
கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்
உயிரினங்களில்
மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையும்
கர்ப்பமாக இருக்கும் உயிரினங்களில் மற்ற உயிரினம் துரத்தி வரப்படும் பொழுது அந்த
உணர்வினை நுகரும் பொழுது
1.கருவுக்குள்
இருக்கும் அந்தச் சிசுவுக்குள் இந்த உயிரினத்தின் உணர்வுகள் ஒட்டிய பின்
2.கருவிலேயே எப்படி எல்லாம் மாற்றமாகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
குரங்கை
எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ மாற்றங்கள் உண்டு, மற்ற
மிருக இனங்கள் இதைத் துரத்தி வரும்
நிலையில் உற்றுப் பார்க்கும் பொழுது கர்ப்ப நிலைகளில் அந்த
உணர்வுகள் படப்பட்டுப் பரிணாம வளர்ச்சியிலும் அதனுடைய வளர்ச்சி தொடர்கள் எவ்வாறு வருகிறது…? என்று உருமாற்றங்கள் எப்படி ஆகிறது…? என்று காட்டுகின்றார்
குருநாதர்.
மனிதர்களாக
நாம் வாழுகின்றோம். கர்ப்பமாக இருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை உற்றுக் கூர்மையாகப் பார்த்து அதனுடைய க்ஷேமத்தை விசாரித்து…
1.பரிவு
கொண்டு அந்த குழந்தையைப் பற்றி அறியும்
நிலையில் ஊனமுற்ற உணர்வினை நுகர்ந்து
விட்டால்
2.தன் கருவில்
இருக்கும் குழந்தையும் ஊனமான குழந்தையாக மாறும்.
இதைப் போலக்
கருவிலே வளரும் உயிரினம் தன் தாய் கவரும் உணர்வுகள் கொண்டு எவ்வாறு விளைகிறது…? என்று கீதையிலே தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
அதாவது கண்ணன்
கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!
கண்கள் மற்ற
உணர்வினை நுகர்ந்து அந்தத் தாய்க்கு
இந்த உணர்வைக் கொண்டு இயக்கினாலும் கருவில் வளரக்கூடிய
சிசுவிற்கும் இந்த உணர்வுகள் பதிவாகி அந்த உணர்வு பதிவான பின்
1.கண்ணால்
பதிந்த நிலைகள்… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது
2.அந்த
அறிவின் தன்மை அங்கே வருகிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்கு
3.வியாசகர்
கண்ணின் இயக்க நிலைகளை அப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்.
பல கோடிச் சரீரங்களில்
உயிர் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளையும்… அதிலே வளர்ச்சி பெற்று வந்த மனித நிலைகளையும்… ஊனமுற்ற
குழந்தைகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்ற நிலையையும்
குருநாதர் காட்டுகின்றார்.
உதாரணமாக
காட்டில் ஒரு புலி கர்ப்பமாக இருக்கின்றது. ஆனால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக ஒரு மானை அந்தப் புலி உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கின்றது.
ஏனென்றால் அடிபட்டு நகர முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால்
கர்ப்பமாக இருக்கின்றது. தன் இரைக்காக எண்ணிப் பார்க்கின்றது.
அந்த
மானையே எண்ணி எண்ணிக் கண்களால்
பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் புலியின்
கருவிலே விளையத் தொடங்குகிறது.
அந்தப்
புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் இருந்தாலும்….
அந்தப் புலி ஏக்கத்தால் மானையே எண்ணி ஏங்குகின்றது.
1.இந்த
உணர்வின் சத்து கருவில் இருக்கக்கூடிய உயிரணுக்களில் இது
இணைக்கப்பட்டு
2.அதற்குள் எவ்வாறு விளைகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.
இதை உங்களிடம் லேசாகச்
சொல்கிறேன். ஆனால் என்னைக் குருநாதர்
பட்டினியாக இருந்து அதைக் காணும்படி செய்தார். எந்தப் பக்கமும் நகர விடவில்லை.
உயிரினங்களில்
தான் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… கண்ணால்
பார்த்து உணர்வை நுகர்ந்த உயிர் தனக்குள் உணர்வாக அமையப் பெற்று அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு உடலுக்குள் உணர்வுகள் பதிந்த பின் “கருவில் வளரும் சிசுக்களுக்கு எவ்வாறு அது ஒட்டுண்ணி போன்று உணர்வுகள் இயக்கப்படுகிறது…?” என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
இரைக்காகத்
தேடினாலும் புலியின் உணர்வுக்குள் மானையே எண்ணி ஏங்குகிறது. ஏனென்றால் உடலில்
அடிபட்டிருப்பதால் தன் இரையைப் பிடிக்க முடியவில்லை.
கண் கொண்டு மானையே
பார்த்து ஏக்கத்தின் உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய புலிக் குட்டிக்குள் இது படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய
ரூபம் எப்படி மாறுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.
அந்தப் புலி
குட்டி போடும் வரையிலும் இந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதனின் உணர்வும் வளர்ச்சியும் அறிவதற்காக அங்கேயே அமர்ந்து தியானிக்கும்படி செய்தார்.
ஜோசியம் பார்ப்பவர்கள் மற்றொருவர் உணர்வினை நுகர்ந்து
“அவர்கள் என்னென்ன நினைத்தார்கள்…?” என்று
சொல்கின்றார்கள் அல்லவா…!
இதைப் போலத் தான்
அந்த உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள்
எவ்வாறு தொடர்ந்திருக்கின்றது…? என்ற
நிலையைத் தெளிவாகத் தெரிந்து
கொள்ளும்படி இந்த உணர்வின் அறிவை எனக்கு ஊட்டினார்.
அந்தக்
கருவிலிருக்கக்கூடிய குட்டிக்கு மானின்
உணர்வுகள் அதிகமாகப் பட்டபின்… மானின் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகள் இந்த புலி உடலுக்குள் எப்படி அடைகின்றது…?
அதைப் புலி சுவாசித்த பின்
இரத்தத்தில் கலந்து வரும் பொழுது
1.கருவிலே
விளையக்கூடிய சிசு புலியின் ரூபம் மாறி
மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
2.இரண்டும்
கெட்டானாக அது விளைகின்றது… இதை நேரடியாகவே
தெரியப்படுத்துகின்றார் குருநாதர்.
நீங்கள்
பத்திரிகையில் பார்த்திருக்கலாம். உலகத்தில் சில இடங்களில் ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது. ஆனால் மனித உடல் இருந்தது… மனிதனின் தலையும் மிருக உடலும் இருந்தது என்றால்லாம் பார்த்திருப்பீர்கள்.
காரணம்… ஏக்க உணர்வு கொண்டு பிறிதொன்றை உற்றுப் பார்த்து
நுகரப்படும் பொழுது கருவுக்குள் அப்படி எல்லாம் மாறி விளைகின்றது.
ஆகவே… விஞ்ஞான
அறிவால் இன்று எத்தனையோ உண்மைகளை
நாம் அறிகின்றோம். ஆனால்
மெய் ஞானிகள் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் கண்டுணர்ந்து புலனறிவாலேயே தனக்குள் விண்ணின் ஆற்றலைப் பருகி அவர்கள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குருநாதர் காட்டினார்.
1.என் கண் புலனறிவிற்கு அந்த ஊட்டச்சத்தை ஊட்டி அந்தப் புலனின் நிலையைக் கொண்டு உற்றுப் பார்த்து
2.அதனின்
செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று
அறியம்படிச் செய்தார்.
அந்த
அனுபவத்தைத் தான் இப்பொழுது சொல்கின்றேன்.
நான் கல்வியறிவு அற்றவன். குருநாதர் உணர்வின் வலுப் பெற்று
அந்த உணர்வின் துணையால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.நீங்கள்
அனைவரும் இதை அறிந்து கொண்டால்
2.நமது
சாஸ்திரம் எத்தகைய நிலைகள் மெய் உணர்வை நமக்கு உணர்த்தி
உள்ளது…? என்று அறியலாம்.
மகாபாரதமோ இராமாயணமோ கந்த புராணமோ சிவபுராணமோ இவை அனைத்திலும்…
அதிலே கொடுக்கப்பட்ட உண்மைகள் சாஸ்திரப்படி மெய்.
இந்த உண்மைகளை மனிதன் உணர்ந்தால்
அந்த ஞானிகள் சென்ற பாதையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை
பெறுவது திண்ணம். நாம் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.