
குரு காட்டிய வழியில் “மெய் உலகைப் படைப்போம்…”
இன்றைய நிலையில் பூமியில் வாழும் உயிரினங்கள்… மிருகங்களிலிருந்து
மனிதன் வரை மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ
நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.
அதே சமயம்
1.மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்றதாகி
2.மனித உடலில் விளைய வைத்த அந்தச் சிந்தனையற்ற உணர்வுகள் இங்கே
படர்ந்து கொண்டிருக்கின்றது.
3.அத்தகைய உணர்விலிருந்து நாம் மீள வேண்டும்.
“நாம்
அனைவரும்
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து” நம்மையறியாது சேர்ந்த
தீமைகள் நீங்கி
நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் தீமையை அடக்கும்
சக்தியாகவும்…
நன்மை பயக்கும் சொல்லாகவும்…
செயலாகவும்… நமக்குள் வளர வேண்டும்.
நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும் அது வளர்ந்திட வேண்டும்.
1.அன்றைய மெய்ஞானிகள் எல்லோரும் எவ்வாறு ஒன்று கலந்து உறவாடினார்களோ
2.அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் ஒன்றுபட்ட உணர்வாகச் செயல்பட வேண்டும்.
ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்துத் தீமையற்ற நிலையாக வளரும் நிலைக்கு வர வேண்டும்.
நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும்
1.சகோதர உணர்வுடன் வாழ்ந்திடும் உணர்வாக நாம் இடும் மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில்
இருந்து
நுகர்ந்து எடுக்கும் அனைத்து உயிரான்மாக்களுக்கும் மெய்வழி பெறும் நிலை ஏற்படும்.
நாம் எந்தத் தாவர இனச்சத்தை
நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ… இந்த மனித உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து…
அதாவது
1.நாம் எந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ அதை உணவாக்கிய
நம் உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து
2.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு
கொண்ட உணர்வுகளைத் தாக்கி
3.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
அதன் மூலம் தாவர இனங்களும் சத்தான நிலைகளில் வளர்ந்து அதை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வினைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமைய வேண்டும்.
ஆகவே… “மெய் உலகைப்
படைக்கும் உணர்வாக” உங்களுக்குள் விளைந்து நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள தீமைகளை நீக்கிடும் சக்தியாக மலர வேண்டும்.
எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் நம் எண்ணங்கள் சென்று அதன் வழிகளிலே நல் வினைகளைச் சேர்த்து அது வினைக்கு நாயகனாக ஆகி
1.அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் நாம்
அனைவரும் இணைந்து
2.என்றும் நிலையான “பெருவீடு பெருநிலை”
என்ற நிலையடைந்து மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியருளிய அருள் வழியை
நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையில்தான் இதை உணர்த்துகின்றோம்.
நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
உங்களுக்குக் கிடைத்து… உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக
நீங்கள் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
1.நமது குருநாதர் வழியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
2.மெய் உலகைப் படைப்போம்…!