ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2025

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு


27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாகி ளிக் கற்றைகளாக வரும் பொழுது வியாழன் கோள் அதைக் கவர்கின்றது.
 
சூரியன் எப்படி 27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டதோ தே போல
1.வியாழன் கோளும் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை எடுத்து எடுத்து எடுத்து வளர்ச்சி அதிகமாகி
2.தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்களை வளர்த்துக் கொள்கின்றது. வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு.
3.அதை வைத்து 27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாகச் சமைத்து ஆவியாக மாற்றி உறைனியாக தனக்குள் மாற்றுகின்றது.
 
து கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரப்படும் பொழுது
1.வியாழனின் சுழற்சி வேகம் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் தனக்குள் இணைத்து
2.புது விதமான அணுக்களாக இணைத்துக் கொள்ளும் பாலமாக…” அமைகின்றது.
 
நமது உயிர் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருந்தாலும் எந்த உணர்வின் தன்மை நுகர்கின்றோமோ (உதாரணமாக) வேதனை என்று வந்தால் அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது அது வலுவானால் அதன் வழி இங்கே வேதனையின் இயக்கமாக மாற்றுகின்றது.
 
ஆகவே… இந்த உடலான கோளுக்கு… “உயிர்” குருவாக இருக்கின்றது.
 
ஆனால் அதே சமயத்தில் பிரபஞ்சத்திற்குச் சூரியன் இயக்கச் சக்தியாக ஆனாலும் வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்கு குருவாக இருக்கின்றது. அதனால் தான் வியாழனை குரு…” என்று அழைப்பார்கள்.
 
வரும் சக்திகளைத் தனக்குள் இணைக்கப்பட்டு மோதப்படும் பொழுது இரண்டும் இணைந்து புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் ஊடுருவும் மின்னலின் கதிர்கள் ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கப்படும் பொழுது அத்தகைய அணுக்கள் வளர்ச்சி அடைகின்றது.
 
வளர்ச்சியடைந்து செல்வதைத் தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது. கவரும் பாதையில் மற்ற கோள்கள் கவர்ந்து தனக்குள் அதை எடுத்துக் கொள்கிறது.
 
27 நட்சத்திரத்தின் சக்தியை வியாழன் தனக்குள் எடுத்துத் தனது சுழற்சி வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பகுதியில் பாறையாக உறையும் தன்மை வருகின்றது.
 
மின்சாரத்தை உபயோகித்து ஐஸ் பெட்டியாகவும் (FRIDGE) உருவாக்குகின்றோம் அதே மின்சாரத்தை உபயோகித்து சூடாகவும் (HEATER) உருவாக்கிக் கொள்கின்றோம் அல்லவா…!
 
இதைப் போன்று தான் வியாழன் கோள்…
1.பல விதமான உணர்வின் தன்மை கொண்டு அமைதிப்படுத்தி
2.போர்முறை இல்லாதபடி அந்த உணர்வின் தன்மை வேக வைத்து
3.அமைதித் தன்மையாக எதிர்ப்பு இல்லாத நிலையாக உருவாக்குகின்றது.
 
27 நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது இது ஜாதகங்களில் எல்லாம் வரும் ஆனால் இந்த உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.
 
கோள்களைப் பிரித்து எழுதிக் கொள்ள முடியும். சூரியனுக்கு நேராக வரும் பொழுது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் பொழுது அதைத் தான் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட முடியும்.
 
இயற்கையின் உண்மையின் உணர்வுகளைச் சொல்ல முடியாது…!
 
இவர்களுக்குகந்த நிலையில் மனிதனுக்கு ஜாதகக் குறிப்புகளை மதத்திற்குத் தக்கவாறு குறித்து…” இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்று சொல்லி ஆண்டவன் தான் இதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்பார்கள்.
 
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் அவரவர்களுக்குத் தக்கவாறு ஜாதகத்தை எடுத்துச் சொல்லப்படும் போது
1.எது ஆழமாகப் பதிவாகிறதோ அந்தப் பதிவு தான் மனிதனை இயக்குகிறது.
2.ஆக… கோள்களின் இயக்கத்தில் மனிதன் இல்லை.
 
கோள்கள் இயக்கத்தால் காற்றலைகள் வரப்படும் பொழுது அது தார இனங்களுக்கு அந்தச் சக்திகள் தேவை.