ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2025

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்


ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?
 
1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலேட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.
 
மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.
 
அதனால் தான் கண்களை அதாவது கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.
 
ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.
 
அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.
 
கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.
 
உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.
 
இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.
 
வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும் அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
 
தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.
 
1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.