ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2025

விண் சென்ற ஞானிகள் மூச்சலைகளை நாம் நுகர்ந்து இனி வரும் சந்ததியினருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்

விண் சென்ற ஞானிகள் மூச்சலைகளை நாம் நுகர்ந்து இனி வரும் சந்ததியினருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்


இந்த மனித உடல் நமக்கு நிலையானது அல்ல. நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை. நீங்கள் இந்த உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இந்த நச்சுத்தன்மையான உலகத்தில் இருந்து விடுபட வேண்டும்.
 
இன்றைய விஞ்ஞான உலகில்… மனிதன் சீர்குலைந்த நிலையில் செயல்படக்கூடிய நிலைகளும் மனித உருவையே குறைக்கக் கூடிய நிலைகளாகவும் விஷத்தன்மைகள் பரவிக் கொண்டு வருகின்றது.
 
இனி எந்த நேரம் எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது. அதற்குள் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நிலையான ஒளிச்ரீரமாகப் பெற வேண்டும்.
 
1.மெய் ஒளியினைப் பெருக்கி அந்த மெய் ஆற்றல்களை உங்களுக்குள் விளைய வைத்து
2.நீங்கள் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு விஞ்ஞானத்தால் வரக்கூடிய விஷத்தினை அது மாய்த்து
3.நல்லதை எண்ணி ஏங்கி வருவோர் உள்ளங்களுக்குள்ளும் ஞானத்தின் உணர்வுகளை விதைத்து
4.டுத்து வரும் சந்ததியினர் மெய் ஒளியின் தன்மை கொண்டு நிலையான சக்திகளைப் பெறச் செய்வதற்கு உங்கள் மூச்சலைகளே உதவும்.
 
அதாவது… மெய் ஞானிகள் இட்ட மூச்சலைகள் இன்று நமக்கு எப்படி உதவுகின்றதோ அதே போல வரும் சந்ததியினருக்கு அதைக் கிடைக்கச் செய்ய முடியும்.
 
ஏனென்றால் இந்த உலகம் மாறப் போது நிச்சயம். அதாவது மனித உலகம் நினைவிழக்கப் போகின்றது.
 
ஆதிகாலத்தில் காட்டுமிராண்டிகளாக மனிதன் எப்படி வாழ்ந்தானோ அதைப் போன்று உருப்பெறும் நிலைகளாகி மனிதனுக்கு மனிதன் தர்மம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு ஆனால் மற்றவரை வீழ்த்தும் நிலையே வளர்ந்து கொண்டிருக்கின்றது.
 
அதனால் நச்சுத்தன்மைகள் அதிகமாகி விஷத்தன்மைகளாகப்ரவிக் கொண்டுள்ளது. அணுகுண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் எல்லாம் சாதாரணமாகப் போய்விட்டது அவை மற்றவர்களைச் சுட்டுப் பொசுக்கும்.
 
ஆனால் அதைக் காட்டிலும்
1.தாவர இனங்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போட்டு
2.அந்தப் பூச்சிகளைக் கொன்று விட்டு நாம் வாழ வேண்டும் என்று எப்படி விரும்பினோமோ இதைப் போல
3.இந்த உலகத்தில் உள்ள கோடான கோடி நிலைகளையும் மாய்த்துக் கொல்லக்கூடிய
4.விஷமான சக்திகளைவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.
 
ஆக… பூச்சிகளைக் கொன்று தாவர இனங்களை வளர்த்து நாம் வாழ்வதற்காக என்று அதைச் செய்திருந்தாலும்
1.இன்று அதை எல்லாவற்றையுமே போர் ஆயுதங்களாக உருவாக்கி விட்டார்கள்.
2.எந்த நிமித்திலும் அத்தகைய ஆயுதங்கள் வெடிக்கலாம்.
 
அப்படி வெடித்தால் மனிதனுடைய உணர்வுகள் நஞ்சின் தன்மை ஆகி மனிதனுடைய நினைவலைகள் பூரணமாக அழிகின்றது. மனித உரு இருக்கும். ஆனால் மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் ழிக்கப்பட்டு புத்தி இல்லாத நிலைகளாகத் தான் செயல்பட வேண்டி வரும்.
 
குரங்குகளுக்கு மனிதனைப் போன்ற அங்கங்கள் கை கால் உண்டு. மனிதனைக் காட்டிலும் எங்கும் எதிலும் தாவிச் சென்று ஏறக்கூடிய வலிமை இருந்தாலும் மனிதனை ஒத்த சொல்களைச் சொல்லி மற்றவர்களுக்குப் புரியக்கூடிய நிலையில் அதை வைத்துத் தன் நிலைகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலைகள் கிடையாது.
 
மனிதனோ சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற்றவன். ஆக மனிதனை ஒத்த குரங்குக்கே அந்த நிலை இல்லை. ஆக மற்ற உயிரினங்கள் எப்படி…? என்று பார்த்துக் கொள்ளலாம்.
 
மிருகங்கள் எப்படிக் காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படுகின்றதோ அது போன்று மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழித்திடும் நிலையாகச் சென்று கொண்டு இருக்கின்றது.
 
குரங்கிற்கு ஒரு ஆகாரத்தைப் போட்டாலும் தன் வாய் நிறைய அதை வைத்திருந்தாலும் மற்ற குரங்குகளை அது டித்து விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.
 
அதைப் போன்று மனிதர்களுக்குள்ளும் மற்றவர்கள் எதையும் பெற விடாதபடி தானே அனுபவிக்க வேண்டும் என்று ஈவு இரக்கமற்றுச் செயல்படும் நிலைகளாக வந்து கொண்டிருக்கின்றது.
 
ஆகவே இது போன்ற நிலைகளை உணர்ந்து மெய் வழியைப் பெறும் தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.இப்பொழுது நாம் சொல்வது உங்களுக்கு லேசாகத் தெரியலாம்.
2.போகப் போகத்தான் யாம் சொல்லக்கூடிய உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
 
எப்படிச் செடி கொடிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு உரத்தைப் போட்டவுடன் மரத்திற்குள் அது ஐக்கியமாகி… காற்றிலிருந்து தன் இனமான சக்திகளை எடுத்து அது நல்ல மணிமுத்துகளைக் கொடுக்கின்றது.
 
து போல்… அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை உரத்தைப் போன்று நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். உங்கள் நல்ல குணங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
 
அதற்கு யாம் சொன்ன முறைப்படி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானித்துப் பழகிக் கொள்ளுங்கள்.
 
பழகிய பின்…
1.அடுத்து எப்பொழுது கஷ்டம் வருகின்றதோ அந்தக் கஷ்டம் நிலைத்திருக்காதபடி
2.துன்பமான விஷமான குணங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு பொசுக்கி விடலாம்.
 
ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அந்த சக்தி எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று இப்படி ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
ரேடியோ டிவியில் ஸ்விட்சைப் போட்டவுடன் அந்த அலைவரிசையை எடுத்து அதைச் செயல்படுகின்றதோ அதே போல ஞானிகள் அருளாற்றல் மிக்க அருள் சக்தியை நீங்கள் பெறக்கூடிய தகுதிக்கே இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.அதற்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவவது தியானிக்க வேண்டும்.
2.தியானமிருந்தால் தான் அந்தச் சக்தியைக் கூட்ட முடியும்… உங்களைக் காத்துக் கொள்ள முடியும்.