ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2025

தில்லை அம்பலத்தாண்டவா

தில்லை அம்பலத்தாண்டவா


அன்று திருமூலர் பதஞ்சலியாக இருந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து மாடு மேய்ப்பவன் உடல் மூலமாக அவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது
1.அவன் மனைவி கணவனை எப்படி வரவேற்கிறது…?
2.மரியாதை கொடுத்து எப்படிஉபசரிக்கிறது…! என்பதைப் பார்த்த பின் சிந்திக்கத் தொடங்குகின்றார்.
 
ஆனால் பதஞ்சலியாக… அரசனாக இருக்கப்படும் பொழுது
1.தன்னுடைய சேனாதிபதிக்குப் பயப்பட வேண்டும்
2.தன்னுடைய மனைவி இன்னொரு நாட்டு அரசனுடைய மகள் அவளுக்குப் பயப்பட வேண்டும்
3.தான் சட்டங்களை இயற்றினாலும் மக்களுக்குப் பயப்பட வேண்டும்
4.பின் எதிரிகளுக்குப் பயப்பட வேண்டும் என்று
5.இப்படிப் பயந்த உணர்வுகளே கொண்டு வாழும் நிலைகளே தனக்குள் வந்தது.
 
இதிலிருந்து தப்பிக்க உயர்ந்த சக்திகள் கொண்டு கூடுவிட்டுக் கூடு பாயும் சக்திகள் பெற்றிருந்தாலும்… அப்படிச் சென்ற பின் தன் உடலை வீழ்த்தி விட்டால் தான் எவ்வாறு மீள்வது…? வழியில்லையே…!
 
பாம்பினத்திற்குள் சென்ற பின் அங்கங்கள் கொண்டு செயல்படும் வழியில்லை அப்பொழுது தான் எப்படிச் செயல்படுத்துவது…? என்று இந்த உணர்வின் நினைவு வருகின்றது.
 
பாம்புக் கூட்டுக்குள் இருந்து விஷத்தைப் பாய்ச்சி இன்னொரு உடலுக்குள் போகும் திறன் தான் உண்டு. எந்த உடலைத் தேர்ந்தெடுக்கின்றோமோ மனித உடலாக இருந்தால் அறிவின் தன்மை இயக்க முடியும்.
 
இதை உணர்ந்த அந்தப் பதஞ்சலி
1.தான் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு அந்த மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அதற்குள் புகுந்து
2.அறிவு வளர்ச்சி இல்லாததாக இருந்தாலும்… இவன் உணர்வால் அங்கே வலிமை பெற்று அந்த உடலை இயக்குகின்றான்.
 
தில்லை நடராஜா…! இந்தப் பூமி அதனுடைய இயக்கத்தில் நிற்காமல் ஓடுகின்றது. அது எவ்வாறு இயக்குகிறது…? என்றும் அதிலே விளைந்தது தில்லை அம்பலதாண்டவா.
1.இந்த உடலான எல்லையில் உயிராக நின்று
2.என்னை ஆண்டு கொண்டு இருக்கும் நிலைகள் தில்லை அம்பலத்தண்டவா…!
3.நான் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதை நீ ஆளுகின்றாய்.
4.நான் எதன் உணர்வை எடுக்கின்றேனோ அந்த உணர்வுக்குத் தக்க என்னைக் குறுக்குகின்றாய்
5.என்னை ஆட வைக்கின்றாய் ஆட்டங்களை ஆட வைக்கிறாய்…!
6.அந்த உணர்வின் இசைக்கொப்ப என்னை இயக்குகின்றாய் என்று தெளிவாகக் காட்டுகின்றார்.
 
அது தான் தில்லை நடராஜா…! என்று நடனக் கலையிலே சிறந்தவன் என்று கூறுவார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை சக்தியாகிணர்வின் தன்மை உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இன்று ஆடுகின்றோம்…! (நம் செயல்கள்)
 
இந்த உணர்வை வளர்த்த பின் அதற்குத் தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது என்ற நிலையை… உணர்வின் இயக்கங்கள் தன் உடலில் வரப்படும் பொழுது எவ்வாறு ன்று நடனக் கலையாகக் காட்டினார் அன்று திருமூலர்.
 
தில்லை நடராஜா என்று நிற்காமல் ஓடும் பூமியின் செயலும் அதற்குள் உராயும் உணர்வுகள் தனக்குள் விளையும் அணுக்களின் மாற்றங்களும் எதனின் உணர்வு மாறுகின்றதோ அதன் உணர்வின் செயலாகத் தாவர இனங்களும்
1.நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் எண்ணங்களாக எப்படி கின்றது…?
2.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உருவங்கள் எப்படிப் பெறுகின்றது…?
3.அதனுடைய கலைகள் எப்படி இருக்கின்றது…? என்று தெளிவாக அவர் பாடல்கள் மூலமாக…” உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளர்.
 
தில்லை நடராஜாதில்லை அம்பலத்தாண்டவா…!
1.நான் எண்ணும் உணர்வின் தன்மையை
2.அதாவது… என்னை நீ (உயிரான ஈசன்) எப்படி இயக்குகின்றாய்…? என்ற நிலையை அவன் உணர்த்தினாலும்
3.பின் வந்தவர்கள் திருமூல மந்திரம்…” என்று திரித்து விட்டார்கள்.