ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2025

போகாப்புனல்

போகாப்புனல்


நாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது அது நன்கு வலுப்பெறுகின்றது.
 
இவ்வாறு நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான் விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும்கூர்மை அவதாரம் வராக அவதாரம்என்பது.
 
அந்த வலுப்பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த ஞானிகள் எவ்வாறு  ஒளிச் சரீரம் பெற்றார்களோ அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து வராக அவதாரமாக நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதன் நிலையாக நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.
 
இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பருகினால்தான் விண் செல்ல முடியும்.
 
இல்லையென்றால்
1.இன்று நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி
2.இந்தத் தெய்வம் செய்யும் அந்தத் தெய்வம் செய்யும் இந்த மனிதர் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை
3.நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால் உடலுக்குள் இது சாகாகக் கலையாக இந்தப் பூமியிலேதான் நாம் சுழல முடியும்.
 
ஆனால் வேகாக்கலை என்றும் போகாப்புனல்…” என்ற நிலையை அடைய வேண்டுமென்று வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார்.
 
1.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை நமக்குள் செலுத்தினால்வேகாக்கலை  அடைந்து
2.னிப் பிறவியில்லா  போகாப்புனல்” அதாவது இன்னொரு பிறவியில் நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.
 
ம் ஈஸ்வராஎன்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்என்று ஏங்கி  அதை உயிர் வழி கவர்ந்து அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது இதற்கு ஆத்ம சுத்திஎன்று பெயர்.  அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.
 
உங்கள் வாழ்க்கையில் துயரங்களோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அவசரமோ இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும் உணர்வுகளிலும்  அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் அடிக்கடி சேர்த்து வரவேண்டும்.
 
அப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால்
1.வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால் அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து மணி முத்துக்களை விளையச் செய்கின்றதோ
2.அதைப் போன்று ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து ஒளியான அணுக்களாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
 
இவ்வாறு நீங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால் அது வலுப் பெற்று ஒளியின் முத்தாக உங்கள் உணர்வுகள் விளைந்து…” உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகப்பெருவீடு பெருநிலைஎன்ற நிலையடைவீர்கள். கல்கி அவதாரமான பத்தாவது நிலையை அடைவது திண்ணம்.
 
வேகாக்கலை போகாப்புனல்…” என்று வள்ளலார் பாடியது போல நீங்கள் அனைவரும் அந்த நிலை அடைய முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும் இதற்கு முன் உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ மனக்கவலையோ மன வேதனையோ இதைப் போன்ற நிலைகளிலிருப்போர் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படர வேண்டும்என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.
 
இது வலுப் பெற்றதாகி இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகிவிடும்.
 
நீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும்.
 
அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்வதற்குத்தான் ஞாபகப்படுத்துகின்றோம்.
 
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
2.அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம்.
3.அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.
 
கூட்டமைப்பாக இருந்து கூட்டுத் தியானங்கள் செய்யும் பொழுது அதன் வழியாகத்தான்  அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்.
 
ஆகையினால்… எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக யாம் சதா தவம் இருந்து கொண்டிருக்கின்றோம்.