
வள்ளி திருமணத்தில் உள்ள முக்கியமான தத்துவம்
சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகச் சாஸ்திரங்களிலே “வள்ளி திருமணத்தைக் காட்டுகிறார்கள்…”
வள்ளி திணைக் காட்டினைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாள். தான் விளைய வைத்த பொருளை பறவைகள் கொத்தித்
திங்காதபடி பாதுகாப்புக்காகக் காவல் புரிகின்றாள்.
அவள் யார்…? வேடுவனின் மகள்.
1.நாம் பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி… அதில் விளைந்த சக்தி தான் மனித உடலிலிருந்து
வெளிப்படக்கூடிய சக்தி வள்ளி
2.வல்லவன்… வல்லவி – வல்லி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள் வள்ளி என்று.
அதைத் தனித்துப் பிரித்துக் காட்டி
வள்ளி திருமணம் என்ற காவியமாகப் படைத்து “எது தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்…?” என்ற
நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
நாம் நினைப்பது அது காவியம் என்று…! ஆனால் சாதாரண மக்களுக்கும் புரியும் தன்மைக்குத் தான் அதைக் காட்டுகின்றார்கள்.
வேடுவன் என்றால் பல கோடிச் சரீரங்களில்
நாம் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் உடலில் உருப் பெற்ற ஆறாவது அறிவு. அது தான் வள்ளி.
திணைக்காட்டிலே காவல் இருக்கின்றது. தான் விளைய வைத்த
பொருளை மற்ற உயிரினங்கள் எடுத்துச் செல்லாது பாதுகாக்கின்றது. வெகு தூரத்திலிருந்து கவண் கொண்டு வீசுகின்றது.
நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாக்கும் நிலை வள்ளி.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்…
2.அதாவது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வலிமைமிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.
ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகு. நாம் மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள். அதைத்
தான் முருகன் என்றும்
1.தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு
வருகின்றது.
2.தன்னைப் பாதுகாக்கும் உணர்வை நேசித்தோம்
என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.
திணைக்காட்டில் குருவியை விட்டு விட்டோம் என்றால் அதிலே விளைவதைத் தின்றுவிடும்.
அது போல் நம்மை ஏசுவோரையோ மற்றவர்களையோ நாம்
எண்ணுகிறோம் என்றால் அந்த உணர்வுகள் நம்முடைய நல்ல உணர்வைத்
தின்றுவிடும்.
நாம் வேதனைப்படும்படியான சொல்லை ஒருவன்
சொல்லிவிட்டால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து… நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை நல்ல அணுக்களை
அது தின்றுவிடும்.
வேதனை என்று எடுத்துக் கொண்டால் உடலில் டி.பி.நோய் வருகின்றது நல்ல
அணுக்களை அது தின்று விடுகிறது.
அதனால் தான் வள்ளி…!
1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை நாம்
நேசித்தால் உடலுக்குள் சென்ற பின்… உயிர் அதைத் தெய்வ ஆணையாக
2.நமக்குள் அந்தக் காத்திடும் உணர்வின் செயலாக இந்த உடலை இயக்குகின்றது… அது தான் தெய்வானை.
இச்சா சக்தி…! தன்னைப்
பாதுகாக்கும் நிலைகளை இச்சைப்படும்
பொழுது இந்த உணர்வு நம் உடலுக்குள் சென்று கிரியை. எதன் எண்ணத்தால் நாம் இச்சைப்படுகின்றோமோ அதன் ஞானமாக இந்த உடலை இயக்கும்.
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று
தெளிவாக நமக்குச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.
என்னை இப்படிப் பேசி விட்டானே என்னைக் கேவலப்படுத்துகின்றானே என்ற நிலையில் அதை நாம் இச்சை
பட்டால் அவனை விடுவேனா என்ற நிலைகள் அதைக் கூட்டும் பொழுது
உடலுக்குள் இது தெய்வ ஆணையாகச் சென்று விடுகின்றது.
அவன் எந்தெந்தக் கெடுதல் செய்தானோ அது நமக்குள் புகுந்து
அதன் வழி நம்மை இயக்குகின்றது அதன் ஞானமாக நம் செயலும் உணர்வும் அணுக்களும் உடல் உறுப்புகளும் விளைகின்றது.
நாம் வள்ளி திருமணத்தைச் சாதாரணமாகப் பார்த்துச் சிரிப்பதிலும்
கைதட்டுவதிலும் தான் இருக்கின்றோமே
தவிர சாதாரண மக்களும் உள்பொருளைப் புரிந்து வாழ்க்கையில் நீ
எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உண்மையைக் காட்டக்கூடிய காவியத் தொகுப்பு தான் அது.
ஆகவே நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?
1.ஆறாவது அறிவின் வலிமையால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள்
பெற வேண்டும் என்று இச்சை அது மேலே பட வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தி நமக்குள் இருக்கும்
பொழுது தெய்வ ஆணையாக நமக்குள் செயல்படும் சக்தியாக வரும்
3.அதன் ஞானமாக அந்த உணர்வுகள் இந்த உடலில் இயக்கப்பட்டு அந்தப்
பண்பு கொண்ட நம்மை அந்த வழியிலே அது அழைத்துச் செல்லும்.
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி…! சொல் அது மூன்று தான்
ஆனால் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ
அதன் செயலாகக் கிரியை ஆகி அதன் ஞானமாக நம்மை வளர்க்கும்
என்ற பொதுச் சொல்லாகக் காட்டினார்கள்.
ஆகவே… எதிலேயும்… நாம் எதை இச்சைப்பட
வேண்டும்…? என்ற தத்துவம் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தன்னைக் காக்கும் வழிமுறை எது…? என்று அன்று
ஞானிகள் சொன்னார்கள்.
ஆலயத்திற்கு சென்று நம் குறைகளையும் துன்பங்களையும்
வேதனைகளையும் அங்கே சொல்லி
அதை வளர்க்கக்கூடாது.
ஆறாவது அறிவின் துணை கொண்டு… இந்த
ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற
வேண்டும்… அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.