
இனி வரக்கூடிய காலங்களில் “எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வை…” நமக்குள் வளர்க்க வேண்டும்
ஒவ்வொரு குடும்பத்திலும்
1.அவர்களுடைய கஷ்டங்களைப் பார்த்தால் தியானிக்க வேண்டும்…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தவம் இருக்க வேண்டும்.
3.நலமாக வேண்டும் நலமாக வேண்டும் என்ற இந்தத் தவம் அது நமக்குள் நல்லதாக்குகின்றது.
ஆகவே சரியாக்க வேண்டும் என்று தான் நாம் எண்ணுகின்றோம். கெட்டுப் போய்விட்டது கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல
வேண்டியதில்லை
வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் அதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி அதன்
மேல் நாட்டத்தைச் செலுத்தினால் அதைச் சீர்படுத்த முடியும்.
உடலிலே நோய் வந்து விட்டால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற
வகையில் எண்ண வேண்டும்.
2.”நோயைப் பற்றி எண்ணக்கூடாது…”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
வியாபாரத்தில் பணம் வரவில்லை என்றால் மகரிஷிகள் சக்தி பெற
வேண்டும் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தொழில் வருமானம் வர வேண்டும்… நமக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர
வேண்டும் என்று இதை நாம் பெருக்கிக்
கொண்டு வர வேண்டும்.
பணம் வரவில்லையே…! என்று எண்ணினால் அந்த
உணர்வு என்ன செய்யும்…? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
1.இந்த எண்ணத்தை அங்கே பாய்ச்சினால்
2.ரிமோட் கண்ட்ரோல் போன்று பணம் வரவு
வருவதைத் தடுத்துவிடும்.
நண்பர்களுக்குள் நன்மை என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. எனக்குத் துரோகம்
செய்தான் என்று எண்ணினால் புரையோடுகின்றது. பாசத்திலே பையனை எண்ணி அவனுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் தூண்டி அவன் முன்னாடி பாதை தெரியாதபடி பள்ளத்திலே காலை வைத்து அடிபடுகின்ரான்.
1.பாசத்தாலும் இயக்குகின்றது…
வெறுப்பாலும் இயக்குகின்றது.
2.இந்த மாதிரி நாம் வெகு தூரத்தில் இருந்தாலும் நம்முடைய
உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்கத் தான் செய்கின்றது.
பணம் ஒருவர் தரவில்லை என்றால் அவர் தரவில்லை என்று
சொல்லாதீர்கள்.
அவருக்கு வரவு வர வேண்டும் நமக்குக்
கொடுக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
இந்த உணர்வுகளை உந்திப் பாருங்கள் நாளடைவில் அவருக்கும்
வருமானம் வரும்… நமக்குப் பணத்தையும்
திரும்பக் கொடுப்பார்கள்.
ஆகவே
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் குறைகளை
நிவர்த்திக்கும் நிலைக்குத் தான் நம் எண்ணங்களை மாற்றிக்
கொண்டு வர வேண்டுமே தவிர
2.”கஷ்டம்…” என்று எண்ணி… “அதை மீண்டும் உருவாக்கக் கூடாது…”
எங்கள் தொழில் வளர வேண்டும்…
வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஒரு கெட்டவனே நம்மிடம் வந்து வேலை செய்கிறான் என்று வைத்துக்
கொள்வோம். அவன் திருடனாக இருக்கின்றான் என்றால் “அவன் திருடன்… திருடன்…” என்று
சொல்ல வேண்டியதில்லை.
நீ எங்கேயாவது சென்று நல்லவனாய் இரு… நல்லது செய்…! என்று அவனைப் போகச் சொல்லி
விட வேண்டும்.
அவன் திருடுவதைப் பார்த்து விட்டோம்.
1.பின் அந்த உணர்வே வளர்ந்து
கொண்டிருக்கும்.
2.அடுத்தவரிடம் நாம் இவன் மோசமானவன் என்று சொல்வோம்.
3.இவன் செய்ததை பின் அவனும் செய்யத்
தொடங்குவான்.
ஆகவே… நாம் அவனைப் பற்றித் தெரிந்து
கொண்டோம்.
நீ செய்வது தவறு என்று தெரிகின்றது… தவறைத் திருத்திக் கொள்…! நல்லபடி நடந்து கொள்… எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நல்வழியைக்
காட்டிச் செயல்படுத்துங்கள்.
1.அதிலே அவன் திருந்தவில்லை என்றால்
2.நீ எங்கேயாவது சென்று நல்லவனாக இரு…! என்று அவனை அனுப்பி வைத்து விட வேண்டும்.
கட்டுச் சோற்றுக்குள் எலியைக் கட்டி வைத்தால் என்ன செய்யும்…? அந்தச் சோறையெல்லாம் அது தின்றுவிடும்.
அது போல் அவனைத் திருடன் திருடன் என்று
சொல்லும் போதெல்லாம் நம் நல்ல குணங்களை எல்லாம் அது தின்று
கொண்டே இருக்கும். நம்முடைய செயலும் அதுவாக மாறிவிடும்.
இந்த வாழ்க்கையில் ஒருவருக்கு நோய் என்று வந்தாலும் அல்லது
தெரிந்தாலும்
1.நோய் போக வேண்டும் என்று நினைக்காதீர்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இது வளர அது போகும்.
நல்ல தண்ணீரை ஊற்றினோம் என்றால் அங்கிருக்கும்
அழுக்கு அகலத்தான் செய்யும். ஆகவே ஞானியின் உணர்வுகளை
அங்கே செலுத்தப்படும் பொழுது தீமையின் நிலைகள் அகலுகின்றது.
இந்தப் பழக்கத்திற்கு நாம் வந்து விட வேண்டும்.
ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு எப்படி ஞானத்தைப் போதித்தாரோ அதை
உங்களுக்கும் போதிக்கின்றோம்… அந்த மகரிஷிகள்
உணர்வு கலந்து.
வாழ்க்கையில் அந்த மாதிரி நேரங்களில் இதுவே நல்ல வழியைக் காட்டும். அருள்
ஞானத்தைப் பெறச் செய்யும். இருளைப் பிளக்கச் செய்யும் பொருளைக் காணச் செய்யும்.
ஒரு தவறு நடந்தது என்றால் அதில் உள்ள பொருளை நாம் காண முடியும்.
அந்த இருளைப் பிளந்து விடும். அந்த உணர்வுகளை
நாம் அறிய முடிகின்றது.
நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை இது
பிளந்து விடும்.
பொருளைக் காணும் திறன் நான் பெறுகின்றோம். வாழ்க்கையில் சிறிது காலம் இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.
காற்று மண்டலம் நச்சுத்தன்மையாக இருக்கின்றது என்று அதைப் போன்ற
நிலைகளைப் பதிவு செய்துவிட்டால் அதைச் சீக்கிரம் இழுக்கும்.
1.ஐயோ நச்சுத் தன்மையாக இருக்கின்றதே என்று
பதிவு செய்துவிட்டால்
2.அடுத்து நச்சுத்தன்மைகள் நம் உடலுக்குள் வந்து சேரும்.
அப்படி எண்ணாது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர
வேண்டும்
2.எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க
வேண்டும் என்று இதை எண்ணி இந்தக் காற்று மண்டலத்தில் பரப்புங்கள்.
நச்சுத்தன்மை என்று எண்ணினால் அந்த உணர்வை இழுக்கின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது. நம்மை அது
மாற்றுகின்றது. இது போன்ற நிலையிலிருந்து
விடுபட்டு “மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு…”
நீங்கள் வரவேண்டும்.
குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக மாற்றும் நிலைக்கே இதை யாம் உபதேசித்தது.