
ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?
கௌரவர்கள் 100
பேர் என்று மகாபாரதத்தில்
காட்டுவார்கள்.
100 விதமான கௌரவர்கள் நமக்குள் உண்டு. ஒன்றுடன்
ஒன்று என்ன செய்யும்…?
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதைத்தான் அது இயக்கும்… கௌரவர்கள்.
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வு… தனக்குள் ஏற்கனவே இருப்பதற்கு மாறாக வந்தால் அது
விடாது.
மந்திரத்தைக் கற்றுக் கொண்டவர்களிடம் நல்லதைச்
சொன்னால் மந்திரக்காரன் ஏற்றுக் கொள்வானா…? கௌரவம் என்ற நிலை வருகின்றது.
நல்ல சத்தின் தன்மை எடுத்துக் கொண்டால் நல்லது என்று வராதபடி கௌரவர்கள்
அதனதன் வளர்ச்சிக்குத் தான் இயக்கும்.
இப்படி ஒரு மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அவனில் அந்த உடலில் எப்படி 100 குணங்கள் எப்படி இயக்குகின்றது…?
கோவில்களில் நாமாவளி சொல்வார்கள். கடவுளின் அவதாரம் 10 என்றால் தெய்வத்தின் அவதாரம் 10
என்ற நிலை வருகிறது. அது எதனதன் நிலைகள் வளர்ந்தது என்று நிலையும் வரும்.
அன்ன வாகனம் யானை வாகனம் சர்ப்ப வாகனம் மயில்வாகனம் என்று ஒவ்வொரு
தெய்வத்திற்கும் வைப்பார்கள் 10 வாகனங்களை. அந்த வாகனங்கள் எதற்கு…?
பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றது. மயிலும் தனக்குள் மற்றதை உட்கொண்டு விஷத்தை மாற்றுகின்றது. இப்படி
1.பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று கொன்று
ஒன்றை ஒன்று தின்று
2.பத்தும் சேர்த்து ஒன்றாக ஒரு குணமாக
மாறுகின்றது.
அதனால் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்களை வைத்து எதனதன்
நிலையில் வளர்ச்சி அடைந்தது…? என்று ஒவ்வொரு சாமிக்கும் இவ்வாறு வைத்திருப்பார்கள்.
இப்படி நூறு விதமான குணங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் பத்து. இந்த நூறும் சேர்த்தால் ஆயிரம் ஆகும். அஷ்டதிக்கும் அறியும் உணர்வு
வரப்படும் போது எட்டு…! அதாவது
1.ஆயிரெத்தெட்டு என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள்… அதே போல நூற்றியெட்டு…
2.எதன் உணர்வின் தன்மையோ இதன் உணர்வுக்கொப்ப அஷ்டதிக்கும் அது உணர்வின் தன்மை எப்படி
எடுக்கிறது…? என்று
3.இந்த உணர்வின் குணங்கள் மாறுவது எப்படி…?
இந்த உணர்ச்சியின் செயல்கள் எப்படி
மாறுகின்றது…?
4.இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள
வேண்டும்.
உடலில் எந்தக் குணத்தின்
தன்மையை நாம் எடுக்கின்றோமா… உதாரணமாக சர்க்கரைச் சத்து என்ற குணத்தை வைத்துக் கொண்டு சர்க்கரையைச் சாப்பிட்டால் எதிர்நிலையாகின்றது.
சர்க்கரை அதிகமாகி விட்டால் அனைத்தையும் வெள்ளணுக்களாக மாற்றி
விடுகின்றது. கோப உணர்வு அதிகமாகி கார உணர்வானால் அந்த உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது…
பின்னாடி இரத்தக் கொதிப்பால் வாத நோயாகி கை கால்களைச் சுண்டி விடுகிறது.
1.இப்படி ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு எதிர் நிலையாகும் பொழுது உடலுக்குள் எப்படிப் போர்கள் நடக்கின்றது…?
2.மனிதனுடைய நிலை எப்படி இருக்கின்றது…? எதன் வழியில்
அது வருகிறது…? என்பதைக்
குருநாதர் காட்டுகின்றார்.