
விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!
அன்றாட
வாழ்க்கையில் நாம் எப்படித்தான் இருந்தாலும் பிறருடைய துன்பங்களைப்
பார்க்கவோ கேட்கவோ நேர்கின்றது. சுவாசத்தின் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வந்து விடுகிறது. அதை நீக்குவது யார்…?
1.எதிலே எடுத்துக் கொண்டாலும் “விஷம்…” எல்லாவற்றிலுமே ஊடுருவி இயக்கும்.
2.நல்ல
குணங்களாக இருந்தாலும் ராமா லட்சுமணா என்று தான் ஞானிகள்
காட்டியுள்ளார்கள்.
3.லட்சுமணா…! என்றால் விஷத்தின்
இயக்கச் சக்தி.
மனித
உடலுக்குள் விஷத்தை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தான நிலைகள் சீதா ராமனாக நல்ல குணங்கள் இங்கே படைத்திருந்தாலும் அதே குணத்தைச் சுவாசிக்கும் பொழுது காற்றிற்குள் இருக்கக்கூடிய
1.அதாவது
இந்த விஷம் கலந்திருந்தால்தான்
2.நாம்
சுவாசித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாக வருகின்றது.
வேதனை என்ற
உணர்வு லட்சுமணா என்ற
இயக்கமாக வருகின்றது. இதைப் போல நமக்குள் அது
இருக்கின்றது.
பேரண்டம் பெரும் நிலைகள் கொண்டு உருவானாலும்
1.இந்த
அசுர சக்திகளால் தான் மற்றொன்றை இயக்க
முடிகிறது.
2.பூமிக்குள்
இருக்கக்கூடிய விஷத்தினுடைய ஆற்றல் தான் இந்தப் பூமியையே சுழலச் செய்கின்றது.
அதே போல
சூரியன் இவ்வளவு
பிரகாசமாக ஆக வேண்டுமென்றால்
1.விஷத்தின்
தாக்குதல் கொண்டு தான் சூரியன் வேகமாக இயங்கி
2.ஒளிப்
பிளம்பாக மற்றொன்றை “ஊடுருவிச் செல்லும்…”
அதாவது அந்த வேகம் துடித்து எழுகின்றது.
3.ஆகவே இந்த
விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!
அதற்குத்தான்
அன்று ஒரு சிறு கதையை எழுதிக் காட்டினார்கள் அசுரன் என்பவன் ஈரேழு பதினாலு
லோகத்திலும் “எனக்கு யாரிடத்திலும் இறப்பு
வரக்கூடாது…” என்று வரம் கேட்கின்றார்.
ஈரேழு பதினாலு லோகம் என்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய ஆற்றல் ஏழு… மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் நிலைகள் ஏழு.
ஈரேழு பதினாலு லோகம் சூரியனால் உற்பத்தியாகும் எந்த நிலைகளிலிருந்தும் எனக்கு எந்த
இடைஞ்சலும் வரக்கூடாது. மனிதனுக்குள் வரக்கூடிய விஷத்தின்
தன்மை எதுவும் என்னை அழித்துவிடக் கூடாது என்று வரத்தைக் கேட்டு வாங்கிக்
கொள்கின்றான்.
விஷ்ணுவும்
சரி என்று கொடுத்து விடுகின்றார்.
மிருகத்தாலும்
மனிதனாலும் பரந்த வெளியிலும் பேரண்டத்தில் எது இருந்தாலும் இந்த ஈரேழு பதினாலு லோகத்தில் எங்கேயுமே எனக்கு இறப்பு வரக்கூடாது என்ற வரத்தை வாங்குகிறான்.
1.நாம்
சுவாசிக்கும் சுவாசத்திற்குள்ளும் இந்த அரக்க குணம் உண்டு.
2.அந்த
உணர்வின் வேகம் இல்லை என்றால் துடிப்பு
இல்லை.
3.எந்த இடத்திலும் விஷத்தின்
தன்மை படரவில்லை என்றால் இயக்க முடியாது.
4.அப்படிப்பட்ட
ஆட்சி புரியக்கூடிய நிலைகள் தான் அது.
நரசிம்ம
அவதாரம்…
என்று வாசல்படியில் வைத்து அசுரனைக் கொல்வதாகக் காட்டுகின்றார்கள்.
சிங்க முகத்தையும் மனித உடலையும் வைத்து நரசிம்ம அவதாரம் என்று காட்டுகின்றார்கள்.
உதாரணமாக
ஒருவர் கெடுதல் செய்கின்றனர்… என்னைத் திட்டுகின்றார். அதை நாம்
சுவாசித்தால் என்ன செய்கிறது…?
என்
உடலுக்குள் அந்த அசுர சக்திகள் சேர்ந்து… அந்த வேகத்தைக் கூட்டி… அவருடைய கெட்ட குணத்தை எனக்குள் உண்டாக்கி.. என்னை அதன் வழிக்கு இழுத்துச் செல்கிறது.
இதைத்
தடுப்பதற்கு…
1.ஈஸ்வரா
என்று உயிர் வழியாக மெய் உணர்வுகளைச் சேர்க்கப்படும்
பொழுது அது வாசல்படி ஆகிறது.
2.முன்னாடி இருக்கும் அந்தக்
கெட்ட சக்தி உள்ளே புகாதபடி தடுக்கும் ஆற்றல் வருகிறது.
இதைத்தான்
நரசிம்ம அவதாரம் என்பது.
வராகன் கெட்டதை எண்ணாது
நல்லதை எப்படி எடுத்துக் கொண்டதோ அதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு கெட்டதை
நீக்கிவிட்டு நல்லதை உருவாக்க வேண்டும்.
கெட்டது
தனக்குள் வராதபடி எவர் ஒருவர் இப்படித் தடுக்கின்றார்களோ அது நரசிம்ம
அவதாரம். கேட்டது அழிக்கப்பட வேண்டும் என்று வாசல்படியில் வைத்து அழித்து விடுகின்றார்கள்.
பிறர் யார் எப்படித்
திட்டினாலும் கேவலமாகப் பேசினாலும் அந்த உணர்வு அப்படியே இயக்கினால் “இனி என்ன வாழ்க்கை…!” என்று நம்மை அது அழித்து விடுகிறது. அந்த அசுரனிடம்
சிக்கிவிடுகின்றோம்.
அதே சமயத்தில் திட்டுகிறார்
என்று கோபம் நமக்கு வந்தால் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று அவரை
அங்கே அழிக்கச் செல்வோம். ஆனால் அழிக்க
வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நல்ல குணங்களை அழித்து
உடலில் நோயாக மாற்றுகின்றது.
ஆகவே…
1.அந்த
அசுர சக்தி இப்படித் தான் எல்லா வகைகளிலும் ஊடுருவும் என்று
2.அவன்
எங்கேயும் எனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தை வாங்கி அந்த
அசுர சக்தி மற்றதைக் கொல்வதாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.
ஆனால்
1.நம் கண்ணின் நினைவைப்
புருவ மத்தியில் வைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அசுர சக்திகள் செயலிழக்கப்படுகின்றது.
நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் நரசிம்ம அவதாரத்தை அன்று காட்டினார்கள்
ஞானிகள்.