ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2025

கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்

கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்


திடீர் சாமிகள் (தெய்வங்கள்) இன்று உருவாவதைப் பார்க்கலாம்.
 
தனக்குப் பணம் வேண்டும் என்று சொன்னால் எதையாவது ஒரு சிலையை அவர் ஆற்றுக்குள் புதைத்து வைத்து விடுவார். பின்புஇரவு கனவிலே வந்து ஆண்டவன் கோவில் கட்டச் சொன்னார் என்று ஒரு நாலைந்து பேரிடம் சொல்வார்கள். இதைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உருவாக்கிய பின் என்னால் இம்சை தாள முடியவில்லைங்க…!” என்று இவர் சொல்வார்.
 
நாலைந்து பேருக்குச் சொன்ன நிலைகள் பின் ஊரில் உள்ளவருக்கெல்லாம் சொல்லி
1.எப்படியோ பார்க்க வேண்டும் என்று சொல்லி தெரியாத மாதிரி அலைகிற மாதிரியே…” செய்து கொண்டே இருப்பார்.
2.அப்புறம் கண்டுபிடித்துப் போகிற மாதிரி இந்த இடத்தில் இருக்கின்றது அந்த இடத்தில் இருக்கின்றது சொல்வார்கள்.
3.அப்படிச் செய்யும் போது ஆஹா வந்தாயிற்று…! கனவில் சொன்ன மாதிரியே சிலை கிடைத்து விட்டது…!
 
இந்தச் சிலையை எடுத்துக் கோவிலைக் கட்டி அங்கே பிரதிஷ்டை செய்தால் செய்தால் உனக்கு இன்னென்னது கிடைக்கும் என்று இவர் எதைச் சொல்கின்றாரோ அது நடக்கும்.
 
இவர் சொன்ன ஆசைகளை வைத்து அந்த முருகனுக்குக் கோலாகலமாக விசேஷங்கள் நடக்கும். அப்போது யார் இதைச் சொன்னார்களோ அவர்களுக்குப் பணம் கிடைக்கும்.
1.எண்ணிய ஆசைகள் இங்கே வளரும்.
2.பின் சிறிது நாள் சென்று விட்டால் அந்தச் சாமியும் போய்விடும்.
 
இது நடந்த நிகழ்ச்சி. சில இடங்களில் இப்படியும் நடக்கிறது.
 
இதே மாதிரி எந்த ஆசையை உருவாக்கிப் பிறரிடத்தில் பதிவு செய்கின்றோமோ அந்த உணர்வு தான் வருகின்றது.
 
ஒரு இடத்திலே… “கற்பூரத்தைக் கொளுத்தி ஆயிரம் ஆடுகளை வெட்டுகிறார்கள்…!” என்று சொன்னவுடன் அங்கே கூட்டம் போய்க்கொண்டே இருக்கின்றது.
 
மனிதனுடைய ஆசை எப்படி இருக்கின்றது…?
 
எனக்கு என் காரியம் ஜெயித்தது…! அவன் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கின்றான்.வனை மடக்க ஆயிரம் ஆடுகளை நான் வெட்டுகின்றேன் என்று இப்படிச் செய்கின்றார்கள்.
 
இதைக் கேள்விப்பட்ட பின் வேடிக்கை பார்க்க அங்கே கூட்டம் அதிகமாகின்றது.
1.காரியமில்லாமலா அங்கு செல்கின்றார்கள்…! என்று இந்த உணர்வு பதிவான பின்
2.நான்கு ஆண்டு மூன்று ஆடு அவரவர்கள் வசதிக்குத் தக்கவாறு அங்கே வெட்டுகின்றார்கள்.
 
மனிதன் தனக்குள் உருவாக்கக்கூடிய உணர்வுகள் இப்படி வந்த பின் இது எல்லாமே நடக்கின்றது.
 
அதே சமயத்தில் அந்த இடத்திலே அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் யார் கடை வைத்தது வியாபாரம் செய்தாலும் அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டும்.
 
கற்பூரம் இந்த இடத்தில் தான் வாங்க வேண்டும் என்பார்கள். இவர்கள் வாங்கி அதைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி அதற்கு மேல் வைத்து விற்றுக் கொள்ள வேண்டும்.
 
அந்த இடத்தில் இல்லாதபடி சிறு தூரத்தில் கடை இருந்தாலும் கூட அவர்களுக்கு நன்றாக வியாபாரம் நடந்தால் எங்களுக்கு நீங்கள் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.
 
1.ஏனென்றால் நான் வைத்திருக்கும் சாமியைப் பார்க்கத்தான் இந்தக் கூட்டம் வருகின்றது
2.அந்தக் கூட்டத்தால் தானே உனக்கு வியாபாரம் ஆகிறது.
3.ஆகையினால் எனக்குப் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்.
4.இப்படித் தெய்வங்களை உருவாக்குபவர்கள் ஏராளம்.
5.மனிதனுடைய ஆசைகள் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி கடவுளை உருவாக்கி
6.கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்.
 
ஆகையால் இது போன்ற இடங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும்.
 
இரவு கனவிலே வந்தார் விநாயகர் சிலையை இங்கே வைக்கச் சொன்னார். இன்ன இடத்தில் இருக்கிறது என்று காட்டினார்.
 
நான் திருடிக் கொண்டு வந்து வைத்தேன். அதற்கு மாலை எல்லாம் போட்டுப் பூஜை செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னார். இதே போன்று அதை வணங்குபவர்களுக்கு இன்னதெல்லாம் கிடைக்கும் என்று சொன்னார் என்று இப்படிப் பதிவு செய்து விடுகின்றார்கள்
 
இந்த அடிப்படையில் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று நாம் பக்தியில் வணங்கிக் கொண்டுள்ளோம்.
 
இந்தச் சாமியினால்…” தனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா…? என்ற இந்த நிலைகளுக்கு வந்து விட்டார்கள்.
1.நம்மால் பிறருக்கு நன்மை கிடைக்குமா…? என்ற
2நல்ல சிந்தனைகள் அனைத்தும் காலத்தால் அறவே மறைந்து விட்டது.