ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2025

சத்தியவான் சாவித்திரி

சத்தியவான் சாவித்திரி


வீட்டில் கணவன் மனைவி வாழுகின்றார்கள். கணவனுக்கு அலுவலகத்தில் யாராவது இடைஞ்சல் செய்யும் நிலைகள் அதிகமாகி விட்டால் வீட்டில் மனைவி என்ன செய்ய வேண்டும்?
 
மனைவி ந்த மாதிரி நேரங்களில் ஈஸ்வராஎன்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்தத்தில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று எண்ண வேண்டும்.
 
பின் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் பெற வேண்டும். அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று இதை உடலுக்குள் சமைத்துக் கணவரிடம் நல்லது நடக்கும்…” என்று சொல்லிப் பாருங்கள்.      
1.அவரால் இதை எண்ண முடியவில்லை… மனைவி இதைச் செய்ய வேண்டும்.
2.இரண்டு உயிரும் ஒன்றானால் இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றாகின்றது. 
3.உணர்வு ஒன்றியபின் கணவரைப் பாதுகாக்கும் உணர்வை மனைவி செய்யவேண்டும்.
4.இது தான் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்  என்பது.
 
சங்கடம் வேதனை, என்ற உணர்வுகள் வரும் பொழுது அது நோயாக மாறி மனிதனை முடித்துவிடும் எமனாக மாறுகின்றது. இதை மாற்ற வேண்டும்.
 
எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ வேண்டும். அப்படியென்றால் கணவனும் மனைவியும், “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர வேண்டும். ..”
 
நளாயினி போன்று என்கிற போது கணவருக்கு ஒரு சங்கடம் வரும் பொழுது அதை நிவர்த்திக்கக் கூடிய சக்தியாக…” அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை மனைவி எடுக்க வேண்டும்.
 
சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும்.
1.கணவர் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அவருக்கு நல்ல எண்னம் வரவேண்டும் என்றும்
2.அவர் பார்ப்பது எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் என்றும்
3.அவர் சொல்லைக் கேட்போரெல்லாம் இனிமை பெற வேண்டும் என்றும் பெண்கள் எண்ண வேண்டும்.
 
அப்பொழுது அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கும். நல்ல சிந்திக்கும் தன்மை வரும்.
 
கணவன் மனைவி வேதனைப்படும் பொழுது, அந்த வேதனை என்ற உணர்வுகள் இருவரையும் சிந்திக்க முடியாமல் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெற வேண்டும் ங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி உடலுக்குள் சேர்த்தவுடன் கணவருக்கு, அதைப் பாய்ச்ச வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருளால் அவர் சொல்வதெல்லாம் நலம் பெற வேண்டும்,
2.அவர் பிறர் போற்றும் நிலைகள் பெற வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
 
அந்தப் பழக்கத்திற்கு வரவேண்டும்.
 
தியானம் என்பதுஇதுதான் தியானம்.
1.உட்கார்ந்து சதா எண்ணுவது, தியானமல்ல.
2.அந்த அருள் சக்தி பெறுவதும் அதை இயக்குவதும்தான் தியானம்.
 
நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் ஆனபின் சிக்கலென்ற உணர்வு வருகின்றது. நுகரும் உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைதான் கூடும். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது.
 
மெய் ஞானிகள் காட்டியது
1.பிறரின் உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது நம் நல்ல உணர்வுகளை உடைத்து, உள்ளுக்குள் சென்று விடுகின்றது
2.அந்த வேகமான உணர்வுகள், நமக்குள் வராதபடித் தடுக்க வேண்டுமென்றால்
3.அருள் உணர்வை நாம் அடிக்கடி சேர்த்து இணைக்க வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெற வேண்டும் என்று செருகேற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நமக்குப் பாதுகாப்பான நிலைகள் வரும்.
 
மக்குள் தீமை வராது, தடுத்துப் பழகுவதுதான் தியானம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் சேர்த்துவிட வேண்டும்.
 
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது தீமையிலிருந்து விடுபடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து வந்தோம். தீமையை நீக்கிய, துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
1.இந்தப் பதிவு கொண்டு துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.காற்றில் கலந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பயன்படுத்தும் பொழுது
3.நாம் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேருகின்றோம்.
 
ஆயுள் கால மெம்பர் குடும்பத்தில் யாம் சொன்ன மாதிரி கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை சுட்டித்தனமாக இருந்தால் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணி மாற்ற வேண்டும்.
 
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அதை எப்படிச் சரி செய்ய வேண்டுமென்ற நல்ல சிந்தனை வரும்.
 
கணவனும் மனைவியும் இந்தத் தியானத்தை எடுத்துக் கணவருக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும், தொழிலில் நல்ல வீரிய சக்தி பெறக்கூடிய உணர்வு வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
 
அவர் மனம் வலிமையாக இருக்க வேண்டும், எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும், அவர் செயல்களை அனைவரும் போற்றும் நிலைகள் வரவேண்டுமென்று எண்ணிப் பாருங்கள். எந்த வியாபாரமானாலும் அவரிடத்தில் பொருள் வாங்குவோர் எல்லாம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணிப் பாருங்கள். 
 
மனைவி இப்படி எண்ணினால்
1.வேறு யாரிடத்திலும் யோசனை கேட்க வேண்டியதில்லை. 
2.இந்த உணர்வுடன் கணவர் எங்கு சென்றாலும் எல்லாக்  காரியத்திலும் வெற்றி பெறலாம்.
3.நாம் இந்த மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும்அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.
 
மற்றவரிடத்தில் இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வு அங்கேயும் விளைய வேண்டும். அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் வெளிப்படுத்தும் மூச்சு நல் உணர்வாகப் படர வேண்டும்.
 
நம் தெருவிற்குள் நல்ல உணர்வலைகள் பரவ வேண்டும். அப்பொழுது ஒன்றுபட்டு வாழும் நிலை வரும். ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழ வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.
 
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளினார்.
1.அவர் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க வேண்டும். 
2.அவர் துருவ நட்சத்திரத்தின் அங்கத்தினர்… அவர் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி பட இருள் நீங்கும்.
3.ந்த அருளைப் பெற இருளை அகற்றும் சக்தியை நாமும் பெறலாம்.