ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2025

விண்ணிலே தோன்றிய நாம்… மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்

விண்ணிலே தோன்றிய நாம்… மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்


ஞானிகள் காட்டியது போல தீப ஒளித் திருநாள் அன்று தனக்குள் வரும் இருளை நீக்கி ஒளி பெறுவோம் என்று நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
 
உயிர் விண்ணிலே தோன்றியது ஒளியின் சுடராக…! அந்தத் தீப வழிப்படி நாம் விண் செல்லும் நிலையாக
1.இந்த உடலான ஆறாவது அறிவிலிருந்து மெய் ஒளியுடன் ஒளியாக
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சுடராக இணைத்து
3.ஒளிச் சரீரமாக உயிருடன் இணைந்து விஜயதசமி பத்தாவது அவதார நிலையை நாம் பெறுகின்றோம்.
 
ஏழாவது என்பது ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன்.
 
ஒருவன் திட்டி விட்டால் வன் இடைஞ்சல் செய்கின்றான் என்று எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்சை எல்லாம் நாமும் பேசுகின்றோம்.
 
அந்தப் பேச்சு தனக்குள் இயங்காத வண்ணம் டைப்படுத்துவதற்குத் தான் நாம் தியான வலுக் கொண்டவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கின்றோம்.
 
அப்பொழுது
1.இடைஞ்சல் செய்தான் என்ற உணர்வுகள் தன்னை இயக்காதபடி தடுத்து நிறுத்தி
2.“சிந்திக்கச் செய்யும் நிலையை…” அது செயல்படுத்தும்.
 
மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் சேர்த்து விளையச் செய்யும் பொழுது எட்டாவது நிலை ஆகிறது. அது உயிருடன் இணைக்கப்படும் பொழுது ஒன்பதாவது நிலை ஆகிறது.
 
மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லாவற்றிலும் இணைக்கப்படும் பொழுது இருளைத் தடைப்படுத்தி அதை ஞானமாக்கி ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.
 
உயிர் ஒளியாக இருக்கின்றது. உணர்வுகள் ஒளியாகி இந்த உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது தசமி.
 
மனிதனாக இருக்கும் நாம் இப்பொழுது செடி கொடி தாவர இனங்களில் விளைந்தவற்றை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.
 
ஆனால் இந்தப் பூமியில் இருந்து விண் செல்லும் நிலையில் பல பேரண்டங்களிலிருந்து வரக்கூடிய சக்திகளைப் பெறும் தன்மையாக… இந்தச் சூரிய குடும்பமான… பிரபஞ்சத்திற்கு வெளியே தான் இந்த உயிரான்மா ஒளியாகச் செல்கிறது.
 
இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியிலே சென்று
1.மற்ற பேரண்டங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்தப் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சக்தி பெற்றோமோ அங்கே இந்த உயர்ந்த சக்திகளை அனுப்பி
3.இந்தச் சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
4.அதே சமயம் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகளை ஒளியாக மாற்றி
5.பேரண்டத்திற்கே வழிகாட்டும் உணர்வின் அலைகளாக அதைச் சேர்க்கும் நிலைகள் பெற்றது தான் மனிதனின் கடைசி நிலை.
6.”தீப ஒளி…” என்ற அத்தகைய வழிகளில் நாம் செல்வோமேயானால் விண்ணிலே தோன்றிய நாம் மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்.