
பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி
சூரியனிலிருந்து
தோன்றிய அதீத வெப்பத்தை உண்டாக்கும் ஒரு அணுவும் நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய கதிரியக்கமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
1.இயற்கையின் நிலைகள் ஒன்றாக இணைந்து உயிரின் துடிப்பாகும் பொழுது ஈஸ்வரா.
2.அந்த
இயக்கத்திற்குள் இருக்கக்கூடிய வெப்பம் விஷ்ணு.
3.நாராயணன்
விண்ணிலே சர்வேஸ்வரனாக உருப்பெறும் பொழுது ஒற்றைப்படையில் இங்கே ஈஸ்வரா என்று உருவாகின்றார்.
அதாவது நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகத் தோன்றுகின்றது.
பிரபஞ்சத்திற்குள்
தோன்றிய இந்த உயிரணு தான் பூமிக்குள் வந்தபின் தாவர இனச்
சத்தை இது சுவாசிக்கின்றது.
உயிரான ஒளி
இதுவும் சக்தி தான்… ஆனால் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி…! தாவர இனச் சத்தை இழுத்த உடனே அது உறைந்து சிவமாகிறது… “சிவசக்தி” ஆகிறது.
இந்த உயிர் தாவர இனச்சத்தைச் சேர்த்து புழுவாகும் பொழுது அந்தப் புழுவிற்குள் அந்த உணர்வின் சக்தியாக வினையாகச் சேருகிறது. வினையாகச் சேர்த்த
நிலையில் தான் எடுத்துக் கொண்ட வினைக்கு நாயகனாகப் புழுவாகத் தோன்றுகின்றது…
“விநாயகா…”
தாவர இனத்தைத்
தனக்குள் சேர்க்கும் பொழுது சக்தி சிவம் ஆகின்றது…
சிவத்திற்குள் சக்தி இயங்குகின்றது.
உதாரணமாக
வேப்ப மரத்தின் சத்து இதற்குள் இணைந்து புழுவாகும் பொழுது சேர்த்துக்
கொண்ட வினைக்கு நாயகனாக இந்த உடல் பெறுகிறது.
வினைக்கு நாயகனாக உடல் பெற்றாலும் வேப்ப மரத்தின் தன்மை
கசப்பு. இந்த உயிரின் தன்மை தான் ஈர்த்து எடுத்துக் கொண்ட இந்தச் சக்தியோ லட்சுமி.
காந்தம்… “லட்சுமி நாராயணா” என்று அங்கே சூரியனை வளர்த்தது. உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த இயக்கம்
ஈஸ்வரன். இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஈர்ப்பு சக்தி லட்சுமி.
ஒரு பொருளின்
தன்மை இதனுடன் இணைந்து உருப்பெறப்படும்
பொழுது “பராசக்தி…” எந்த மணத்தை அதனுடன் இணைக்கின்றதோ அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது ஞானம் “சரஸ்வதி…”
இணையக்கூடிய
சந்தர்ப்பம் “பிரம்மா…” ஆனால் அந்த மணம் பிரணவம் ஜீவன்…! அந்தக் குணத்திற்குத் தக்கவாறு இயக்கம். இந்த உணர்வின் தன்மை ஊட்டுவதற்கு
அந்த உயிர் தனக்குள் சேர்த்து உருப் பெறும் சக்தியாக மாறுகின்றது.
உயிரில்
இருக்கக்கூடிய காந்தம் தாவர இனச் சத்தை இழுக்கின்றது. லட்சுமி. இந்த வெப்பத்திற்குள் ஆனபின் உடலாக உருப் பெறச் செய்கின்றது பராசக்தி.
ஆனால்
வேப்ப மரத்தின் கசப்பான சத்து வரப்படும் பொழுது மணம் ஞானம். இது பிரணவம். அந்த மணத்தின்
நிலை கொண்டு இது ஜீவன் பெறுகின்றது.
1.தனக்குள்
எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் பிரணவம் என்கிற பொழுது ஓ…
2.அந்த
வாசனையை எடுத்து ம்… என்று தனக்குள்
சேர்க்கப்படும் பொழுது “சிவம்… ஓம்
நமச்சிவாய…!”
அந்த உயிர்
தனக்குள் அதனுடைய சக்தியாச் சேர்க்கின்றது. ஆனாலும் இதில் இருக்கக்கூடிய இந்த
காந்தம் வேப்ப மரத்தின் சத்தை இழுத்து தனக்குள் இணைந்து வளர செய்யக்கூடிய
சக்திக்குப் பெயர் “சீதா ராமா…”
சீதா என்பது
சுவை. லட்சுமிதான் தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த சுவையின் சத்தைத் தனக்குள் சேர்த்த வினையாக அந்த உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமன் ஆகின்றது.
நாராயணன் மறு அவதாரம்
விஷ்ணுவாகத் தோன்றி நான் ராமனாகப் பிறக்கப் போகின்றேன் என்ற நிலை வரப்படும் பொழுது இந்த ராமன் யார்…? சீதா ராமா.
தான் கவர்ந்து
கொண்ட இந்தச் சக்தி… தன் உடலாகி உடலுக்குள் விளைந்து அந்த உணர்வின் சத்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமா. அந்தச் சுவையால் எடுத்துக் கொண்டு விளைந்த அந்த வித்து.
அத்வைதம்
துவைதம் காயத்ரி என்று சொல்வார்கள். காயத்ரி என்றால் என்ன…?
இந்த பூமியான பரத்திற்குள் சகல சக்திகளும் இருக்கின்றது. ஒரு வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்த அலைகள் தனக்குள்
கவர்ந்து கொள்கின்றது.
கவர்ந்து
கொண்ட இந்த சக்தியை இதே வேப்ப மரத்திலிருந்து எடுத்துக் கொண்ட அந்தப் புழு இதைச் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை மோதி.. தான் அறியும்
சக்தியாகப் பெறுகின்றது. புழுவிற்கு
அது ஞானம்.
1.வேப்ப மரத்தின் கசப்பு
சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமியின் பரத்திலே பரவச் செய்கிறது… இது “பரமாத்மா…”
2.அதை இந்தப் புழு இழுத்துத் தன் உடலுக்கு அருகில்
வரும் பொழுது அதனின் “ஆத்மா…”
3.பரமாத்மாவிலிருந்து
சுவாசித்து அதனின் ஆன்மாவாக்கி உடலுக்குள் சென்ற உடனே “ஜீவாத்மா…”
4.உடலுடன் சேர்த்து விளைந்தது உயிருடன் இணையும் போது “உயிரான்மா…!”
5.பிரம்மாவிற்கு நான்கு தலையைப் போட்டிருப்பார்கள்… நான்காக உருப்பெறச்
செய்வது.
6.எடுத்துக்
கொண்ட சக்தி அது முழுமையாகின்றது
- காயத்ரி.