எனக்குச் சும்மா கொடுக்கவில்லை.
2.அவர்
உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
3.அந்த
நினைவின் தன்மை தான் நாம் எடுக்கின்றோம்.
இந்த உடலில்
இச்சைக்காக வாழ கற்றுக் கொண்டோம் என்றால்
1.உடலை
வளர்க்கவும்… அதிலே கௌரவத்தை வளர்க்கவும்
1அதை
வைத்து என்னை மெச்சிக் கொள்ளவும் என்று
நான் இருந்தேன் என்றால் “உடலின் இச்சைக்குத் தான் வாழ
முடியும்…”
உடலுக்குப்
பின் குருநாதர் கொடுத்த சக்தி பயனற்றதாகப் போய்விடுகின்றது.
ஆகவே உடலில்
இருக்கக்கூடிய உணர்வுகள் “உடலின் இச்சைக்கு என்று
இல்லாதபடி…” எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும் என்று இந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.
நீங்கள் பெற
வேண்டும் என்று எண்ணினால் அதை நான் பெறுகின்றேன். உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நான் அதைப் பெறுகின்றேன்.
இதைத்தான் குருநாதர் எனக்குள் உருவாக்கினார்.
ஆகவே இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி அந்தப் பதிவை நீங்கள் வளர்ப்பதற்குத்
தான் “தொடர்ந்து உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு வருகின்றேன்…”
ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையே தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்வது அதுதான்.