
அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படிப் பெற்றான்…?
ஆதியிலே அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் விஷ ஜந்துக்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பல
பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷ முறிவு வேர்களையும் அரைத்து உடலில்
பூசுகின்றார்கள்.
சந்தர்ப்பத்தால் கருவுறும் பொழுது அந்த விஷ முறிவு வேர்களின் மணங்கள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ
புண்ணியமாகச் சேர்கின்றது.
பிறந்த பின் அவனுடைய வளர்ச்சி வர வர இவனைக் கண்டாலே
மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.
அதே சமயத்தில் கடும் விஷத்தன்மை கொண்ட
தாவர இனங்களை அவன் தாய் தந்தையர் நுகரும் பொழுது அந்த அதிகமான விஷம் கலந்து உடல்
ஏற்றுக் கொள்ளாத நிலையில் மடிகின்றனர்.
1.கருவிலே வளரும் சிசுவிற்கு இந்த உணர்வின்
தன்மை கலந்த நிலைகள் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றது.
2.ஆனால் தாய் தந்தையருக்கோ… மனிதனாக
உருப்பெற்ற முழுமையான நிலைகள் விஷத்தன்மை ஆன பின் செல்கள்
குறைகின்றது… மடிகிறது.
3.அகஸ்தியனுக்கு ஐந்து வயதாகும் போது அவர்கள் இருவருமே இறந்து
விடுகின்றார்கள்.
தாய் தந்தையரை அகஸ்தியன் ஏக்கத்துடன்
எண்ணுகின்றான். அவர்களோ இப்படி ஆகிவிட்டது… குழந்தை தனித்து இருப்பானே…! என்ற எண்ணத்தில் அந்த இரண்டு ஆன்மாக்களும் இவன் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
ஏக காலத்தில் இறந்து இரண்டு ஆன்மாக்களும் பிள்ளை மீது
இருக்கும் பற்றால் காத்திடும் உணர்வு கொண்டு இங்கே வந்து
விடுகின்றது. அதன் வழி தான் அகஸ்தியன்
விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கின்றான்.
உதாரணமாக…
1.மிளகாய்த்தூளை (நெடி) சில பேய் பிடித்தவர்களுக்கு
முன் போட்டு… உற்றுப் பார்க்கச் சொல்லுங்கள்… அது தும்மாது.
2.அதே போல் விஷமான பொருள்களை நுகரச்
செய்தாலும் அதற்கு ஒன்றும் செய்யாது.
ஏனென்றால் அது விஷத்தைக் குடித்து அதனால் இறந்து இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தால் “இந்த
விஷத்தைக் காண்பித்தால்
அதற்கு ஆனந்தமாக இருக்கும்…”
இதைப் போன்று தான்
1.அகஸ்தியன் உடலில் இந்த இரு ஆன்மாக்கள் இருக்கப்படும் பொழுது தான் விண்ணின் ஆற்றலை அவன்
பருகுகின்றான்.
2.சூரியனைப் பார்க்கும்போது அங்கு
நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு டேப்பிலே பதிவு ஆவது போன்று
அவனுக்குள் பதிவாகின்றது.
அதிலிருந்து பரவும் நிலைகளையும்… அதன் தொடர் வரிசை நிலைகளில்… இந்தப் பிரஞ்சத்தையே உற்றுப்
பார்க்கும் உணர்வின் ஆற்றல் முதல் மனிதன் அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.
அதனால் தான் “அணுவின் ஆற்றலை
அறிந்தவன் அகஸ்தியன்…” என்று சொல்வது. அவன்
கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்துமே இந்தப் பூமியிலே பரவி உள்ளது
அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை
முழுமையாக அறிகின்றான்.
1.விண்ணை நோக்கி ஏகும் பொழுது நம் பூமி விண்ணிலிருந்து துருவத்தின் வழி கவரும் சக்தியைப் பூமியிலிருந்து உற்றுப் பார்க்கின்றான்.
2.அது கவரப்பட்டுப் பூமிக்குள் பரவுவதையும்
காண்கின்றான்… ஆனால் அதை இவன் நுகர்கின்றான்.
3.அதன் உணர்வை அறிவாக அறிகின்றான்… அந்த உணர்வின்
அணுக்கள் அவனிலே விளைகிறது.
அத்தகைய விண்ணின் ஆற்றல் வலுப்பெற்ற பின் அதே உணர்வுகள் இவனை
அறியாமலேயே “நஞ்சின் தன்மையைத்
தனக்குள் ஒளியாக மாறும் நிலை வருகின்றது…”
காரணம்… தாயின் கருவிலேயே நஞ்சினை தன்மை அடக்கும் தன்மை வந்ததால் அந்த உணர்வு வரப்படும் பொழுது தாய் தந்தையரே இவனுக்குக் கடவுள் ஆகின்றார்கள்.
இதன் வழி கொண்டு தான் அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்று இவன் துருவ மகரிஷியாகின்றான்.
விண்ணின் ஆற்றலைப் பெற்று… இந்த உயிரான்மா அது வலுப் பெற்ற பின் அங்கே
போகின்றது.
அகஸ்தியன் தாய்
தந்தையரோ குழந்தை மீது பாசமாக வரும் பொழுது குழந்தையின் உடலுக்குள்
வருகின்றது.
1.பின் இவன் விண்ணுக்குச் செல்லப்படும்
பொழுது தன் தாய் தந்தையை விண்ணுக்கே அழைத்துச் செல்கின்றான்.
2.இது இயற்கையின் இயக்கம் என்று குருநாதர்
காட்டினார்.
ஆகவே… மனிதர்களாக இருக்கும் நாம் இப்பொழுது எதைச் செய்ய வேண்டும்…? என்பது தான் முக்கியம்.
பக்தி கொண்டு நல்லவர்களாக இருப்பினும் பிறருடைய கஷ்டங்களை
அதிகமாகக் கேட்டுணர்ந்தால் நம் நல்லது
மறைகின்றது. கஷ்டம் அதிகமாக வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் மாற்றமாகின்றது.
இப்படி… சந்தர்ப்பத்தால் தீமைகள் நம் உடலுக்குள்
புகுந்து அது விளைந்து நோயாக எப்படி மாறுகின்றதோ இதைப்
போன்று ஒரு அழுக்குத் தண்ணீரில் நன்னீரை விடும் பொழுது
அழுக்கு நீர் குறைகின்றது.
பல காலம் நம் வாழ்க்கையில் பலருடைய கஷ்டங்களைக் கேட்டு வந்த
நாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை
அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் அந்தத் தீமை சிறுகச் சிறுகக் குறையும்.
2.பின் அது வலுப்பெற தீமையை நீக்கிடும்
ஆற்றலே நமக்குள் பெருகுகின்றது.
வராகன் சாக்கடையைப் பிளந்து தன் வாழ்க்கையில் நல்லதை நுகர்ந்து நுகர்ந்து… தீமையைப்
பிளந்திடும் உடலாக மனிதனாக வளர்ச்சி பெற்றது.
இதைப் போல… தீமைகளைப் பிளந்த அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அதை எல்லையாக வைத்து அங்கே துருவ
நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அதனைப்
பின்பற்றியவர்கள் அதன் ஈர்ப்பு வட்டத்தில்
சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.
அதனைப் பின்பற்றினால் அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நாமும் செல்கின்றோம்.
உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
ஏனென்றால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலிலே நீடித்த
நாள் நாம் இருக்கப் போவதில்லை. ஆகவே… எது
நிலையானது…? அந்த மகரிஷிகளின் அருள் ஒளி தான்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எப்படியும் பெற வேண்டும். அவர்களைப் பின்பற்றி நீங்கள் செல்ல
வேண்டும்.
காரணம்…
1.வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படியெல்லாம் மாற்றுகின்றது…?
2.உயர்ந்த நிலைகள் பெறுவதை எப்படி அது மாற்றியமைக்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் அந்த அருள் வழியில் என்றும் வாழ
வேண்டும் என்பதற்கே தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.