ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2025

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்


27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.
 
கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.
 
1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.
 
மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.
 
மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள்தற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
 
மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் நாமும் ஒளியாக முடியும்…”
 
அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.
 
பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது.கஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.
 
அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”
 
செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.
 
தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.
 
உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ த்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும் சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ட்டும்.