ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2025

ஆன்மீகத்தில்... ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

ஆன்மீகத்தில்... ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?


மற்றவர்கள் செயலை நேருக்கு நேர் பார்த்து "நீ தவறு செய்கின்றாய்...” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? கேட்க மாட்டார்கள்…!
1.சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியாது.
2.மனதிற்குள் வைத்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும்... அருள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டி...
3."நீங்கள் பார்த்துச் செய்யுங்கள்...” என்று கூறினால் சரியாகும்.

டேய் என்னடா செய்கின்றாய்...? இப்படியே நீ தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லும் போது அதனின் அர்த்தம் என்ன ஆகிறது…?த்தனை பேர் இருக்கின்றார்கள்... இப்படியே செய்து கொண்டிருக்கிறீர்கள்... சாமி என்ன சொல்கின்றார்…? என்று இதையும் கலந்து கொண்டே தான் வருவோம்.

இதனால் என்ன ஆகின்றது…? நன்மை விளைவதில்லை.

அறியாத நிலைகள் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.நாம் அருளைப் பாய்ச்சி அவர்கள் அறியும் தன்மை வரவேண்டும் என்ற இந்த உயர்ந்த உணர்வை நாம் எடுத்துச் செயல்பட வேண்டும்.
2.நிச்சயம் உணர்வார்கள்... வருவார்கள்... என்று ந்த எண்ணத்துடன் தியானித்துப் பாருங்கள். தேடி வருவார்கள்.
சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.
இதைத்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர... நாம் சொல்லும் "நல்லதைக் கேட்க யாரும் வரவில்லை...” என்ற எண்ணத்திற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.




ஆனால் இத்தனை பேர் இந்தத் தியான வழியில் வந்தார்கள் ஆனால் இப்பொழுது போய்விட்டார்களே…! என்று வேதனையோடு சொல்லப்படும் பொழுது... உங்கள் மேல் "இவர் என்ன…? சும்மா எப்பொழுது பார்த்தாலும் நச் நச் என்று நச்சுப் பிடித்துவராக இருக்கின்றார் என்று வரும்…!

பாலிலே வித்தைப் போட்டு அதைச் சாப்பிட்டால் மயக்கம் தான் வரும். தைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்...? சிந்தனை அங்கே சரியாக வராது.

இதைப் போன்று நாம் எடுக்கும் உணர்வுகள் விஷத்தன்மை ஆகும்பொழுது நம்மை அறியாமலே வேதனைப்படும் நிலையும் நாம் செல்ல வேண்டிய மார்க்கத்தைத் தவற விட்டு மற்றவர்களையும் பெற விடாதபடி தடைப்படுத்தும் நிலையாகத் தான் வரும்.

இவர் என்ன எப்பொழுது பார்த்தாலும் சும்மா வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் மீது குறை கூறும் உணர்வுகள் வந்துவிடும்.

ஆனால் உயர்ந்த பண்புகளுடன் வேதனை உணர்வு கலந்து சொல்லும் பொழுது உடலும் பலவீனமாகும். உயர்ந்த மார்க்கமாக இருக்கின்றது... இப்படி இருக்கின்றார்களே அல்லது இப்படிச் செய்கின்றார்களே…! என்று வந்துவிடும்

கண்ணாடி நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் அழுக்குப் படிந்து விட்டால் முகம் தெரியுமா துடைக்க வேண்டும் அல்லவா.

ஆன்மீகம் என்பது
1.வலிமை கொண்ட உணர்வைப் பாய்ச்சி...
2.மற்றவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று எண்ணினால் நிச்சயம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.

ஆகவே அருள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்... ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எடுத்தால் அது சீராக வரும்.


அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.