
“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
ஒரு வித்து
முளைத்து அதனுடைய நுனி வெளி
வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி
எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும்
எடுக்காது… தொடரையும் எடுக்காது.
இதைப்
போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள்
அணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த
முடியும்.
ஏனென்றால்
1.வாழ்க்கையில்
இடைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக
ஆக்கும்
2.அது
போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும்
என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகளில் ஃபிட்டர்களை (FITTER)
வைத்திருப்பார்கள்.
தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது
குறைபாடு ஏற்பட்டால் ஃபிட்டர் வந்து அதை சரி செய்து தருவார்… இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!
அதைப் போன்று
தான் அந்த
ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை
நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான
உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின்
சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.
அதை வளர்த்துக் கொண்டால்
உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.
நம்மை உருவாக்கக்கூடிய
சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை
எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.
தொழிற்சாலைகளில்
ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த
இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் இங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.
அதற்குத்தான்
உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும்
மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது
குறைகள் என்று
வந்துவிட்டால்
1.“சாமி
சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள்
உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான்
மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது… நினைவுபடுத்துவது… நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்வது.
அருள் ஞானிகளின் உணர்வுகளை
எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள்
என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச்
சீர்படுத்தும் சக்தியாக வரும்.
அதை நீங்கள்
கற்றுக் கொள்ள வேண்டும்.
இயந்திரம்
கோளாறாகிய
பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம்
ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.
ஆகவே உங்களுக்குள்
அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை
பதிவாக்குகின்றேன்.
அதை நீங்கள்
நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த
உணர்வு உங்களுக்குள் ஞானமாக இயக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை
அறியாது வரும் இருளைப் போக்க வழி
வகுக்கும்.
அதற்குத்தான்
இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.
அது தான்
கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை
அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.