
ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்
சாப்பாடு போடுகிறார்கள்… நன்றாகத் தான் இருக்கிறது
என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா…?
1.அந்தச் சுவையான உணவை உட்கொண்டால் தானே நல்லது.
2.ஆகவே
போடக்கூடிய உணவை நல்ல முறையில் சாப்பிட வேண்டும்.
3.அப்பொழுது
அந்த ருசியின் தன்மை தெரியும்.
இன்னொருவர்
சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருக்கின்றது…!” என்று சொல்கிறார். எப்படி இருந்தது…? நன்றாக இருந்தது…!
நன்றாக இருந்தது என்றே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்கிறது…? என்று சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்.
ஏனென்றால் யாம் அடிக்கடி உபதேசித்த உணர்வுகளில்
உள்ள உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக
உடலிலே ஒரு புண் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். வேதனையாக
இருந்தாலும் மருந்தைப் போடுகின்றோம். முதலில் மருந்தைப் போட்டாலும் சிறிது வேதனையாகத் தான் இருக்கும்.
புண் ஆற
வேண்டும் என்று ஆசையுடன் அந்த மருந்தைப் போடுகின்றோம்.
1.ஆனால்
மருந்தைப் போட்ட பின் கடுகடுப்பாகிவிட்டால் என்ன இப்படி
வேதனை வருகின்றது…? என்று
2.மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமோ…?
அது போல் தான் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ விதமான வேதனைகள் தோற்றுவிக்கின்றது. அது எத்தனை தோன்றினாலும் அதை மாற்றி அமைத்த
அருள் ஞானிகள் உணர்வுகளை அடிக்கடி எடுத்து நுகர்தல் வேண்டும். அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.
நான் “என்ன தான்
இப்பொழுது உங்களுக்குச் சக்தியை கொடுத்தாலும்…”
1.அதை
நீங்கள் “எடுத்துக் கொள்ளக்கூடிய முறைகளில் தான் இருக்கிறதே தவிர…”
2.நான்
கொடுத்தவுடனே நீங்கள் அதைப் பெறுவது என்பது
அல்ல.
3.ஆனால்
எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன்
என்பது உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்.
ஆனால் அந்தச்
சக்தியைப் பற்றி… அதன் வலிமையைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள்
என்ன செய்வீர்கள்…? ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து
விடுவீர்கள்.
ஏனென்றால் ஆரம்பத்தில் நான் கொடுத்த நிலைகள் இப்படித்தான்
ஆகிவிட்டது.
1.எனக்கே
சக்தி இருக்கின்றது… சாமியினுடைய தயவு என்ன வேண்டி
இருக்கின்றது…? என்று
2.பெரும்பகுதியானவர்கள் பிய்த்துக் கொண்டு
சென்று விட்டார்கள்.
எல்லோருக்கும்
இதைத் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அற்புதங்களை எல்லாம் அவர்களைச் செய்யும்படி செயல்படுத்தினேன்… அது உலகுக்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…! என்று நினைத்தேன்.
கடைசியில் எல்லோரும்
ஆசையை வளர்க்கும் நிலையாகவே சென்று விட்டது. ஆக மொத்தம்…
1.ஒருவருக்குப் புரியக்கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அதை
அடுத்தவர்கள் புரிந்துவிடக் கூடாது என்று மடக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.
ஆரம்பத்தில்
பவானியில் இப்படித்தான் ஒரு அம்மாவிற்குக் காட்சிகளை எல்லாம்
காண்பித்தேன். பெற வேண்டும் என்ற ஆசை அந்த அம்மாவிடம்
இருந்தது.
அந்த அம்மா
மூலமாகவே மற்றொருவருக்கு நோய்களைப் போக்கும்படிச் செயல்படுத்தியது. அங்கு ஆசையை ஏற்படுத்தியது.
ஆசை ஏற்பட்ட பின் அதன் வழி தியானத்திற்கு வருகின்றது.
தோஷங்களை எப்படி நீக்குவது…? என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தது.
அடுத்து என்னைக் கேட்காமலே பல வேலைகளைச் செய்யத் தொடங்குகிறது.
ஆனால் கடைசியில்
தன்னிச்சையாக அதைச் செயல்படுத்திய பின் அணிந்திருக்கும் சேலை எல்லாம் ஓட்டை ஓட்டையாக விழுந்து விட்டது… உடலில் காயமாகவில்லை.
அதற்குப் பின்
அந்த அம்மாவிடம் சொன்னேன். ஆரம்பத்தில் உனக்கு எல்லாம் தெரிய
வைத்தேன். அதை வைத்துத் தோஷங்களை நீக்க வேண்டும் என்று
எண்ணுகின்றாய்.
1.ஆனால்
அது எப்படி உன் வழியில் திரும்ப வருகின்றது பார்...
2.அதிலிருந்தெல்லாம் காக்கக்கூடிய குருவினுடைய சக்தி உனக்கு வேண்டும்
அல்லவா என்று தெளிவாக்கினேன்.
உதாரணமாக… ஒருவருடைய நோயைப் பற்றிக் கேட்டு விசாரிக்கின்றோம்.
நமக்குள் பதிவாகி விட்டால் நம்மையும் அந்த நோயின் உணர்வு இயக்குகின்றது.
அதே போன்று
1.யாம் உபதேசிக்கும்
அருள் உணர்வுகளைக் கூர்மையாக நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய பின் அதைப்
பெறும் தகுதி உங்களுக்கு தகுதி வருகிறது.
2.அந்த
தகுதி உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத் தான் உபதேசிப்பது.
எல்லோருக்கும்
அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது எனக்குள் மகிழ்ச்சி
வளர்கின்றது. அதே போன்று நீங்களும் செய்தீர்கள் என்றால் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும்
தோன்றும்.
கடும் தவமிருந்த அந்த மகா ஞானிகளுடைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும்… பேரின்பத்தைப் பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன். அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.
1.ஒன்று
பதிவு
2.மீண்டும்
நினைவு…!
3.அந்த
நினைவு கொண்டு நீங்கள் அதை வளர்க்க முடியும்.
4.ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள்
வளர்க்க வேண்டும்.
ஆக
வாழ்க்கையில் எது வந்தாலும் அதை நான் சீர்படுத்துவேன் என்று வலுப் பெறுங்கள்… அதைச் செம்மைப்படுத்த
முடியும். ஆசை ஒரு பக்கம் எண்ணம் ஒரு பக்கமாக சென்று
கொண்டிருந்தால் முழுமை பெறுவது கஷ்டம்.
ஆகவே கொடுத்த
ஞான வித்தை வளர்க்கும் நிலைக்கு… அந்த வளர்ச்சிக்கு நீங்கள்
கொண்டு வர வேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெருக்க வேண்டும்.
1.அந்த அருள் வழியிலேயே வாழ வேண்டும் என்று
2.நாம் என்றைக்குச்
செயல்படுத்துகின்றோமோ… அதை நிச்சயம் பெற
முடியும்.