ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2025

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்


வீட்டை அழகாகக் கட்டுகின்றோம் தூசி பட்டால் தூய்மைப்படுத்துகின்றோம். ஆடைகளை அழகாக அணிகின்றோம் அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம். நம் உடலில் அழுக்குப்பட்டாலும் குளித்து விடுகின்றோம்.
 
அப்போது நம் ஆன்மாவில் அழுக்குப்பட்டால் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…! அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். உபதேசத்தைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
 
ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம் உபகாரமும் செய்கின்றோம் அவர் வேதனைப்படுவதை நம் கண்கள் பதிவாக்குகின்றது மீண்டும் நினைவாக்கும் பொழுது கண் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
 
ரேடியோ டிவி இவைகளுக்கு ஏரியல் ஆண்டன்னா இருப்பது போன்று
1.நமது கண்கள் இந்த உடலுக்கு ஆண்டென்னாவாகச் செயல்படுகின்றது.
2.பதிவு செய்ததை மீண்டும் எண்ணும் பொழுது காற்றிலிருந்து கவருகின்றது.
3.அதனால் தான் அதைப் பரமாத்மா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.கண்களைக் கண்ணன் என்று பெயர் வைத்தாலும் கண்ணன் - திருடன்…” என்று விளக்க உரை கொடுக்கின்றார்கள்.
 
ஒருவன் நல்லதைச் செய்கின்றான். நாம் உற்றுப் பார்த்தால் நல்லது செய்யும் உணர்வினைக் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புனோ அவன் உடலிலிருந்து வெளிப்படும் அந்த நல்ல உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது.
 
மோதிய உணர்வுகள் அந்த நல்லது நம் ரத்தத்தில் கலக்கின்றது. நல்லது செய்யும் உணர்வுகளை இதே கண்கள் தான் கவர்கின்றது திருடுகின்றது. அதே உணர்ச்சிகள் மீண்டும் இயக்கப்பட்டு நல்லது செய்ய வேண்டும்…” என்று எண்ணம் வருகின்றது.
 
ஒருவன் கோபமாகப் பேசுகின்றான். கருவிழி ருக்மணி அந்த கோக்காரனைப் பதிவாகிய பின் அந்தக் கோபத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இதே கண்கள் தான் அந்த காரமான உணர்வினைத் திருடுகின்றது.
 
அதனால் தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகிறான் என்று காட்டுகின்றார்கள். இப்படிப் பிறருடைய தீமைகளை எடுக்கப்படும் பொழுது அதை கவர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.
 
நாம் எத்தகைய மனிதனாக இருப்பினும் கண் கொண்டு ஒருவரை உற்றுப் பார்த்தால்
1.அந்த உயர்ந்த குணங்கள் வரும் பொழுது உணர்வின் தன்மை பதிவாக்கி நாமும் உயர வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.
2.ஆனால் தவறு செய்கிறான் என்ற உணர்வினை நுகர்ந்து கொண்ட பின் அதே உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.
 
அந்த வெண்ணையைத் திருடிய பின் அதன் உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இது எல்லாம் கண்களுக்குள் நடக்கக்கூடிய இயக்கங்கள்.
 
அது தான் பரமாத்மா…!
1.நமக்கு முன் பரவிக் கிடக்கக்கூடிய நிலையினைக் கண்கள் இழுத்துக்வர்ந்து
2.நமக்குள் ஒவ்வொன்றையும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கண்களுக்குக் காரணப் பெயர் வைத்துத் தெளிவாக்கி உள்ளார்கள்.
 
அடிக்கடி வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் என்ன ஆகும்…? வேதனை என்ற அந்த விஷத்தின் தன்மையால் நரம்புகள் வழி கூடி நல்லதைச் சிந்திக்கும் தன்மைகள் இக்கப்பட்டு கண்கள் இருண்டு விடுகின்றது குருடாகி விடுகின்றது.
 
வேதனைகளை அதிகமாகச் சுவாசித்தால் உயிரிலே பட்டு நம் ரத்தத்தில் கலந்து உடலில் விஷத்தின் தன்மை பாய்ந்து விடுகின்றது.து தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று இதே உணர்வுகள் வப்படும் பொழுது அதற்குத் தக்க இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
 
கண்கள் இருண்டு விட்டால் நாம் எதைப் பார்க்க முடியும்…? பார்க்க முடியாது.து எல்லாம் எதனால் வருவது…? நாம் சுவாசித்ததனால் வருவது. சுவாசித்ததை உயிர் தான் உருவாக்குகின்றது.
 
அதை மாற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
நம் உடல் நஞ்சை எப்படி மலமாக மாற்றியதோ… ஆறாவது அறிவு வாழ்க்கையில் வந்த நஞ்சினைப் பிரிக்கும் சக்தி பெற்றது.
1.விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சையும் வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது. துருவத்தின் வழி பூமி வருகின்றது.
 
அதைப் பெறச் செய்வதற்கு தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம். அதை ஆழமாகப் பதிவு செய்த பின் நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யக்கூடிய பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். த்தகைய வேதனையாக இருந்தாலும் தீமையான உணர்வாக இருந்தாலும் அதை ஒடுக்கி தீமை புகாது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.