
“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்
இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம்
எத்தனையோ பேரைப் பார்க்க நேருகின்றது… சந்திக்க
நேர்கிறது. “அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று நாம் தவம் இருக்க வேண்டும்.
“என்னைப் பார்ப்போருக்கெல்லாம்… நான் பார்ப்போருக்கெல்லாம்…”
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த
நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
என் பையன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில்
1.கஷ்டத்தை நினைத்துச் சொன்னீர்கள்
என்றால் முதலில் இந்தக் கஷ்டம் வரும்.
2.இது கலந்த உடனே மீண்டும் அந்த நினைவைத்
தான் தூண்டும்.
ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார் என்றால்…
1.அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள்
என்றால்
2.விஷத்துடன் கலந்து மீண்டும் அவன்
செய்தது தான் நினைவுக்கு வரும்.
ஆகவே அதை நாம் மறக்க…
1.மகரிஷிகள் அருள் சக்திகளை முதலிலே எண்ணி
எடுத்து
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் என்னைப் பார்ப்போருக்கெல்லாம்
3.நான் நினைப்பவர்களுக்கெல்லாம் என்னை
நினைப்பவர்களுக்கெல்லாம்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க
வேண்டும் என்று நாம் இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள்
உருவாக்குகின்றோம்.
எனக்கு எந்தெந்த சக்திகளைக் குருநாதர் எப்படிக்
கொடுத்தாரோ அந்த முறைப்படித் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
முன்பெல்லாம் சிறுகச் சிறுகச் சொல்லி நினைவாற்றலை ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது
1.அது அனைத்தையும் ஒன்றாக இணைத்து
ஒருமித்த நிலைகளாக நினைவாற்றல் கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் குரு அருளால் மகரிஷியின் அருள்
ஒளியைப் பெற்று இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் நிலைகளாக அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
ஆலயத்திற்குச் சென்றாலும் அல்லது மற்ற
குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அங்கே நாம் களைத்துப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போய்
அமர்ந்த உடனே அந்தக் களைப்பால் “உஸ்ஸ்ஸ்… அப்பா…!” என்ற பெருமூச்சாகச்
சோர்வின் தன்மையை வெளிவிடுகின்றோம்.
அப்பொழுது அந்த நேரத்தில் அந்த இடத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
எடுத்து
2.இந்த இடம் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்.
3.இந்தக் குடும்பங்கள் முழுவதும் மகிழ்ச்சி படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
எந்த நோயாளியைப் பார்க்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
என்று உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர் உடல் நலம் பெற வேண்டும்
அவர் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.
காலையில் எழுந்திருக்கும் பொழுதும் மற்ற அலுவல்களுக்குச் செல்லும் பொழுதும் தொழில் செய்யும் பொழுதும் இரவு படுக்கப் போகும் முன்பும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில்
மகிழ்ந்து வாழ வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.
தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
அங்கே மகிழ்ந்த நிலை உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள். எந்தத் தொழில் செய்தாலும் இதைப் போல் நினைவில் கொள்ளுங்கள்.
1.உணவு உட்கொள்ளும் பொழுதும் அந்த உணவுக்குள் மகரிஷிகள்
அருள் சக்தி படர்ந்து
2.அந்த உணவு எனக்குள் “உடல் நலம் பெறும்
சக்தியாகப் பெருக வேண்டும்…” என்று
எண்ணுங்கள்.
மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்க்க நேர்ந்தால்
அல்லது கேட்க நேர்ந்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள்
வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.
1.நம்மை யார் துன்புறுத்தினாலும் அவர்களுடைய உணர்வு நமக்குள் பதிவாகாதபடி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு
3.என்னைப் பார்ப்பவருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப்
போன்ற மணம் பெற வேண்டும்
4.என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
5.எல்லோரும் போற்றும் நிலையாக அவர் வளர வேண்டும் என்று எண்ணத்தைப் பரப்புங்கள்.
உடலில் உபாதைகள் எது இருந்தாலும் அந்த
உபாதைகளை எல்லாம் மறந்து விடுங்கள்…!
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா
ஜீவணுக்கள் பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.புருவ மத்தியில்
எண்ணி உணர்வுகளை உடலுக்குள் கொண்டு போங்கள்.
2.உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
நம் இன்னொன்றையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
குடும்பத்தில் கர்ப்பமற்றிருக்கும் காலங்களில் தத்துவங்களைப் போதித்தும்
1.விண்ணுலக ஆற்றலை… அந்த அகஸ்தியன்
கண்டறிந்த உணர்வைச் சிலரும்
2.வியாசகர் காட்டிய தன்மையைச் சிலரும் “கருவிலே வளரும் குழந்தையிடத்தில் உருவாக்கினார்கள்…”
பண்டைய காலத்தில் இவ்வாறு வளர்ந்தவர்கள் அனைவரும் “தவயோகிகளாகவும் பெரும்
ரிஷிகளாகவும் உருவாக்கப்பட்டு…” அந்தக் குழந்தைகள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அதை வளர்த்த தாய் தந்தையர் பிறவா நிலை
அடையவும் அதுவே காரணமாக அமைந்தது.
தன்னால் முடியவில்லை என்றாலும் கருவிலே வளரும்
குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட சக்தியை அன்று உருவாக்கினார்கள்.
1.இதைப் போன்ற கலாச்சாரத்தை நாமும் நம் குடும்பத்தில் கொண்டு
வந்து
2.அருள் ஞானிகளை உருவாக்கி அவர்கள்
துணையால் நாமும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
3.இனி வரக்கூடிய எதிர்கால சந்ததியினரும் அந்த வழியிலேயே வளரும்படி நாம் செய்தல் வேண்டும்.
ஆகவே
1.நம் குரு காட்டிய வழிகளில் அவர் ஆற்றலை நமக்குள் பெற்று
2.எல்லோருக்கும் மகிழ்ந்திடும் நிலைகள் பெற நாம் தியானிப்போம்
3.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.