ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2025

லேசர் இயக்கம்

லேசர் இயக்கம்


கண்ணின் நினைவுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்…? வெகு தொலைவில் இருப்பான் எதிரி. அவனைக் கோபமாக நினைத்தவுடன் என்ன நடக்கின்றது…?
 
இந்தத் தீமையின் உணர்வுகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவன் செயலற்றவனாக ஆகின்றான், அவன் உணர்வு நமக்குள் இருப்பதால் கண் வழி நம் உணர்வைச் செலுத்தும் பொழுது இந்த லேசர் இயக்க ஒளிகள் அங்கே தாக்குகின்றது.
 
அன்று ஈராக்கில் யுத்த நேரத்தில் பாதாளத்தில் அவர்கள் மறைந்திருந்து பல வேலைகளைச் செய்தார்கள். ஆனாலும் அதைக் கண்டு கொள்வதற்காக லேசரைச் செயல்படுத்தினார்கள்.
 
மின் கதிர்களால் இயக்கப்பட்டது தான் சில நிலைகள். கதிரியக்கப் பொறிகளை அந்த இடத்திலே பாய்ச்சப்படும் பொழுது அங்கே உள்ளே இருக்கக்கூடிய நிலைகளைப் படங்களாக எடுத்துக் காட்டுகின்றது.
1.எக்ஸ்ரே எப்படி உடலுக்குள் ஊடுருவி படமாகக் காட்டுகின்றதோ இதே போன்று
2.லேசர் இயக்கங்களை பயன்படுத்தி அங்கே ஈராக்கில் மறைந்திருந்த நிலைகளைக் காணுகின்றார்கள்.
 
குண்டுகளைப் போட்டாலும் எதிர்த்துத் தாக்கும் தன்மையும் அதைத் தாங்கக்கூடிய கான்கிரீட்டுகளாகவும் அவர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.
 
எதிர்நிலை எக்கோ பதிவு செய்யக்கூடிய நிலை இருந்தாலும் அதையும் அறிந்து லேசர் மூலம் வலுவாக இயக்குகின்றார்கள். அந்த லேசரைப் பாய்ச்சி அதன் துணை கொண்டு ஊடுருவி கதிரியக்கங்களை உள்ளே பாய்ச்சி அந்த கம்பிகளை உருவாக்கும் சக்தி கொண்டு வருகின்றான்.
1.பின்பு தான் குண்டுகளைப் போட்டு பாதாளத்தில் இருக்கும் அந்தச்  சுரங்கங்களைக் கண்டறிகின்றார்கள்
2.ஏனென்றால் இப்படித்தான் ன்று யுத்தம் செய்தார்கள்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் யாம் கண்டது தான், தெரிந்து கொண்டோம் என்றால் உங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டுமல்லவா…!
 
எத்தனையோ அடுக்குகளை வைத்துத் தான் எதிலும் நொறுங்கிவிடாதபடி அவர்கள் பாதுகாப்பாக ருந்தார்கள். அதற்காக வேண்டி ஒவ்வொரு அடுக்கிலும் எதிர்ப்புணர்வை வைத்திருந்தார்கள்.
 
லேசர் எதிர் நிலையை மாற்றி அந்த தாக்குதலை நிறுத்தக்கூடிய நிலைகளையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார்கள். ஆனால் லேசர் மூலம் ஒளி அலைகளைப் பாய்ச்சி ங்கிருக்கும் படத்தைப் பதிவாக்குகின்றார்கள்.
 
பூமிக்கு அடியில் இருப்பதை எப்படிக் காணுகின்றார்கள்…?
 
1.மேலே விமானத்தில் பறந்து கொண்டே உணர்வலைகளைப் பாய்ச்சி மோதப்படும் பொழுது
2.அது அப்படியே கோடு போட்டுக் கொண்டே செல்கின்றது.
 
அதை வைத்து இந்த இடத்தில் நீர் இருக்கின்றது இன்ன இடத்தில் எண்ணெய் இருக்கின்றது இன்ன இடத்தில் பழைய காலத்து உலோகங்கள் இருக்கின்றது இங்கே பல மிருகங்கள் இருக்கின்றது என்பதை விமானத்தில் பறந்து செல்லும் பொழுதே எதிர் நிலைகளை வைத்து லேசர் இயக்கத்தின் மூலம் தான் கண்டுபிடிக்கின்றார்கள்.
 
விஞ்ஞானி இப்படித்தான் கண்டு கொள்கிறான். ஆனால் மெய்ஞானி தன் எண்ணத்தால் அகண்ட அண்டத்தையும் அளந்தறிந்தான்...”
 
நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம் ஆனால் இதைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்றால் ராக்கெட்டில் எவ்வளவு காலம் பிடிக்கிறது…?
 
நம் குருநாதர் என்ன செய்தார்…?
1.எண்ணத்தின் மனோநிலை ஆனாலும் நாம்ண்ணும்போது உடனடியாக அங்கே டச் ஆகின்றது (இணைக்கின்றது).
2.2000 சூரியக் குடும்பத்திற்கும் மனதைப் பாய்ச்சும்படிச் செய்கின்றார்.
3.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கிறது…? அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழ்கின்றது…? என்பதை எல்லாம் குருநாதர் காட்டுகின்றார்.
 
மரம் செடி கொடியாக இருந்தாலும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் தைத் தொடர்ந்த தாவர இனங்கள் மடிந்தால்…” இதற்குச் சத்து குறையும் இதுவும் வீழ்ச்சி அடையும்.
 
சில தாவர இனங்கள் கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகி இருக்கும். ஆனால் கலந்த செடிகள் மடிந்து விட்டால் சிறிது நாளைக்குத் தான் இந்தப் புதியதாக உருவான செடிகள் வளரும். கடைசியில் அதுவும் மடிந்துவிடும்.
 
து எல்லாம் குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டிய நிலைகள்.  
1.காடுகளுக்கு மேடுகளுக்கும் எம்மை அனுப்பி இந்த உண்மைகளை உணரும்படிச் செய்து
2.ஞானிகள் காட்டிய வழியில்னிதன் எப்படி வாழ வேண்டும்…? என்ற வழியைக் காட்டுகின்றார்.