
சூனிய மண்டலம் - சூனியக் காலம்
அண்ட
சராசரங்களைக் கடவுள் எப்படி உருவாக்கினார்…? கடவுள் யார்…?
என்ற இந்த உண்மைகளை எல்லாம் பல முறை சொல்லி உள்ளேன். எதன் வழி உலகம் உருவாகின்றது…? என்று வேத நூல்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அதனை அறிந்து
கொள்ளும் பொழுது
1.நாம்
யார்…? எப்படி மனிதனானோம்…?
2.மனிதரான
பின் உயிரின் உணர்வுகள் எப்படி ஒளியாகின்றது…? என்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒளியாகும்
தன்மை பெற்றது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால்… நாம் அறிந்து கொள்ளும் உணர்வுகளில் அடுத்து இந்த
உடலுக்குப் பின் உயிரைப் போன்றே உணர்வின் அணுக்கள் ஒன்றாகின்றது.
இவை அனைத்தும்... அகஸ்தியனால்
கூறப்பட்டு அவனுக்குப் பின் வந்த வரிசைத் தொடரில் ஞானிகளால் வெளியிடப்பட்ட பல உண்மைகள் இந்த உலகெங்கிலும் பரவி
உள்ளது.
அகண்ட அண்டம்
என்பது சூனியம் நிலைகள் கொண்டது. இது
சூனியக்காலம் என்று சொல்வார்கள். குண்டலினி யோகா ராஜ யோகம் செய்பவர்கள்
1.சூனியக் காலத்திற்குப் போகிறோம் என்பார்கள்.
2.சூனியக்காலம்
என்பது இருண்ட உலகம்.
3.இருண்ட உலகில் தான் சிவன் இருக்கின்றார் என்று அவர்கள்
உணர்வைச் செலுத்துகின்றார்கள்.
சூனியக்
காலம் என்றால் என்ன…? என்பதைப் பற்றி அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.
இப்பொழுது
நாம் காணும் அனைத்து நிலைகளும் “சூனியத்திலிருந்து உருவானது…” அது இருண்ட நிலைகள் பெற்றது.
1.நாளடைவில்
அது ஆவித்தன்மை அடைந்து அந்த ஆவித் தன்மை அடைவதற்கே முதலில்
வெப்பம் என்ற நிலை வருகின்றது.
2.வெப்பம்
என்ற நிலை வரும் பொழுது அசையும் நிலை அதாவது இயக்கும் தன்மை வருகின்றது.
3.வெப்பத்தன்மை
வருவதற்கே சூனியம் தான் காரணம்… சூனியம் உருவாவதற்கு விஷம்
தான் காரணம்.
அகண்ட அண்டம்
இருண்ட உலகமாக இருந்ததால் அதைச் சூனிய உலகம் என்று
சொல்வார்கள். வேதங்களில் இதைத்தான் சூனிய உலகம் என்று
குறிப்பிட்டுள்ளார்கள்.
நாளுக்கு நாள்…
நாளுக்கு நாள்… அது விஷமாக மாறி
1.விஷம்
அடர்த்தி அடையப் படும்பொழுது விஷமற்றதைத் தாக்கி மோதலாகி வெப்பம் உருவாகின்றது.
2.வெப்பம்
என்ற நிலை வரும் போது… வெப்பமான பின் விரிந்து
ஓடும் சக்தி பெறுகின்றது.
3.விரிந்து
ஓடும் சக்தி வரும் பொழுது அதிலே ஈர்க்கும் காந்தமே வருகின்றது.
இதை உங்களிடம் பதிவு செய்கிறேன். பதிவு செய்ததை அடுத்து எண்ணி நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த
நேரத்தில் உங்கள் உணர்வுகள் எல்லாம் வான்வீதியில் அகண்ட காலத்திற்கு சூனியக்
காலத்திற்குச் சென்று
2.சூனியம் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் அறிதல் வேண்டும்.
சூனியத்திலிருந்து
எப்படி வெப்பமானது…? வெப்பத்திலிருந்து அணுக்கள் எப்படி சுக்கு நூறாகச் சிதறி ஓடுவதும்
அதிலே ஈர்க்கும் காந்தம் எப்படி உருவானது என்ற நிலையை நீங்கள்
அறியலாம்.
குருநாதர்
எமக்குக் கொடுத்த உண்மையின் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி
அந்த நினைவினை நீங்கள் கூட்டிச் செல்லும் பொழுது இந்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.
ஏனென்றால்
1.ஆதி… அந்த ஆரம்ப நிலையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
2.உலக
இயக்கத்தின் உண்மைகளை நீங்கள் அறியும் சந்தர்ப்பம்
வருகின்றது.
3.அதே
சமயத்தில் அந்தச் சூனியம் எப்படி ஒளிமயமாகின்றது…? என்பதையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும்.
இயற்கையின்
உண்மை நிலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு
செய்கின்றேன்.
காரணம்
வாழ்க்கையின் நிலைகளை மட்டும் தான் அடிக்கடி பேசுகின்றோம்.
சூனியத்தைப்
பற்றிப் பேசினாலும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை...!
என்னமோ சாமி சொல்கின்றார்…! என்று சிலர்
எண்ணத்தால் இதை மறுக்கின்றார்கள். மனத்தால் மறுத்து… சீக்கிரம் எதாவது சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பெறலாம்
என்று தான் மனதை ஓட்டுகின்றார்கள்.
ஆகவே… சூனியத்திலிருந்து
தோன்றப்பட்டது தான் “இயற்கையின்
சக்திகள் அனைத்துமே…” என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.