ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 1, 2025

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”


உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது உள் புகுந்த விஷமான சக்திகளை அதனுடைய வலுவை இழக்கச் செய்வதற்குத் தான் கூட்டு தியானங்களில் யாம் உங்கள் எல்லோர் குரல்களையும் எழுப்பச் சொல்லியது.
 
அவ்வாறு வெளிப்படும் அந்த குரலின் தன்மைகளைக் காந்த புலன்கள் கவர்ந்தாலும்
1.வீட்டிற்குள் புவியின் ஈர்ப்புக்குள் அந்தக் காந்தப் புலன்கள் சங்கடம் சலிப்பு வேதனை இவைகள் பதிந்திருப்பதை
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு கூட்டு தியானத்தில் எல்லோரும் குரல்களை எழுப்பப்படும் பொழுது
3.அந்தத் துன்ப அலைகளை இது வீழ்த்தி நல்ல உணர்வுகளைப் படரச் செய்வதும்
4.நாம் எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த உணர்வுகள் வீட்டுச் சுவர்களில் இருக்கும் காந்தப் புலன்கள் கவர்ந்து
5.வீட்டிற்குள் எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியூட்டும் உணர்வாகப் பெறச் செய்யும்.
 
அதற்குத்தான் வீடுகள் தோறும் கூட்டுக் குடும்பத் தியானங்களைச் செயல்படுத்தும் படிச் சொல்வது.
 
சூரியன் எப்படிப் பிரபஞ்சத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியின் தன்மையாகத் தனக்குள் எடுத்துச் செயல்படுத்துகின்றதோ அதைப் போல நாம் ஒருங்கிணைந்த நிலையில் செயல்படுத்துவதற்கு அன்றைய ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி குரலை எழுப்பிக் கூட்டுத் தியானத்தைச் செயல்படுத்தும் படிச் சொல்கின்றோம்.
 
காரணம்
1.தனி ஒரு மனிதன் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.
2.பல அலைகளை உணரும்படி செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு தான்
3.நாம் கூட்டுத் தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் மூலமாக ஒலிகளைப் பரப்பச் செய்து
4.வரக்கூடிய விஞ்ஞான நச்சுத்தன்மைகள் நம்மை அணுகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
 
பூமிக்குள் பிற விஷத்தின் தன்மைகள் உள்ளே புகாது ஓசோன் திரை எப்படி அமைகின்றதோ அதைப் போன்று
1.எத்தகைய நிலைகள் வந்தாலும் உங்களுக்குள்ளும் உங்கள் குடும்பத்திற்குள்ளும் அந்தத் தீமை புகாது பாதுகாப்புக் கவசமாக
2.ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்கள் ஆன்மாவிலே பெருக்கச் செய்வதற்கே இதைச் செய்கின்றோம்.
 
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
ஏதோ சாதாரணமாக இது கிடைக்கின்றது சாதாரணமாக விளக்கம் சொல்கின்றார் சாதாரண நிலைகள் பெறுகிறோம் என்று சாதாரணமாக எண்ணி விட்டு விடாதீர்கள்.
 
ஏனென்றால் எவ்வளவோ பணத்தைச் செலவழித்துப் பெற முடியாத  சக்தியை இவர் சாதாரணமாகச் சொல்கின்றார் நாம் அப்படிப் பெற்றுவிட முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.
 
நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் இதைக் கொண்டு வருகின்றேன். ஆகவே கூட்டுக் குடும்பத் தியானத்தினுடைய அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாகத் தியானியுங்கள்.
 
நாள் முழுவதற்கும் உழைக்கின்றோம்.
1.ஒரு பத்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துப் பெருக்கி உங்கள் வீடுகளிலும் பெருக்கி
2.எல்லோரும் அதே போல் கூட்டமைப்பாகப் பெருக்கப்படும் பொழுது மிக உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
3.உங்களைக் காக்கின்றீர்கள் குடும்பத்தைக் காக்கின்றீர்கள்
 
இப்படி ஒவ்வொரு குடும்பமும் தங்களைக் காத்துக் கொள்ளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.