ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2025

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!


விஞ்ஞான உலகத்தால் வரக்கூடிய பேரழிவும் மனிதன் ஆசையின் நிலைகள் கொண்டு வரும் பொழுது ஒன்றைக் காக்க என்று தீவிரவாதமும் மதத்திற்குள் மதம் தீவிரவாதமும் இனத்திற்குள் இனம் தீவிரவாதம் வீட்டிற்குள்ளேயே தீவிரவாதம் தெருவிற்குள்ளும் தீவிரவாதம்… வளர்ந்து விட்டது.
 
என்னமோ பெரிய இவன் மாதிரிப் பேசுகின்றான் என்று இது போன்ற தீவிரவாத உணர்வுகள் எல்லோருக்குள்ளும் பெருகி வரப்படும் பொழுது
1.நல்லதைக் காப்பது யார்…? நல்லதை காக்கும் ஆள் இல்லை…!
2.ஆக… இந்த உலகமே சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் தான்… மகான்கள் தோன்றுவார்கள்…!
3.நம் குருநாதர் கொடுத்த அருள் உணர்வு கொண்டு ஒவ்வொரு திசையிலும் மகான்களை நாம் தோற்றுவிக்க வேண்டும்.
 
ஒரு சமயம் நபிகள் நாயகம் தோன்றினார் அரக்க உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தோன்றினார்.
 
இங்கே தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது அதை மாற்ற வியாசகர் வந்தார்… அதே போல் வான்மீகி கரிஷி வந்தார். மகாத்மா காந்தி வந்தார்.  தீமையிலிருந்து விடுபட இராமலிங்க அடிகளும் தோன்றினார்.
 
ராமகிருஷ்ண பரமகம்சரும் பக்தி மார்க்கங்களில் எத்தனை அதர்மங்கள் நடக்கின்றது…?திலிருந்து மக்கள் மீள வேண்டும்…! என்று அவர் உணர்த்திச் சென்றார்.
 
1.இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி வளர்ச்சி பெற்றாலும் அது நிலைத்திருக்கிறதா…?
2.அது தோன்றி உருப்பெற்ற இடங்களில் இன்று பார்த்தால் நான் பெரியவன்… நீ பெரியவனா…?” என்று தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
3.இராமகிருஷ்ணருக்குச் சீடராக வந்த விவேகானந்தருடைய தத்துவங்களையும் மாற்றி விட்டார்கள்.
 
கடவுளைக் காட்டுகின்றாயா…? என்று விவேகானந்தர் கேட்கின்றார். கடவுளைக் காட்ட முடியாது… ஆனால் உணர முடியும் என்று ராமகிருஷ்ணர் உணர்த்துகின்றனர்.
 
உனக்குள் உள் நின்று இயக்கும் உணர்வு எதுவோ எதை நீ நுகர்கின்றாயோ அந்த உணர்வின் இயக்கமாக உடல் இயங்குகின்றது.
1.உள் நின்று இயக்குவதே கடவுளாகின்றது.
2.ன் உணர்வு வலுவோ அதுவே உன் உடலில் இருந்து இயக்குகின்றது என்று தெளிவாக்குகின்றார் இராமகிருஷ்ணர்.
 
இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயக்க வேண்டும் என்று ஒரு மனிதனை நல்லவனாக்க வேண்டும் என்றால் “அந்த நல்ல உணர்வை நுகரப்படும் போது என்னை நல்லதாக்குகின்றது…” வ்வொரு மனிதனுடைய எண்ணங்களையும் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது அது எந்த வகையில் ஒன்று சேர்த்து இணைகின்றது என்று விவேகானந்தர் தெளிவாகக் கூறியுள்ளார்.